HolyIndia.Org

திருஊறல் (தக்கோலம்) ஆலய தேவாரம்

திருஊறல் (தக்கோலம்) ஆலயம்
1-106-1143:
மாறில் அவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று 
நீறெழ எய்தவெங்கள் நிமலன் இடம்வினவில் 
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த 
ஊறல் அமர்ந்தபிரான் ஒலியார்கழல் உள்குதுமே. 

1-106-1144:
மத்த மதக்கரியை மலையான்மகள் அஞ்சவன்று கையால் 
மெத்த உரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம் 
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலம்நாளுந் நயனம் 
ஒத்தல ருங்கழனித் திருவு[றலை உள்குதுமே. 

1-106-1145:
ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டழகார் நன்றுங் 
கானமர் மான்மறிக் கைக்கடவுள் கருதுமிடம் 
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை 
ஊனம் அறுத்தபிரான் திருவு[றலை உள்குதுமே. 

1-106-1146:
நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மனலும் அன்று 
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவின் 
மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை 
உய்யும் வகைபுரிந்தான் திருவு[றலை உள்குதுமே. 

1-106-1147:
எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு 
சண்டி தொழவளித்தான் அவன்றாழும் இடம்வினவில் 
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்சூழ்ந்து நஞ்சை 
உண்டபி ரானமருந் திருவு[றலை உள்குதுமே. 

1-106-1148:
(மூ) இப்பதிகத்தில் 6,7-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 

1-106-1149:
கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி 
மறுக்குறும் மாணிக்கருள மகிழ்ந்தானிடம் வினவில் 
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும் மெய்யுந்நெரிய அன்று 
ஒறுத்தருள் செய்தபிரான் திருவு[றலை உள்குதுமே. 

1-106-1150:
நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று 
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில் 
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம் 
ஊரும் அரவசைத்தான் திருவு[றலை உள்குதுமே. 

1-106-1151:
பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர் 
என்னும் இவர்க்கருளா ஈசன் இடம்வினவில் 
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை 
உன்னவினை கெடுப்பான் திருவு[றலை உள்குதுமே.