திருப்பனையூர் ஆலய தேவாரம்
திருப்பனையூர் ஆலயம்1-37-393:
அரவச் சடைமேல் மதிமத்தம்
விரவிப் பொலிகின் றவனுராம்
நிரவிப் பலதொண் டர்கள்நாளும்
பரவிப் பொலியும் பனைய[ரே.
1-37-394:
எண்ணொன் றிநினைந் தவர்தம்பால்
உண்ணின் றுமகிழ்ந் தவனுராம்
கண்ணின் றெழுசோ லையில்வண்டு
பண்ணின் றொலிசெய் பனைய[ரே.
1-37-395:
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானுர்
சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனைய[ரே.
1-37-396:
இடியார் கடல்நஞ் சமுதுண்டு
பொடியா டியமே னியினானுர்
அடியார் தொழமன் னவரேத்தப்
படியார் பணியும் பனைய[ரே.
1-37-397:
அறையார் கழல்மே லரவாட
இறையார் பலிதேர்ந் தவனுராம்
பொறையார் மிகுசீர் விழமல்கப்
பறையா ரொலிசெய் பனைய[ரே.
1-37-398:
அணியார் தொழவல் லவரேத்த
மணியார் மிடறொன் றுடையானுர்
தணியார் மலர்கொண் டிருபோதும்
பணிவார் பயிலும் பனைய[ரே.
1-37-399:
அடையா தவர்மூ வெயில்சீறும்
விடையான் விறலார் கரியின்தோல்
(மூ)உடையா னவனெண் பலபூதப்
படையா னவனுர் பனைய[ரே.
(மூ) உடையா னவனொண் பலபூத என்றும் பாடம்.
1-37-400:
இலகும் முடிபத் துடையானை
அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல்
உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனுர் பனைய[ரே.
1-37-401:
வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள்
சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனைய[ரே.
1-37-402:
மூஅழிவல் லமண ரொடுதேரர்
மொழிவல் லனசொல் லியபோதும்
இழிவில் லதொர்செம் மையினானுர்
பழியில் லவர்சேர் பனைய[ரே.
(மூ) அழிவில் லமண/ தொடுதேரர் என்றும் பாடம்.
1-37-403:
பாரார் மூவிடையான் பனைய[ர்மேல்
சீரார் தமிழ்ஞா னசம்பந்தன்
ஆரா தசொன்மா லைகள்பத்தும்
ஊரூர் நினைவா ருயர்வாரே.
(மூ) விடையார் என்றும் பாடம்.
7-87-8106:
மாடமாளிகை கோபுரத்தொடு
மண்டபம்வள ரும்வளர்பொழில்
பாடல் வண்டறையும்
பழனத் திருப்பனைய[ர்த்
தோடுபெய்தொரு காதினிற்குழை
தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்
றாடு மாறுவல்லார்
அவரே அழகியரே.
7-87-8107:
நாறுசெங்கழு நீர்மலர்
நல்லமல்லிகை சண்பகத்தொடு
சேறுசெய் கழனிப்
பழனத் திருப்பனைய[ர்
நீறுபூசிநெய் யாடிதன்னை
நினைப்பவர்தம் மனத்தனாகிநின்
றாறு சூடவல்லார்
அவரே அழகியரே.
7-87-8108:
செங்கண்மேதிகள் சேடெறிந்து
தடம்படிதலிற் சேலினத்தொடு
பைங்கண் வாளைகள்
பாய்பழனத் திருப்பனைய[ர்த்
திங்கள்சூடிய செல்வனாரடி
யார்தம்மேல்வினை தீர்ப்பராய்விடி
லங்கிருந் துறைவார்
அவரே அழகியரே.
7-87-8109:
வாளைபாய மலங்கிளங்கயல்
வரிவராலுக ளுங்கழனியுள்
பாளையொண் கமுகம்
புடைசூழ் திருப்பனைய[ர்த்
தோளுமாகமுந் தோன்றநட்டமிட்
டாடுவாரடித் தொண்டர்தங்களை
ஆளு மாறுவல்லார்
அவரே அழகியரே.
7-87-8110:
கொங்கையார்பல ருங்குடைந்
தாடநீர்க்குவ ளைமலர்தர
பங்கயம் மலரும்
பழனத் திருப்பனைய[ர்
மங்கைபாகமும் மாலோர்பாகமுந்
தாமுடையவர் மான்மழுவினோ
டங்கைத் தீயுகப்பார்
அவரே அழகியரே.
7-87-8111:
காவிரிபுடை சூழ்சோணாட்டவர்
தாம்பரவிய கருணையங்கடலப்
பாவிரி புலவர்
பயிலுந் திருப்பனைய[ர்
மாவிரிமட நோக்கிஅஞ்ச
மதகரியுரி போர்த்துகந்தவர்
ஆவில்ஐந் துகப்பார்
அவரே அழகியரே.
7-87-8112:
மரங்கள்மேல்மயி லாலமண்டப
மாடமாளிகை கோபுரத்தின்மேல்
திரங்கல்வன் முகவன்
புகப்பாய் திருப்பனைய[ர்த்
துரங்கன்வாய்பிளந் தானுந்தூமலர்த்
தோன்றலுமறி யாமற்றோன்றிநின்
றரங்கில் ஆடவல்லார்
அவரே அழகியரே.
7-87-8113:
மண்ணெலாம்முழ வம்மதிர்தர
மாடமாளிகை கோபுரத்தின்மேற்
பண்ணி யாழ்முரலும்
பழனத் திருப்பனைய[ர்
வெண்ணிலாச் சடைமேவிய
விண்ணவரொடு மண்ணவர்தொழ
அண்ணலாகி நின்றார்
அவரே அழகியரே.
7-87-8114:
குரக்கினங்குதி கொள்ளத்தேனுகக்
குண்டுதண்வயற் கெண்டைபாய்தரப்
பரக்குந் தண்கழனிப்
பழனத் திருப்பனைய[ர்
இரக்கமில்லவர் ஐந்தொடைத்தலை
தோளிருபது தாள்நெரிதர
அரக்கனை அடர்த்தார்
அவரே அழகியரே.
7-87-8115:
வஞ்சிநுண்ணிடை மங்கைபங்கினர்
மாதவர்வள ரும்வளர்பொழில்
பஞ்சின் மெல்லடியார்
பயிலுந் திருப்பனைய[ர்
வஞ்சியும்வளர் நாவலூரன்
வனப்பகையவ ளப்பன்வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பார்
அவரே அழகியரே.