HolyIndia.Org

திருநாரையூர் (சித்தீச்சரம்) ஆலய தேவாரம்

திருநாரையூர் (சித்தீச்சரம்) ஆலயம்
1-29-305:
ஊரு லாவு பலிகொண் டுலகேத்த 
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல் 
சீரு லாவு மறையோர் நறைய[ரிற் 
சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 

1-29-306:
காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி 
ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ 
வீடு மாக மறையோர் நறைய[ரில் 
நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 

1-29-307:
கல்வி யாளர் கனக மழல்மேனி 
புல்கு கங்கை புரிபுன் சடையானுர் 
மல்கு திங்கள் பொழில்சூழ் நறைய[ரிற் 
செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே. 

1-29-308:
நீட வல்ல நிமிர்புன் சடைதாழ 
ஆட வல்ல அடிக ளிடமாகும் 
பாடல் வண்டு பயிலும் நறைய[ரிற் 
சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 

1-29-309:
உம்ப ராலும் உலகின் னவராலும் 
தம்பெ ருமைய ளத்தற் கரியானுர் 
நண்பு லாவு மறையோர் நறைய[ரிற் 
செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 

1-29-310:
கூரு லாவு படையான் விடையேறிப் 
போரு லாவு மழுவான் அனலாடி 
பேரு லாவு பெருமான் நறைய[ரிற் 
சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே. 

1-29-311:
மூஅன்றி நின்ற அவுணர் புரமெய்த 
வென்றி வில்லி விமலன் விரும்புமூர் 
மன்றில் வாச மணமார் நறைய[ரிற் 
சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 
(மூ) அன்றி நின்ற - பகைத்து நின்ற 

1-29-312:
அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால் 
நெருக்க வு[ன்றும் விரலான் விரும்புமூர் 
பரக்குங் கீர்த்தி யுடையார் நறைய[ரிற் 
திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே. 

1-29-313:
ஆழி யானும் அலரின் உறைவானும் 
ஊழி நாடி உணரார் திரிந்துமேல் 
சூழு நேட எரியாம் ஒருவன்சீர் 
நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 

1-29-314:
மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார் 
கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல் 
உய்ய வேண்டில் இறைவன் நறைய[ரிற் 
செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே. 

1-29-315:
மெய்த்து லாவு மறையோர் நறைய[ரிற் 
சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி 
அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன் 
பத்தும் பாடப் பறையும் பாவமே. 

1-71-765:
பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர் கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர் மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்திச் சிறைகொள்வண்டு தேனார்நறைய[ர்ச் சித்தீச்சரத்தாரே. 

1-71-766:
பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே 
தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக் 
கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச் 
செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே. 

1-71-767:
முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல் 
பொடிகொள்நுலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக் 
கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக் 
கொடிகொள்மாடக் குழாமார்நறைய[ர்ச் சித்தீச்சரத்தாரே. 

1-71-768:
பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி 
மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர் 
பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ் 
சென்றார்செல்வத் திருவார்நறைய[ர்ச் சித்தீச்சரத்தாரே. 

1-71-769:
நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர் 
பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே 
தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச் 
சீரார்கோலம் பொலியும்நறைய[ர்ச் சித்தீச்சரத்தாரே. 

1-71-770:
நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை 
தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத்தெழிலார்வந் 
தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுரந் 
தீண்டுமதியந் திகழும்நறைய[ர்ச் சித்தீச்சரத்தாரே. 

1-71-771:
குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந் 
தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர் 
எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக் 
கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே. 

1-71-772:
கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை 
வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி 
உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார் 
திரையார்புனல்சூழ் செல்வநறைய[ர்ச் சித்தீச்சரத்தாரே. 

1-71-773:
நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய் 
அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும் 
முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்ன 
செடியார்செந்நெல் திகழும்நறைய[ர்ச் சித்தீச்சரத்தாரே. 

1-71-774:
நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார் 
ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள் 
கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச் 
சென்றுண்டார்ந்து சேரும்நறைய[ர்ச் சித்தீச்சரத்தாரே. 

1-71-775:
குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை 
செயிலார்பொய்கை சேரும்நறைய[ர்ச் சித்தீச்சரத்தாரை 
மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன் 
பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே. 

2-87-2410:
நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி 
யரியான்மு னாய வொளியான் 
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி 
யுறுதீயு மாய நிமலன் 
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த 
நலகண்டு பண்டு சுடலை 
நாரியோர் பாகமாக நடமாட வல்ல 
நறைய[ரின் நம்ப னவனே. 

2-87-2411:
இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை 
யெதிர்நாணி பூண வரையிற் 
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து 
அமரர்க் களித்த தலைவன் 
மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர் 
மனம்நின்ற மைந்தன் மருவும் 
நடமயி லாலநீடு குயில்கூவு சோலை 
நறைய[ரின் நம்ப னவனே. 

2-87-2412:
சூடக முன்கைமங்கை யொருபாக மாக 
அருள்கார ணங்கள் வருவான் 
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு 
படுபிச்ச னென்று பரவத் 
தோடக மாயோர்காதும் ஒருகா திலங்கு 
குழைதாழ வேழ வுரியன் 
நாடக மாகவாடி மடவார்கள் பாடும் 
நறைய[ரின் நம்ப னவனே. 

2-87-2413:
சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி 
கதியாக நின்ற கடவுள் 
ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன் 
இருளாய கண்டன் அவனித் 
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு 
மலையின்கண் வந்து தொழுவார் 
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் 
நறைய[ரின் நம்ப னவனே. 

2-87-2414:
நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி 
நிகழம் பலத்தின் நடுவே 
அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன் 
எமர்சுற்ற மாய இறைவன் 
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து 
விடையேறி இல்பலி கொள்வான் 
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும் 
நறைய[ரின் நம்ப னவனே. 

2-87-2415:
கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை 
மலர்துன்று செஞ்சடை யினான் 
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு 
பலவாகி நின்ற பரமன் 
அணுகிய வேதவோசை யகலங்க மாறின் 
பொருளான ஆதி யருளான் 
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து 
நறைய[ரின் நம்ப னவனே. 

2-87-2416:
ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க 
மவையார ஆட லரவம் 
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும் 
விகிர்தன் விடங்கொள் மிடறன் 
துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம் 
எழிலார வென்றி யருளும் 
நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும் 
நறைய[ரின் நம்ப னவனே. 

2-87-2417:
அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள் 
எதிருஞ் சிலம்பொ டிசையக் 
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன் 
முனிவுற் றிலங்கை யரையன் 
உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும் 
இசைகேட் டிரங்கி யொருவாள் 
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல 
நறைய[ரின் நம்ப னவனே. 

2-87-2418:
குலமலர் மேவினானும் மிகுமாய னாலும் 
எதிர்கூடி நேடி நினைவுற் 
றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த 
பெரியா னிலங்கு சடையன் 
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச 
வருமைத் திகழ்ந்த பொழிலின் 
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி 
நறைய[ரின் நம்ப னவனே. 

2-87-2419:
துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற 
வவர்தாமு மல்ல சமணுங் 
கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த 
பெருமான் பிறங்கு சடையன் 
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண 
முறைமாதர் பாடி மருவும் 
நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட 
நறைய[ரின் நம்ப னவனே. 

2-87-2420:
கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி 
மிகுபந்தன் முந்தி யுணர 
ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த 
நறைய[ரின் நம்ப னவனை 
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த 
தமிழ்மாலை பத்தும் நினைவார் 
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று 
வழிபாடு செய்யும் மிகவே. 

7-93-8167:
நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல்
ஊரும் அரவம் உடையான் இடமாம்
வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நரைய[ர்ச் சித்தீச் சரமே. 

7-93-8168:
அளைப்பை அரவேர் இடையாள் அஞ்சத்
துளைக்கைக் கரித்தோல் உரித்தான் இடமாம்
வளைக்கை மடவார் மடுவிற் றடநீர்த்
திளைக்கும் நறைய[ர்ச் சித்தீச் சரமே. 

7-93-8169:
இகழுந் தகையோர் எயில்மூன் றெரித்த
பகழி யொடுவில் லுடையான் பதிதான்
முகிழ்மென் முலையார் முகமே கமலந்
திகழும் நறைய[ர்ச் சித்தீச் சரமே. 

7-93-8170:
மறக்கொள் அரக்கன் வரைதோள் வரையால்
இறக்கொள் விரற்கோன் இருக்கும் இடமாம்
நறக்கொள் கமலம் நனிபள் ளியெழத்
திறக்கும் நறைய[ர்ச் சித்தீச் சரமே. 

7-93-8171:
முழுநீ றணிமே னியன்மொய் குழலார்
எழுநீர் மைகொள்வான் அமரும் இடமாம்
கழுநீர் கமழக் கயல்சேல் உகளுஞ்
செழுநீர் நறைய[ர்ச் சித்தீச் சரமே. 

7-93-8172:
ஊனா ருடைவெண் டலையுண் பலிகொண்
டானார் அடலே றமர்வான் இடமாம்
வானார் மதியம் பதிவண் பொழில்வாய்த்
தேனார் நறைய[ர்ச் சித்தீச் சரமே. 

7-93-8173:
காரூர் கடலில் விடமுண் டருள்செய்
நீரூர் சடையன் நிலவும் இடமாம்
வாரூர் முலையார் மருவும் மறுகில்
தேரூர் நறைய[ர்ச் சித்தீச் சரமே. 

7-93-8174:
கரியின் உரியுங் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடமாம்
புரியும் மறையோர் நிறைசொற் பொருள்கள்
தெரியும் நறைய[ர்ச் சித்தீச் சரமே. 

7-93-8175:
பேணா முனிவன் பெருவேள் வியெலாம்
மாணா மைசெய்தான் மருவும் இடமாம்
பாணார் குழலும் முழவும் விழவிற்
சேணார் நறைய[ர்ச் சித்தீச் சரமே. 

7-93-8176:
குறியில் வழுவாக் கொடுங்கூற் றுதைத்த
எறியும் மழுவாட் படையான் இடமாம்
நெறியில் வழுவா நியமத் தவர்கள்
செறியும் நறைய[ர்ச் சித்தீச் சரமே. 

7-93-8177:
போரார் புரமெய் புனிதன் அமருஞ்
சீரார் நறைய[ர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய் துவரே.