HolyIndia.Org

திருப்பாலைத்துறை ஆலய தேவாரம்

திருப்பாலைத்துறை ஆலயம்
3-46-3288:
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே 
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக் 
கத்தை போர்த்தகட வுள்கரு காவு[ரெம் 
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

3-46-3289:
விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க் 
கமுத நீழலக லாததோர் செல்வமாங் 
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவு[ர் 
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

3-46-3290:
பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக் 
குழக ரென்றுகுழை யாவழை யாவருங் 
கழல்கொள் பாடலுடை யார்கரு காவு[ரெம் 
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

3-46-3291:
பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன் 
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர் 
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவு[ரெம் 
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

3-46-3292:
மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச் 
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர் 
கைதன் முல்லைகம ழுங்கரு காவு[ரெம் 
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

3-46-3293:
மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட 
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர் 
காய்சி னத்தவிடை யார்கரு காவு[ரெம் 
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. 

3-46-3294:
வெந்த நீறுமெய் பூசிய வேதியன் 
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன் 
கந்த மௌவல்கம ழுங்கரு காவு[ரெம் 
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே. 

3-46-3295:
பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார் 
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங் 
கண்ணன் நேடஅரி யார்கரு காவு[ரெம் 
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

3-46-3296:
போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல் 
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின் 
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவு[ரெம் 
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 

3-46-3297:
கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவு[ர் 
நிலவு பாடலுடை யான்றன நீள்கழல் 
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ் 
சொலவ லாரவர் தொல்வினை தீருமே. 

6-15-6391:
குருகாம் வயிரமாங் கூறு நாளாங் 
கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் 
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையா டியாங்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் 
கண்ணாங் கருகாவு[ ரெந்தை தானே. 

6-15-6392:
வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டு முருவமாம் விரும்பி நின்ற
பத்தா மடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாந்
தொத்தா மமரர்கணஞ் சூழ்ந்து போற்றத் 
தோன்றாதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்குக் காணா காட்டுங் 
கண்ணாங் கருகாவு[ ரெந்தை தானே. 

6-15-6393:
பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் 
ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங் 
கண்ணாங் கருகாவு[ ரெந்தை தானே. 

6-15-6394:
இரவனாம் எல்லி நடமா டியாம்
எண்டிசைக்குந் தேவனாம் என்னு ளானாம்
அரவனாம் அல்லல் அறுப்பா னுமாம்
ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறுங்
குரவனாங் கூற்றை யுதைத்தான் றானாங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்
கரவனாங் காட்சிக் கெளியா னுமாங் 
கண்ணாங் கருவு[ ரெந்தை தானே. 

6-15-6395:
படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் றானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் 
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம் 
அசைத்தானாம் ஆனேறொன் று{ர்ந்தா னாகுங்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற் 
கண்ணாங் கருகாவு[ ரெந்தை தானே. 

6-15-6396:
மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமுக் கண்ணி னானாஞ்
சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ் 
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாங்
காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவு[ ரெந்தை தானே. 

6-15-6397:
அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவு[ ரெந்தை தானே. 

6-15-6398:
துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்
சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்
படிதானாம் பாவ மறுப்பா னாகும்
பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங்
கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்
கடியானாங் காட்சிக் கரியா னாகுங்
கண்ணாங் கருகாவு[ ரெந்தை தானே. 

6-15-6399:
விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் றானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவு[ ரெந்தை தானே. 

6-15-6400:
பொறுத்திருந்த புள்@ர்வான் உள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் றானாய்ச்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச் 
சிலைகுனியத் தீமூட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி 
இருந்தானை ஒருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவு[ ரெந்தை தானே. 

6-15-6401:
ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் 
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே 
ஆகாய மந்திரமு மானா னாகுங்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவு[ ரெந்தை தானே.