HolyIndia.Org

திருவொற்றியூர், சென்னை ஆலய தேவாரம்

திருவொற்றியூர், சென்னை ஆலயம்
3-57-3405:
விடையவன் விண்ணுமண்ணுந் தொழநின்றவன் வெண்மழுவாட் 
படையவன் பாய்புலித்தோல் உடைகோவணம் பல்கரந்தைச் 
சடையவன் சாமவேதன் சசிதங்கிய சங்கவெண்தோ 
டுடையவன் ஊனமில்லி யுறையும்மிடம் ஒற்றிய[ரே. 

3-57-3406:
பாரிடம் பாணிசெய்யப் பறைக்கட்செறு பல்கணப்பேய் 
சீரொடும் பாடலாடல் இலயஞ்சிதை யாதகொள்கைத் 
தாரிடும் போர்விடையன் தலைவன்றலை யேகலனா 
ஊரிடும் பிச்சைகொள்வான் உறையும்மிடம் ஒற்றிய[ரே. 

3-57-3407:
விளிதரு நீருமண்ணும் விசும்போடனல் காலுமாகி 
அளிதரு பேரருளான் அரனாகிய ஆதிமூர்த்தி 
களிதரு வண்டுபண்செய் கமழ்கொன்றையி னோடணிந்த 
ஒளிதரு வெண்பிறையான் உறையும்மிடம் ஒற்றிய[ரே. 

3-57-3408:
அரவமே கச்சதாக அசைத்தானலர்க் கொன்றையந்தார் 
விரவிவெண் ணூல்கிடந்த விரையார்வரை மார்பன்எந்தை 
பரவுவார் பாவமெல்லாம் பறைத்துப்படர் புன்சடைமேல் 
உரவுநீ ரேற்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றிய[ரே. 

3-57-3409:
விலகினார் வெய்யபாவம் விதியாலருள் செய்துநல்ல 
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே 
அலகினால் வீசிநீர்கொண் டடிமேல்அல ரிட்டுமுட்டா 
துலகினா ரேத்தநின்றான் உறையும்மிடம் ஒற்றிய[ரே. 

3-57-3410:
கமையொடு நின்றசீரான் கழலுஞ்சிலம் பும்ஒலிப்பச் 
சுமையொடு மேலும்வைத்தான் விரிகொன்றையுஞ் சோமனையும் 
அமையொடு நீண்டதிண்டோ ள் அழகாயபொற் றோடிலங்க 
உமையொடுங் கூடிநின்றான் உறையும்மிடம் ஒற்றிய[ரே. 

3-57-3411:
நன்றியால் வாழ்வதுள்ளம் உலகுக்கொரு நன்மையாலே 
கன்றினார் மும்மதிலுங் கருமால்வரை யேசிலையாப் 
பொன்றினார் வார்சுடலைப் பொடிநீறணிந் தாரழல்அம் 
பொன்றினால் எய்தபெம்மான் உறையும்மிடம் ஒற்றிய[ரே. 

3-57-3412:
பெற்றியாற் பித்தனொப்பான் பெருமான்கரு மானுரிதோல் 
சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க்கண்ணுதல் மேல்விளங்கத் 
தெற்றியாற் செற்றரக்கன் னுடலைச்செழு மால்வரைக்கீழ் 
ஒற்றியான் முற்றுமாள்வான் உறையும்மிடம் ஒற்றிய[ரே. 

3-57-3413:
திருவினார் போதினானுந் திருமாலுமோர் தெய்வமுன்னித் 
தெரிவினாற் காணமாட்டார் திகழ்சேவடி சிந்தைசெய்து 
பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ 
டொருவனாய் நின்றபெம்மான் உறையும்மிடம் ஒற்றிய[ரே. 

3-57-3414:
தோகையம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள் போர்த்துழல்வார் 
ஆகம செல்வனாரை அலர்தூற்றுதல் காரணமாக் 
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக்கொள்ளன்மின் ஏழுலகும் 
ஓகைதந் தாளவல்லான் உறையும்மிடம் ஒற்றிய[ரே. 

3-57-3415:
ஒண்பிறை மல்குசென்னி இறைவன்னுறை யொற்றிய[ரைச் 
சண்பையர் தந்தலைவன் தமிழ்ஞானசம் பந்தன்சொன்ன 
பண்புனை பாடல்பத்தும் பரவிப்பணிந் தேத்தவல்லார் 
விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடெளிதே. 

4-45-4602:
வெள்ளத்தைச் சடையில் வைத்த 
வேதகீ தன்றன் பாதம் 
மௌ;ளத்தான் அடைய வேண்டின் 
மெய்தரு ஞானத் தீயாற் 
கள்ளத்தைக் கழிய நின்றார் 
காயத்துக் கலந்து நின்று 
உள்ளத்துள் ஒளியு மாகும் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-45-4603:
வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா 
வானவர் இறைவன் நின்று 
புசிப்பதோர் பொள்ள லாக்கை 
யதனொடும் புணர்வு வேண்டில் 
அசிர்ப்பெனும் அருந்த வத்தால் 
ஆன்மாவி னிடம தாகி 
உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-45-4604:
தானத்தைச் செய்து வாழ்வான் 
சலத்துளே அழுந்து கின்றீர் 
வானத்தை வணங்க வேண்டில் 
வம்மின்கள் வல்லீ ராகில் 
ஞானத்தை விளக்கை ஏற்றி 
நாடியுள் விரவ வல்லார் 
ஊனத்தை ஒழிப்பர் போலும் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-45-4605:
காமத்துள் அழுந்தி நின்று 
கண்டரால் ஒறுப்புண் ணாதே 
சாமத்து வேத மாகி 
நின்றதோர் சயம்பு தன்னை 
ஏமத்தும் இடையி ராவும் 
ஏகாந்தம் இயம்பு வார்க்கு 
ஓமத்துள் ஒளிய தாகும் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-45-4606:
சமையமே லாறு மாகித் 
தானொரு சயம்பு வாகி 
இமையவர் பரவி யேத்த 
இனிதினங் கிருந்த ஈசன் 
கமையினை யுடைய ராகிக் 
கழலடி பரவு வார்க்கு 
உமையொரு பாகர் போலும் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-45-4607:
ஒருத்திதன் றலைச்சென் றாளைக் 
கரந்திட்டான் உலக மேத்த 
ஒருத்திக்கு நல்ல னாகி 
மறுப்படுத் தொளித்து மீண்டே 
ஒருத்தியைப் பாகம் வைத்தான் 
உணர்வினால் ஐயம் உண்ணி 
ஒருத்திக்கு நல்ல னல்லன் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-45-4608:
பிணமுடை உடலுக் காகப் 
பித்தராய்த் திரிந்து நீங்கள் 
புணர்வெனும் போகம் வேண்டா 
போக்கலாம் பொய்யை நீங்க 
நிணமுடை நெஞ்சி னுள்ளால் 
நினைக்குமா நினைக்கின் றார்க்கு 
உணர்வினோ டிருப்பர் போலும் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-45-4609:
பின்னுவார் சடையான் தன்னைப் 
பிதற்றிலாப் பேதை மார்கள் 
துன்னுவார் நரகந் தன்னுள் 
தொல்வினை தீர வேண்டின் 
மன்னுவான் மறைக ளோதி 
மனத்தினுள் விளக்கொன் றேற்றி 
உன்னுவார் உள்ளத் துள்ளார் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-45-4610:
முள்குவார் போகம் வேண்டின் 
முயற்றியா லிடர்கள் வந்தால் 
எள்குவார் எள்கி நின்றங் 
கிதுவொரு மாய மென்பார் 
பள்குவார் பத்த ராகிப் 
பாடியு மாடி நின்று 
உள்குவார் உள்ளத் துள்ளார் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-45-4611:
வெறுத்துகப் புலன்க ளைந்தும் 
வேண்டிற்று வேண்டு நெஞ்சே 
மறுத்துக ஆர்வச் செற்றக் 
குரோதங்க ளான மாயப் 
பொறுத்துகப் புட்ப கத்தேர் 
உடையானை அடர வு[ன்றி 
ஒறுத்துகந் தருள்கள் செய்தார் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-46-4612:
ஓம்பினேன் கூட்டை வாளா 
உள்ளத்தோர் கொடுமை வைத்துக் 
காம்பிலா மூழை போலக் 
கருதிற்றே முகக்க மாட்டேன் 
பாம்பின்வாய்த் தேரை போலப் 
பலபல நினைக்கின் றேனை 
ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் 
ஒற்றிய[ ருடைய கோவே. 

4-46-4613:
மனமெனுந் தோணி பற்றி 
மதியெனுங் கோலை ய[ன்றிச் 
சினமெனுஞ் சரக்கை யேற்றிச் 
செறிகட லோடும் போது 
மதனெனும் பாறை தாக்கி 
மறியும்போ தறிய வொண்ணா 
துனையுனும் உணர்வை நல்காய் 
ஒற்றிய[ ருடய கோவே. 

4-86-4980:
செற்றுக் களிற்றுரி கொள்கின்ற 
ஞான்று செருவெண்கொம்பொன் 
றிற்றுக் கிடந்தது போலும் 
இளம்பிறை பாம்பதனைச் 
சுற்றிக் கிடந்தது கிம்புரி 
போலச் சுடரிமைக்கும் 
நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்குமா 
லொற்றி ய[ரனுக்கே. 

4-86-4981:
சொல்லக் கருதிய தொன்றுண்டு 
கேட்கிற் றொண்டாயடைந்தார் 
அல்லற் படக்கண்டு பின்னென் 
கொடுத்தி அலைகொள்முந்நீர் 
மல்லற் றிரைச்சங்க நித்திலங் 
கொண்டுவம் பக்கரைக்கே 
ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி 
ய[ருறை யுத்தமனே. 

4-86-4982:
பரவை வருதிரை நீர்க்கங்கை 
பாய்ந்துக்க பல்சடைமேல் 
அரவ மணிதரு கொன்றை 
இளந்திங்கட் சூடியதோர் 
குரவ நறுமலர் கோங்க 
மணிந்து குலாய சென்னி 
உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி 
ய[ருறை யுத்தமனே. 

4-86-4983:
தானகங் காடரங் காக 
வுடையது தன்னடைந்தார் 
ஊனக நாறு முடைதலை 
யிற்பலி கொள்வதுந்தான் 
தேனக நாறுந் திருவொற்றி 
ய[ருறை வாரவர்தாந் 
தானக மேவந்து போனகம் 
வேண்டி உழிதர்வரே. 

4-86-4984:
வேலைக் கடல்நஞ்ச முண்டுவெள் 
ளேற்றொடும் வீற்றிருந்த 
மாலைச் சடையார்க் குறைவிட 
மாவது வாரிகுன்றா 
ஆலைக் கரும்பொடு செந்நெற் 
கழனி அருகணைந்த 
சோலைத் திருவொற்றி ய[ரையெப் 
போதுந் தொழுமின்களே. 

4-86-4985:
புற்றினில் வாழும் அரவுக்குந் 
திங்கட்குங் கங்கையென்னுஞ் 
சிற்றிடை யாட்குஞ் செறிதரு 
கண்ணிக்குஞ் சேர்விடமாம் 
பெற்றுடை யான்பெரும் பேச்சுடை 
யான்பிரி யாதெனையாள் 
விற்றுடை யானொற்றி ய[ருடை 
யான்றன் விரிசடையே. 

4-86-4986:
இன்றரைக் கண்ணுடை யாரெங்கு 
மில்லை இமய மென்னுங் 
குன்றரைக் கண்ணன் குலமகட் 
பாவைக்குக் கூறிட்டநாள் 
அன்றரைக் கண்ணுங் கொடுத்துமை 
யாளையும் பாகம்வைத்த 
ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி 
ய[ருறை உத்தமனே. 

4-86-4987:
சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் 
காவுந் துதைந்திலங்கு 
பெற்றிகண் டால்மற்று யாவருங் 
கொள்வர் பிறரிடைநீ 
ஒற்றிகொண் டாயொற்றி ய[ரையுங் 
கைவிட் டுறுமென்றெண்ணி 
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப 
தில்லிடம் வேதியனே. 

4-86-4988:
சுற்றிக் கிடந்தொற்றி ய[ரனென் 
சிந்தை பிரிவறியான் 
ஒற்றித் திரிதந்து நீயென்ன 
செய்தி உலகமெல்லாம் 
பற்றித் திரிதந்து பல்லொடு 
நாமென்று கண்குழித்துத் 
தெற்றித் திருப்பதல் லாலென்ன 
செய்யுமித் தீவினையே. 

4-86-4989:
அங்கட் கடுக்கைக்கு முல்லைப் 
புறவம் முறுவல்செய்யும் 
பைங்கட் டலைக்குச் சுடலைக் 
களரி பருமணிசேர் 
கங்கைக்கு வேலை அரவுக்குப் 
புற்று கலைநிரம்பாத் 
திங்கட்கு வானந் திருவொற்றி 
ய[ரர் திருமுடியே. 

4-86-4990:
தருக்கின வாளரக் கன்முடி 
பத்திறப் பாதந்தன்னால் 
ஒருக்கின வாறடி யேனைப் 
பிறப்பறுத் தாளவல்லான் 
நெருக்கின வானவர் தானவர் 
கூடிக் கடைந்தநஞ்சைப் 
பருக்கின வாறென்செய் கேனொற்றி 
ய[ருறை பண்டங்கனே. 

5-24-5464:
ஒற்றி ய[ரும் ஒளிமதி பாம்பினை
ஒற்றி ய[ருமப் பாம்பும் அதனையே
ஒற்றி ய[ர வொருசடை வைத்தவன்
ஒற்றி ய[ர்தொழ நம்வினை ஓயுமே. 

5-24-5465:
வாட்ட மொன்றுரைக் கும்மலை யான்மகள்
ஈட்ட வேயிரு ளாடி இடுபிணக்
காட்டி லோரி கடிக்க எடுத்ததோர்
ஓட்டை வெண்டலைக் கையொற்றி ய[ரரே. 

5-24-5466:
கூற்றுத் தண்டத்தை அஞ்சிக் குறிக்கொண்மின்
ஆற்றுத் தண்டத் தடக்கு மரனடி
நீற்றுத் தண்டத்த ராய்நினை வார்க்கெலாம்
ஊற்றுத் தண்டொப்பர் போலொற்றி ய[ரரே. 

5-24-5467:
சுற்றும் பேய்சுழ லச்சுடு காட்டெரி
பற்றி யாடுவர் பாய்புலித் தோலினர்
மற்றை ய[ர்களெல் லாம்பலி தேர்ந்துபோய்
ஒற்றி ய[ர்புக் குறையும் ஒருவரே. 

5-24-5468:
புற்றில் வாளர வாட்டி உமையொடு
பெற்ற மேறுகந் தேறும் பெருமையான்
மற்றை யாரொடு வானவ ருந்தொழ
ஒற்றி ய[ருறை வானோர் கபாலியே. 

5-24-5469:
போது தாழ்ந்து புதுமலர் கொண்டுநீர்
மாது தாழ்சடை வைத்த மணாளனார்
ஓது வேதிய னார்திரு வொற்றிய[ர்
பாத மேத்தப் பறையுநம் பாவமே. 

5-24-5470:
பலவும் அன்னங்கள் பன்மலர் மேற்றுஞ்சுங்
கலவ மஞ்ஞைகள் காரென வெள்குறும்
உலவு பைம்பொழில் சூழ்திரு ஒற்றிய[ர்
நிலவி னானடி யேயடை நெஞ்சமே. 

5-24-5471:
ஒன்று போலும் உகந்தவ ரேறிற்று
ஒன்று போலும் உதைத்துக் களைந்தது
ஒன்று போலொளி மாமதி சூடிற்று
ஒன்று போலுகந் தாரொற்றி ய[ரரே. 

5-24-5472:
படைகொள் பூதத்தர் வேதத்தர் கீதத்தர்
சடைகொள் வெள்ளத்தர் சாந்தவெண் ணீற்றினர்
உடையுந் தோலுகந் தாருறை யொற்றிய[ர்
அடையு முள்ளத் தவர்வினை யல்குமே. 

5-24-5473:
வரையி னாருயர் தோலுடை மன்னனை
வரையி னால்வலி செற்றவர் வாழ்விடந்
திரையி னார்புடை சூழ்திரு வொற்றிய[ர்
உரையி னாற்பொலிந் தாருயர்ந் தார்களே. 

6-45-6691:
வண்டோங்கு செங்கமலக் கழுநீர் மல்கு மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித் திண்டோள்க ளாயிரமும் வீசி நின்று திசைசேர நடமாடிச் சிவலோ கனார் உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி ஒற்றிய[ர் மேய ஒளிவண் ணனார் கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன் கடும்பிணியுஞ் சுடுதொழிலுங் கைவிட் டவே. 

6-45-6692:
ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி அணிகங்கைச் செஞ்சடைமே லார்க்கச் சூடிப் பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவார் பசுவேறி உழிதருமெம் பரம யோகி காமத்தால் ஐங்கணையான் றன்னை வீழக் கனலா எரிவிழித்த கண்மூன் றினார் ஓமத்தால் நான்மறைக ளோத லோவா ஒளிதிகழு மொற்றிய[ர் உறைகின் றாரே. 

6-45-6693:
வெள்ளத்தைச் செஞ்சடைமேல் விரும்பி வைத்தீர் வெண்மதியும் பாம்பு முடனே வைத்தீர் கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்குப் பொல்லாது கண்டீர் எல்லே கொள்ளத்தான் இசைபாடிப் பலியுங் கொள்ளீர் கோளரவுங் குளிர்மதியுங் கொடியுங் காட்டி உள்ளத்தை நீர்கொண்டீர் ஓத லோவா ஒளிதிகழு மொற்றிய[ ருடைய கோவே. 

6-45-6694:
நரையார்ந்த விடையேறி நீறுபூசி நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட எம்மடிக ளும்மூர்தா னேதோ வென்ன விரையாதே கேட்டியேல் வேற்க ணல்லாய் விடுங்கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றுந் திரைமோதக் கரையேறிச் சங்க மூருந் திருவொற்றி ய[ரென்றார் தீய வாறே. 

6-45-6695:
மத்தமா களியானை யுரிவை போர்த்து வானகத்தார் தானகத்தா ராகி நின்று பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப் பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு பத்தர்கள்தம் பலருடனே கூடிப் பாடிப் பயின்றிருக்கு மூரேதோ பணியீ ரென்ன ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக ஒளிதிகழு மொற்றிய[ர் என்கின் றாரே. 

6-45-6696:
கடிய விடையேறிக் காள கண்டர் கலையோடு மழுவாளோர் கையி லேந்தி இடிய பலிகொள்ளார் போவா ரல்லர் எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயிலாப் புள்ளே செடிபடு வெண்டலையொன் றேந்தி வந்து திருவொற்றி ய[ர்புக்கார் தீய வாறே. 

6-45-6697:
வல்லராய் வானவர்க ளெல்லாங் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார் எல்லையெம் பெருமானைக் காணோ மென்ன எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார் நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாமிருக்கு மூர்பணியீர் அடிகே ளென்ன ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும் ஒளிதிகழு மொற்றிய[ர் என்கின் றாரே. 

6-45-6698:
நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய் நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக் கலந்து பலியிடுவேன் எங்குங் காணேன் சலப்பாடே இனியொருநாள் காண்பே னாகிற் தன்னாகத் தென்னாக மொடுங்கும் வண்ணம் உலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன் ஒற்றிய[ ருறைந்திங்கே திரிவா னையே. 

6-45-6699:
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை மலையல்லை கடலல்லை வாயு வல்லை எண்ணல்லை எழுத்தல்லை எரியு மல்லை இரவல்லை பகலல்லை யாவு மல்லை பெண்ணல்லை ஆணல்லை பேடு மல்லை பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை உணர்வரிய ஒற்றிய[ ருடைய கோவே. 

6-45-6700:
மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச் செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத் திருவடியின் விரலொன்றால் அலற வு[ன்றி உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண ஓங்கினவவ் வொள்ளழலார் இங்கே வந்து திருவொற்றி ய[ர்நம்மூ ரென்று போனார் செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே. 

7-54-7774:
அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன் 
 அதுவும் நான்படப் பாலதொன் றானாற் 
பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் 
 பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன் 
வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் 
 மற்று நான்அறி யேன்மறு மாற்றம் 
ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய் 
 ஒற்றி ய[ரெனும் ஊருறை வானே. 

7-54-7775:
கட்ட னேன்பிறந் தேன்உனக் காளாய் காதற் சங்கிலி காரண மாக 
எட்டி னாற்றிக ழுந்திரு மூர்த்தி என்செய் வான்அடி யேன்எடுத் துரைக்கேன் 
பெட்ட னாகிலுந் திருவடிப் பிழையேன் பிழைப்ப னாகிலுந் திருவடிக் கடிமை 
ஒட்டி னேன்எனை நீசெய்வ தெல்லாம் ஒற்றி ய[ரெனும் ஊருறை வானே. 

7-54-7776:
கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே கட்டி யேபலர்க் குங்களை கண்ணே 
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன் 
சங்கும் இப்பியுஞ் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி 
ஒங்கு மாகடல் ஓதம்வந் துலவும் ஒற்றி ய[ரெனும் ஊருறை வானே. 

7-54-7777:
ஈன்று கொண்டதோர் சுற்றமொன் றன்றா 
 லியாவ ராகிலென் அன்புடை யார்கள் 
தோன்ற நின்றருள் செய்தளித் திட்டாற் 
 சொல்லு வாரைஅல் லாதன சொல்லாய் 
மூன்று கண்ணுடை யாய்அடி யேன்கண் 
 கொள்வ தேகணக் குவழக் காகில் 
ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய் 
 ஒற்றி ய[ரெனும் ஊருறை வானே. 

7-54-7778:
வழித்த லைப்படு வான்முயல் கின்றேன் உன்னைப் போல்என்னைப் பாவிக்க மாட்டேன் 
சுழித்த லைப்பட்ட நீரது போலச் சுழல்கின் றேன்சுழல் கின்றதென் னுள்ளங் 
கழித்த லைப்பட்ட நாயது போல ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை 
ஒழித்து நீயரு ளாயின செய்யாய் ஒற்றி ய[ரெனும் ஊருறை வானே. 

7-54-7779:
மானை நோக்கியர் கண்வலைப் பட்டு 
 வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித் 
தேனை ஆடிய கொன்றையி னாய்உன் 
 சீல முங்குண முஞ்சிந்தி யாதே 
நானும் இத்தனை வேண்டுவ தடியேன் 
 உயிரொ டும்நர கத்தழுந் தாமை 
ஊனம் உள்ளன தீர்த்தருள் செய்யாய் 
 ஒற்றி ய[ரெனும் ஊருறை வானே. 

7-54-7780:
மற்றுத் தேவரை நினைந்துனை மறவேன் எஞ்சி னாரொடு வாழவும் மாட்டேன் 
பெற்றி ருந்து பெறாதொழி கின்ற பேதை யேன்பிழைத் திட்டதை அறியேன் 
முற்றும் நீஎனை முனிந்திட அடியேன் கடவ தென்னுனை நான்மற வேனேல் 
உற்ற நோயுறு பிணிதவிர்த் தருளாய் ஒற்றி ய[ரெனும் ஊருறை வானே. 

7-54-7781:
கூடினாய் மலை மங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம்உடை யாளைச் 
சூடி னாயென்று சொல்லிய புக்கால் தொழும்ப னேனுக்குஞ் சொல்லலு மாமே 
வாடி நீயிருந் தென்செய்தி மனனே வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சி 
ஊடி னாலினி ஆவதொன் றுண்டே ஒற்றி ய[ரெனும் ஊருறை வானே. 

7-54-7782:
மகத்திற் புக்கதோர் சனிஎனக் கானாய் மைந்த னேமணி யேமண வாளா 
அகத்திற் பெண்டுகள் நானொன்று சொன்னால் அழையேற் போகுரு டாஎனத் தரியேன் 
முகத்திற் கண்ணிழந் தெங்ஙனம் வாழ்கேன் முக்க ணாமுறை யோமறை யோதீ 
உகைக்குந் தண்கடல் ஓதம்வந் துலவும் ஒற்றி ய[ரெனும் ஊருறை வானே. 

7-54-7783:
ஓதம் வந்துல வுங்கரை தன்மேல் ஒற்றி ய[ருறை செல்வனை நாளும் 
ஞாலந் தான்பர வப்படு கின்ற நான்ம றையங்கம் ஓதிய நாவன் 
சீலந் தான்பெரி தும்மிக வல்ல சிறுவன் வன்றொண்டன் ஊரன் உரைத்த 
பாடல் பத்திவை வல்லவர் தாம்போய்ப் பரகதி திண்ணம் நண்ணுவர் தாமே. 

7-91-8147:
பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே
ஓட்டுந் திரைவாய் ஒற்றி ய[ரே. 

7-91-8148:
பந்துங் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செந்தீ வண்ணர்
எந்தம் அடிகள் இறைவர்க் கிடம்போல்
உந்துந் திரைவாய் ஒற்றி ய[ரே. 

7-91-8149:
பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி ய[ரே. 

7-91-8150:
என்ன தெழிலும் நிறையுங் கவர்வான்
புன்னை மலரும் புறவிற் றிகழுந்
தன்னை முன்னம் நினைக்கத் தருவான்
உன்னப் படுவான் ஒற்றி ய[ரே. 

7-91-8151:
பணங்கொள் அரவம் பற்றிப் பரமன்
கணங்கள் சூழக் கபாலம் ஏந்தி
வணங்கும் இடைமென் மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றி ய[ரே. 

7-91-8152:
படையார் மழுவன் பால்வெண் ணீற்றன்
விடையார் கொடியன் வேத நாவன்
அடையார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றி ய[ரே. 

7-91-8153:
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்று நல்ல நாதன் நரையே
றொன்றை உடையான் ஒற்றி ய[ரே. 

7-91-8154:
கலவ மயில்போல் வளைக்கை நல்லார்
பலரும் பரவும் பவளப் படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவுந் திரைவாய் ஒற்றி ய[ரே. 

7-91-8155:
பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி ய[ரே. 

7-91-8156:
ஒற்றி ய[ரும் அரவும் பிறையும்
பற்றி ய[ரும் பவளச் சடையான்
ஒற்றி ய[ர்மேல் ஊரன் உரைத்த
கற்றுப் பாடக் கழியும் வினையே.