திருஅவளிவநல்லூர் ஆலய தேவாரம்
திருஅவளிவநல்லூர் ஆலயம்3-82-3679:
கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நுலொடு குலாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
3-82-3680:
ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை
ஈமம்எரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித்
தூய்மையுடை அக்கொடர வம்விரவி மிக்கொளி துளங்க
ஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ தவளிவண லூரே.
3-82-3681:
நீறுடைய மார்பில்இம வான்மகளோர் பாகம்நிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம்
ஏறுடைய ரேனுமிடு காடிரவில் நின்றுநட மாடும்
ஆறுடைய வார்சடையி னான்உறைவ தவளிவண லூரே.
3-82-3682:
பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலர் என்றுலகு பேணிப்
பணியும்அடி யார்களன பாவம்அற இன்னருள் பயந்து
துணியுடைய தோலுமுடை கோவணமும் நாகமுடல் தொங்க
அணியுமழ காகவுடை யானுறைவ தவளிவண லூரே.
3-82-3683:
குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு ளென்றமரர் கூடித்
தொழலும்வழி பாடுமுடை யார்துயரு நோயுமில ராவர்
அழலுமழு ஏந்துகையி னானுறைவ தவளிவண லூரே.
3-82-3684:
துஞ்சலில ராயமரர் நின்றுதொழு தேத்தஅருள் செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயஎளி தாகியொரு நம்பன்
மஞ்சுற நிமிர்ந்துமை நடுங்கஅக லத்தொடு வளாவி
அஞ்சமத வேழவுரி யானுறைவ தவளிவண லூரே.
3-82-3685:
கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செய்யப்
பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடுங்
காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி
ஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
3-82-3686:
ஒருவரையும் மேல்வலிகொ டேனென எழுந்தவிற லோன்இப்
பெருவரையின் மேலோர்பெரு மானுமுள னோவென வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல் கைகளுடை யோனை
அருவரையி லூன்றியடர்த் தானுறைவ தவளிவண லூரே.
3-82-3687:
பொறிவரிய நாகமுயர் பொங்கணைய ணைந்தபுக ழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல்விழுமி யோனுஞ்
செறிவரிய தோற்றமொடு ஆற்றல்மிக நின்றுசிறி தேயும்
அறிவரிய னாயபெரு மானுறைவ தவளிவண லூரே.
3-82-3688:
கழியருகு பள்ளியிட மாகவடு மீன்கள்கவர் வாரும்
வழியருகு சாரவெயில் நின்றடிசி லுள்கிவரு வாரும்
பழியருகி னாரொழிக பான்மையொடு நின்றுதொழு தேத்தும்
அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
3-82-3689:
ஆனமொழி யானதிற லோர்பரவும் அவளிவண லூர்மேல்
போனமொழி நன்மொழிக ளாயபுகழ் தோணிபுர வு[ரன்
ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்துயர்கள் தீயதிலர் தாமே.
4-59-4726:
தோற்றினான் எயிறு கவ்வித்
தொழிலுடை யரக்கன் றன்னைத்
தேற்றுவான் சென்று சொல்லச்
சிக்கெனத் தவிரு மென்று
வீற்றினை யுடைய னாகி
வெடுவெடுத் தெழுந்த வன்றன்
ஆற்றலை அழிக்க வல்லார்
அவளிவ ணல்லூ ராரே.
4-59-4727:
வெம்பினா ரரக்க ரெல்லாம்
மிகச்சழக் காயிற் றென்று
செம்பினா லெடுத்த கோயில்
சிக்கெனச் சிதையு மென்ன
நம்பினா ரென்று சொல்லி
நன்மையான் மிக்கு நோக்கி
அம்பினால் அழிய வெய்தார்
அவளிவ ணல்லூ ராரே.
4-59-4728:
கீழ்ப்படக் கருத லாமோ
கீர்த்திமை யுள்ள தாகிற்
தோட்பெரு வலியி னாலே
தொலைப்பன்யான் மலையை யென்று
வேட்பட வைத்த வாறே
விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து
ஆட்படக் கருதிப் புக்கார்
அவளிவ ணல்லூ ராரே.
4-59-4729:
நிலைவலம் வல்ல னல்லன்
நேர்மையை நினைய மாட்டான்
சிலைவலங் கொண்ட செல்வன்
சீரிய கயிலை தன்னைத்
தலைவலங் கருதிப் புக்குத்
தாக்கினான் தன்னை யன்று
அலைகுலை யாக்கு வித்தார்
அவளிவ ணல்லூ ராரே.
4-59-4730:
தவ்வலி யொன்ற னாகித்
தனதொரு பெருமை யாலே
மெய்வ்வலி யுடைய னென்று
மிகப்பெருந் தேரை ய[ர்ந்து
செவ்வலி கூர்வி ழியாற்
சிரமத்தான் எடுக்குற் றானை
அவ்வலி தீர்க்க வல்லார்
அவளிவ ணல்லூ ராரே.
4-59-4731:
நன்மைதான் அறிய மாட்டான்
நடுவிலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று
வலிதனைச் செலுத்த லுற்றுக்
கன்மையான் மலையை யோடிக்
கருதித்தான் எடுத்து வாயால்
அம்மையோ வென்ன வைத்தார்
அவளிவ ணல்லூ ராரே.
4-59-4732:
கதம்படப் போது வார்கள்
போதுமக் கருத்தி னாலே
சிதம்பட நின்ற நீர்கள்
சிக்கெனத் தவிரு மென்று
மதம்படு மனத்த னாகி
வன்மையான் மிக்கு நோக்க
அதம்பழத் துருவு செய்தார்
அவளிவ ணல்லூ ராரே.
4-59-4733:
நாடுமிக் குழிதர் கின்ற
நடுவிலா அரக்கர் கோனை
ஓடுமிக் கென்று சொல்லி
ஊன்றினான் உகிரி னாலே
பாடுமிக் குய்வ னென்று
பணியநற் றிறங்கள் காட்டி
ஆடுமிக் கரவம் பூண்டார்
அவளிவ ணல்லூ ராரே.
4-59-4734:
ஏனமா யிடந்த மாலும்
எழில்தரு முளரி யானும்
ஞானந்தா னுடைய ராகி
நன்மையை அறிய மாட்டார்
சேனந்தான் இலாவ ரக்கன்
செழுவரை எடுக்க வு[ன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்
அவளிவ ணல்லூ ராரே.
4-59-4735:
ஊக்கினான் மலையை யோடி
உணர்விலா அரக்கன் றன்னைத்
தாக்கினான் விரலி னாலே
தலைபத்துந் தகர வு[ன்றி
நோக்கினான் அஞ்சத் தன்னை
நோன்பிற வு[ன்று சொல்லி
ஆக்கினார் அமுத மாக
அவளிவ ணல்லூ ராரே.