HolyIndia.Org

திருத்தேவூர் ஆலய தேவாரம்

திருத்தேவூர் ஆலயம்
2-82-2356:
பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான் 
விண்ணில் வானவர் கோன்விம லன்விடை ய[ர்தி 
தெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவு[ர் 
அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே. 

2-82-2357:
ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறு 
சோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த் 
தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவு[ர் 
ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 

2-82-2358:
மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான் 
கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள் 
செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவு[ர் 
அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 

2-82-2359:
முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறைமுறை திரியும் 
பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள் 
சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவு[ர் 
அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 

2-82-2360:
பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால் 
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் 
தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவு[ர் 
ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 

2-82-2361:
பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின் 
மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான் 
திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவு[ர் 
அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே. 

2-82-2362:
வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத் 
தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்க 
தென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவு[ர் 
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே. 

2-82-2363:
தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் நெரிந்து 
வெருவ வு[ன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான் 
தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவு[ர் 
அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே. 

2-82-2364:
முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணா 
எந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான் 
செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவு[ர் 
அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே. 

2-82-2365:
பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள் 
கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டு 
தேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவு[ர் 
ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே. 

2-82-2366:
அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன் 
நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன் 
எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவு[ர்த் 
தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே. 

3-74-3592:
காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல்
தேடுபலி ய[ணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம்ம றிப்பநலமார்
சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ் மாடமிடை தேவு[ரதுவே. 

3-74-3593:
கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவன்னி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனுர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம்வி ரைக்குமணமார்
தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை வொன்றிவரு தேவு[ரதுவே. 

3-74-3594:
பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கன்எமை யாளும்இறைவன்
எண்தடவு வானவரி றைஞ்சுகழ லோன்இனிதி ருந்தஇடமாம்
விண்தடவு வார்பொழிலு குத்தநற வாடிமலர் சூடிவிரையார்
மூசெண்தடவு மாளிகைசெ றிந்துதிரு வொன்றிவளர் தேவு[ரதுவே. 
(மூ சேண் என்பது செண் எனக் குறுகிநின்றது. ) 

3-74-3595:
மாசில்மனம் நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவைமொழியுந்
தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவு[ரதுவே. 

3-74-3596:
கானமுறு மான்மறியன் ஆனையுரி போர்வைகன லாடல்புரிவோன்
ஏனஎயி றாமையிள நாகம்வளர் மார்பினிமை யோர்தலைவனுர்
வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவிப லாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவு[ரதுவே. 

3-74-3597:
ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறன்அடை யார்நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன்நமை யாளும்அரனுர்
வீறுமலர் ஊறுமது ஏறிவளர் வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல்வி ளிப்பஇள வாளைவரு தேவு[ரதுவே. 

3-74-3598:
கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம் அன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையமர் இன்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிகள் தின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி ஒன்றவிளை யாடிவளர் தேவு[ரதுவே. 

3-74-3599:
ஓதமலி கின்றதென் இலங்கையரை யன்மலிபு யங்கள்நெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில டர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கள்நட மாடலொடு பொங்குமுரவஞ்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவு[ரதுவே. 

3-74-3600:
வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன் நலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய அன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை யாழ்மருவு தேவு[ரதுவே. 

3-74-3601:
பொச்சமமர் பிச்சைபயில் அச்சமணு மெச்சமறு போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்... ... ... ... ... ..
... ... ... ... .. ... ... ... ... 

( இச்செய்யுளின் மற்றையஅடிகள் சிதைந்துபோயின ) 

3-74-3602:
துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவு[ரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே.