சிதம்பரத்தில் உள்ள நடராசர் ஆலயம் என்று எழுப்பப்பட்டது என்பதற்கு சரியான ஆதாரம் எதுவும் இல்லை. பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் இந்துக் கடவுளான சிவபெருமானைப் பற்றி பாடப்பெற்றுள்ளது. ஆனால் சோழ மன்னர்கள் பலர், இந்த ஆலயத்தின் மேம்படுத்துதலுக்கு மிகவும் உதவி புரிந்ததாக, இங்குள்ள ஆலயத்தில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும், பொற்கூரையினாலும் நாம் அறிந்துகொள்ள முடியும். சோழர்களுக்குப்பின் பாண்டிய மன்னர்களும், கிருஷ்ண தேவராயரும் உதவிகள் பலபுரிந்ததாகவும் கல்வெட்டுகளில் உள்ளது.