HolyIndia.Org

திருக்கடையூர் மயானம் ஆலய தேவாரம்

திருக்கடையூர் மயானம் ஆலயம்
2-80-2335:
வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கி 
எரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார் 
கரிய மிடறும் உடையார் கடவு[ர் மயானம் அமர்ந்தார் 
பெரிய விடைமேல் வருவா ரவரெம் பெருமான் அடிகளே. 

2-80-2336:
மங்கை மணந்த மார்பர் மழுவாள் வலனொன் றேந்திக் 
கங்கை சடையிற் கரந்தார் கடவு[ர் மயானம் அமர்ந்தார் 
செங்கண் வெள்ளே றேறிச் செல்வஞ் செய்யா வருவார் 
அங்கை யேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே. 

2-80-2337:
ஈட லிடபம் இசைய ஏறி மழுவொன் றேந்திக் 
காட திடமா வுடையார் கடவு[ர் மயானம் அமர்ந்தார் 
பாட லிசைகொள் கருவி படுதம் பலவும் பயில்வார் 
ஆட லரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. 

2-80-2338:
இறைநின் றிலங்கு வளையாள் இளையா ளொருபா லுடையார் 
மறைநின் றிலங்கு மொழியார் மலையார் மனத்தின் மிசையார் 
கறைநின் றிலங்கு பொழில்சூழ் கடவு[ர் மயானம் அமர்ந்தார் 
பிறைநின் றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே. 

2-80-2339:
வெள்ளை யெருத்தின் மிசையார் விரிதோ டொருகா திலங்கத் 
துள்ளு மிளமான் மறியார் சுடர்பொற் சடைகள் துளங்கக் 
கள்ள நகுவெண் டலையார் கடவு[ர் மயானம் அமர்ந்தார் 
பிள்ளை மதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே. 

2-80-2340:
பொன்றா துதிரு மணங்கொள் புனைபூங் கொன்றை புனைந்தார் 
ஒன்றா வெள்ளே றுயர்த்த துடையா ரதுவே ய[ர்வார் 
கன்றா வினஞ்சூழ் புறவிற் கடவு[ர் மயானம் அமர்ந்தார் 
பின்றாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. 

2-80-2341:
பாச மான களைவார் பரிவார்க் கமுதம் அனையார் 
ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார் 
காசை மலர்போல் மிடற்றார் கடவு[ர் மயானம் அமர்ந்தார் 
பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே. 

2-80-2342:
செற்ற அரக்கன் அலறத் திகழ்சே வடிமெல் விரலாற் 
கற்குன் றடர்த்த பெருமான் கடவு[ர் மயானம் அமர்ந்தார் 
மற்றொன் றிணையில் வலிய மாசில் வெள்ளி மலைபோல் 
பெற்றொன் றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 

2-80-2343:
வருமா கரியின் உரியார் வளர்புன் சடையார் விடையார் 
கருமான் உரிதோல் உடையார் கடவு[ர் மயானம் அமர்ந்தார் 
திருமா லொடுநான் முகனுந் தேர்ந்துங் காணமுன் ஒண்ணாப் 
பெருமா னெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 

2-80-2344:
தூய விடைமேல் வருவார் துன்னா ருடைய மதில்கள் 
காய வேவச் செற்றார் கடவு[ர் மயானம் அமர்ந்தார் 
தீய கருமஞ் சொல்லுஞ் சிறுபுன் தேரர் அமணர் 
பேய்பே யென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே. 

2-80-2345:
மரவம் பொழில்சூழ் கடவு[ர் மன்னு மயானம் அமர்ந்த 
அரவ மசைத்த பெருமான் அகலம் அறிய லாகப் 
பரவு முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை 
இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே. 

5-38-5607:
குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வு[ரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செயும் பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே. 

5-38-5608:
உன்னி வானவர் ஓதிய சிந்தையிற்
கன்னல் தேன்கட வு[ரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை என்னார் பெருமா னடிகளே. 

5-38-5609:
சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவு[ர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே. 

5-38-5610:
இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட வு[ரின் மயானத்தார்
அறவ னாரடி யாரடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே. 

5-38-5611:
கத்து காளி கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட வு[ரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
பித்தர் காணும் பெருமா னடிகளே. 

5-38-5612:
எரிகொள் மேனி இளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட வு[ரின் மயானத்தார்
அரியர் அண்டத்து ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமா னடிகளே. 

5-38-5613:
அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வு[ரின் மயானத்தார்
வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமா னடிகளே. 

5-38-5614:
அரவு கையினர் ஆதி புராணனார்
மரவு சேர்கட வு[ரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வார்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே. 

7-53-7764:
மருவார் கொன்றை மதிசூடி 
மாணிக் கத்தின் மலைபோல 
வருவார் விடைமேல் மாதோடு 
மகிழ்ந்து பூதப் படைசூழத் 
திருமால் பிரமன் இந்திரற்குந் 
தேவர் நாகர் தானவர்க்கும் 
பெருமான் கடவு[ர் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே. 

7-53-7765:
விண்ணோர் தலைவர் வெண்புரிநுல் 
மார்பர் வேத கீதத்தர் 
கண்ணார் நுதலர் நகுதலையர் 
கால காலர் கடவு[ரர் 
எண்ணார் புரமூன் றெரிசெய்த 
இறைவ ருமையோ ரொருபாகம் 
பெண்ணா ணாவர் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே. 

7-53-7766:
காயும் புலியின் அதளுடையர் 
கண்டர் எண்டோ ட் கடவு[ரர் 
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் 
தாமே யாய தலைவனார் 
பாயும் விடையொன் றதுவேறிப் 
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி 
பேய்கள் வாழும் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே. 

7-53-7767:
நறைசேர் மலரைங் கணையானை 
நயனத் தீயாற் பொடிசெய்த 
இறையா ராவர் எல்லார்க்கும் 
இல்லை யென்னா தருள்செய்வார் 
பறையார் முழவம் பாட்டோ டு 
பயிலுந் தொண்டர் பயில்கடவு[ர்ப் 
பிறையார் சடையார் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே. 

7-53-7768:
கொத்தார் கொன்றை மதிசூடிக் 
கோள்நா கங்கள் பூணாக 
மத்த யானை உரிபோர்த்து 
மருப்பும் ஆமைத் தாலியார் 
பத்தி செய்து பாரிடங்கள் 
பாடி ஆடப் பலிகொள்ளும் 
பித்தர் கடவு[ர் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே. 

7-53-7769:
துணிவார் கீளுங் கோவணமுந் 
துதைந்து சுடலைப் பொடியணிந்து 
பணிமே லிட்ட பாசுபதர் 
மூபஞ்ச வடிமார் பினர்கடவு[ர்த் 
திணிவார் குழையார் புரமூன்றுந் 
தீவாய்ப் படுத்த சேவகனார் 
பிணிவார் சடையார் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே. 
 

7-53-7770:
காரார் கடலின் நஞ்சுண்ட 
கண்டர் கடவு[ர் உறைவாணர் 
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து 
சிதைய விரலா லூன்றினார் 
ஊர்தான் ஆவ துலகேழும் 
உடையார்க் கொற்றி ய[ராரூர் 
பேரா யிரவர் மயானத்துப் 
பெரிய பெருமா னடிகளே. 

7-53-7771:
வாடா முலையாள் தன்னோடும் 
 மகிழ்ந்து கானில் வேடுவனாய்க் 
கோடார் கேழற் பின்சென்று 
 குறுகி விசயன் தவமழித்து 
நாடா வண்ணஞ் செருச்செய்து 
 ஆவ நாழி நிலையருள்செய் 
பீடார் சடையார் மயானத்துப் 
 பெரிய பெருமா னடிகளே. 

7-53-7772:
வேழம் உரிப்பர் மழுவாளர் 
வேள்வி அழிப்பர் சிரமறுப்பர் 
ஆழி அளிப்பர் அரிதனக்கன் றானஞ் சுகப்பர் அறமுரைப்பர் 
ஏழைத் தலைவர் கடவு[ரில் இறைவர் சிறுமான் மறிக்கையர் 
பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. 

7-53-7773:
மாட மல்கு கடவு[ரில் 
 மறையோ ரேத்தும் மயானத்துப் 
பீடை தீர அடியாருக் 
 கருளும் பெருமா னடிகள்சீர் 
நாடி நாவ லாரூரன் 
 நம்பி சொன்ன நற்றமிழ்கள் 
பாடு மடியார் கேட்பார்மேற் 
 பாவ மான பறையுமே.