HolyIndia.Org

திருவேதிகுடி ஆலய தேவாரம்

திருவேதிகுடி ஆலயம்
1-28-294:
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் 
துப்ப னென்னா தருளே துணையாக 
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற் 
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

1-28-295:
பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித் 
தோலும் நுலுந் துதைந்த வரைமார்பர் 
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை 
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

1-28-296:
செய்யர் செய்ய சடையர் விடைய[ர்வர் 
கைகொள் வேலர் கழலர் கரிகாடர் 
தைய லாளொர் பாக மாயஎம் 
ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

1-28-297:
பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர் 
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர் 
மணிகொள் கண்டர் மேய வார்பொழில் 
அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

1-28-298:
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து 
மறையும் ஓதி மயானம் இடமாக 
உறையுஞ் செல்வம் உடையார் காவிரி 
அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

1-28-299:
துடிக ளோடு முழவம் விம்மவே 
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் 
படிகொள் பாணி பாடல் பயின்றாடும் 
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

1-28-300:
சாடிக் காலன் மாளத் தலைமாலை 
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம் 
பாடி ஆடிப் பரவு வாருள்ளத் 
தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. 

1-28-301:
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக் 
கண்ணோர் பாகங் கலந்த நுதலினார் 
எண்ணா தரக்கன் எடுக்க வு[ன்றிய 
அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

1-28-302:
தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே 
அழலா யோங்கி அருள்கள் செய்தவன் 
விழவார் மறுகில் விதியால் மிக்கஎம் 
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. 

1-28-303:
(மூ)கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர் 
ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே 
நீதி நின்று நினைவார் வேடமாம் 
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே. 
(மூ) போதுசாற்றி என்றும் பாடம். 

1-28-304:
அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச் 
சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர் 
சந்தம் பரவு ஞான சம்பந்தன் 
வந்த வாறே புனைதல் வழிபாடே. 

4-41-4562:
பொய்விரா மேனி தன்னைப் 
பொருளெனக் காலம் போக்கி 
மெய்விரா மனத்த னல்லேன் 
வேதியா வேத நாவா 
ஐவரால் அலைக்கப் பட்ட 
ஆக்கைகொண் டயர்த்துப் போனேன் 
செய்வரால் உகளுஞ் செம்மைத் 
திருச்சோற்றுத் துறைய னாரே. 

4-41-4563:
கட்டராய் நின்று நீங்கள் 
காலத்தைக் கழிக்க வேண்டா 
எட்டவாங் கைகள் வீசி 
எல்லிநின் றாடு வானை 
அட்டமா மலர்கள் கொண்டே 
ஆனஞ்சும் ஆட்ட ஆடிச் 
சிட்டராய் அருள்கள் செய்வார் 
திருச்சோற்றுத் துறைய னாரே. 

4-41-4564:
கல்லினாற் புரமூன் றெய்த 
கடவுளைக் காத லாலே 
எல்லியும் பகலு முள்ளே 
ஏகாந்த மாக ஏத்தும் 
பல்லில்வெண் டலைகை யேந்திப் 
பல்லிலந் திரியுஞ் செல்வர் 
சொல்லுநன் பொருளு மாவார் 
திருச்சோற்றுத் துறைய னாரே. 

4-41-4565:
கறையராய்க் கண்ட நெற்றிக் 
கண்ணராய்ப் பெண்ணோர் பாகம் 
இறையராய் இனிய ராகித் 
தனியராய்ப் பனிவெண் டிங்கட் 
பிறையராய்ச் செய்த வெல்லாம் 
பீடராய்க் கேடில் சோற்றுத் 
துறையராய்ப் புகுந்தெ னுள்ளச் 
சோர்வுகண் டருளி னாரே. 

4-41-4566:
பொந்தையைப் பொருளா வெண்ணிப் 
பொருக்கெனக் காலம் போனேன் 
எந்தையே ஏக மூர்த்தி 
யென்றுநின் றேத்த மாட்டேன் 
பந்தமாய் வீடு மாகிப் 
பரம்பர மாகி நின்று 
சிந்தையுட் டேறல் போலுந் 
திருச்சோற்றுத் துறைய னாரே. 

4-41-4567:
பேர்த்தினிப் பிறவா வண்ணம் 
பிதற்றுமின் பேதை பங்கன் 
பார்த்தனுக் கருள்கள் செய்த 
பாசுப தன்றி றமே 
ஆர்த்துவந் திழிவ தொத்த 
அலைபுனற் கங்கை யேற்றுத் 
தீர்த்தமாய்ப் போத விட்டார் 
திருச்சோற்றுத் துறைய னாரே. 

4-41-4568:
கொந்தார்பூங் குழலி னாரைக் 
கூறியே காலம் போன 
எந்தையெம் பிரானாய் நின்ற 
இறைவனை ஏத்தா தந்தோ 
முந்தரா அல்கு லாளை 
யுடன்வைத்த ஆதி மூர்த்தி 
செந்தாது புடைகள் சூழ்ந்த 
திருச்சோற்றுத் துறைய னாரே. 

4-41-4569:
அங்கதி ரோன வனை 
அண்ணலாக் கருத வேண்டா 
வெங்கதி ரோன் வழியே 
போவதற் கமைந்து கொண்மின் 
அங்கதி ரோன வனை 
யுடன்வைத்த ஆதி மூர்த்தி 
செங்கதி ரோன்வ ணங்குஞ் 
திருச்சோற்றுத் துறைய னாரே. 

4-41-4570:
ஓதியே கழிக்கின் றீர்கள் 
உலகத்தீர் ஒருவன் றன்னை 
நீதியால் நினைக்க மாட்டீர் 
நின்மலன் என்று சொல்லீர் 
சாதியா நான்மு கனுஞ் 
சக்கரத் தானுங் காணாச் 
சோதியாய்ச் சுடர தானார் 
திருச்சோற்றுத் துறைய னாரே. 

4-41-4571:
மற்றுநீர் மனம்வை யாதே 
மறுமையைக் கழிக்க வேண்டிற் 
பெற்றதோர் உபாயந் தன்னாற் 
பிரானையே பிதற்று மின்கள் 
கற்றுவந் தரக்க னோடிக் 
கயிலாய மலைஎ டுக்கச் 
செற்றுகந் தருளிச் செய்தார் 
திருச்சோற்றுத் துறைய னாரே. 

4-85-4970:
காலை யெழுந்து கடிமலர் 
தூயன தாங்கொணர்ந்து 
மேலை யமரர் விரும்பு 
மிடம்விரை யான்மலிந்த 
சோலை மணங்கமழ் சோற்றுத் 
துறையுறை வார்சடைமேல் 
மாலை மதியமன் றோவெம் 
பிரானுக் கழகியதே. 

4-85-4971:
வண்டணை கொன்றையும் வன்னியும் 
மத்தமும் வாளரவுங் 
கொண்டணைந் தேறு முடியுடை 
யான்குரை சேர்கழற்கே 
தொண்டணைந் தாடிய சோற்றுத் 
துறையுறை வார்சடைமேல் 
வெண்டலை மாலையன் றோவெம் 
பிரானுக் கழகியதே. 

4-85-4972:
அளக்கு நெறியினன் அன்பர்கள் 
தம்மனத் தாய்ந்துகொள்வான் 
விளக்கு மடியவர் மேல்வினை 
தீர்த்திடும் விண்ணவர்கோன் 
துளக்குங் குழையணி சோற்றுத் 
துறையுறை வார்சடைமேற் 
றிளைக்கும் மதியமன் றோவெம் 
பிரானுக் கழகியதே. 

4-85-4973:
ஆய்ந்தகை வாளர வத்தொடு 
மால்விடை யேறியெங்கும் 
பேர்ந்தகை மானட மாடுவர் 
பின்னு சடையிடையே 
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய 
சோற்றுத் துறையுறைவார் 
ஏந்துகைச் சூல மழுவெம் 
பிரானுக் கழகியதே. 

4-85-4974:
கூற்றைக் கடந்ததுங் கோளர 
வார்த்ததுங் கோளுழுவை 
நீற்றில் துதைந்து திரியும் 
பரிசது நாமறியோம் 
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப 
அலைப்புண் டசைந்ததொக்குஞ் 
சோற்றுத் துறையுறை வார்சடை 
மேலதோர் தூமதியே. 

4-85-4975:
வல்லாடி நின்று வலிபேசு 
வார்கோளர் வல்லசுரர் 
கொல்லாடி நின்று குமைக்கிலும் 
வானவர் வந்திறைஞ்சச் 
சொல்லாடி நின்று பயில்கின்ற 
சோற்றுத் துறையுறைவார் 
வில்லாடி நின்ற நிலையெம் 
பிரானுக் கழகியதே. 

4-85-4976:
ஆய முடையது நாமறி 
யோம்அர ணத்தவரைக் 
காயக் கணைசிலை வாங்கியு 
மெய்துந் துயக்கறுத்தான் 
தூயவெண் ணீற்றினன் சோற்றுத் 
துறையுறை வார்சடைமேற் 
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம் 
மானுக் கழகியதே. 

4-85-4977:
அண்டர் அமரர் கடைந் 
தெழுந் தோடிய நஞ்சதனை 
உண்டும் அதனை ஒடுக்க 
வல்லான் மிக்க உம்பர்கள்கோன் 
தொண்டு பயில்கின்ற சோற்றுத் 
துறையுறை வார்சடைமேல் 
இண்டை மதியமன் றோவெம் 
பிரானுக் கழகியதே. 

4-85-4978:
கடல்மணி வண்ணன் கருதிய 
நான்முகன் றானறியான் 
விடமணி கண்ட முடையவன் 
றானெனை ஆளுடையான் 
சுடரணிந் தாடிய சோற்றுத் 
துறையுறை வார்சடைமேற் 
படமணி நாகமன் றோவெம் 
பிரானுக் கழகியதே. 

4-85-4979:
இலங்கைக் கிறைவன் இருபது 
தோளு முடிநெரியக் 
கலங்க விரலினா லூன்றி 
அவனைக் கருத்தழித்த 
துலங்கல் மழுவினன் சோற்றுத் 
துறையுறை வார்சடைமேல் 
இலங்கு மதியமன் றோவெம் 
பிரானுக் கழகியதே. 

5-33-5557:
ஒட்டி நின்ற உடலுறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்தவை போயறத்
தொட்டு நின்றுமச் சோற்றுத் துறையர்க்கே
பட்டி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

5-33-5558:
ஆதி யானண்ட வாணர்க் கருள்நல்கு
நீதி யானென்றும் நின்மல னேயென்றுஞ்
சோதி யானென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
வாதி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

5-33-5559:
ஆட்டி னாயடி யேன்வினை யாயின
ஓட்டி னாயொரு காதில் இலங்குவெண்
தோட்டி னாயென்று சோற்றுத் துறையர்க்கே
நீட்டி நீபணி செய்மட நெஞ்சமே. 

5-33-5560:
பொங்கி நின்றெழுந் தகடல் நஞ்சினைப்
பங்கி யுண்டதோர் தெய்வமுண் டோ சொலாய்
தொங்கி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்குத்
தங்கி நீபணி செய்மட நெஞ்சமே. 

5-33-5561:
ஆணி போலநீ ஆற்ற வலியைகாண்
ஏணி போலிழிந் தேறியும் ஏங்கியுந்
தோணி யாகிய சோற்றுத் துறையர்க்கே
பூணி யாய்ப்பணி செய்மட நெஞ்சமே. 

5-33-5562:
பெற்றம் ஏறிலென் பேய்படை யாகிலென்
புற்றி லாடர வேயது பூணிலென்
சுற்றி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
பற்றி நீபணி செய்மட நெஞ்சமே. 

5-33-5563:
அல்லி யானர வைந்தலை நாகணைப்
பள்ளி யானறி யாத பரிசெலாஞ்
சொல்லி நீயென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
புல்லி நீபணி செய்மட நெஞ்சமே. 

5-33-5564:
மிண்ட ரோடு விரவியும் வீறிலாக்
குண்டர் தம்மைக் கழிந்துய்யப் போந்துநீ
தொண்டு செய்தென்றுஞ் சோற்றுத் துறையர்க்கே
உண்டு நீபணி செய்மட நெஞ்சமே. 

5-33-5565:
வாழ்ந்த வன்வலி வாளரக் கன்றனை
ஆழ்ந்து போயல றவ்விர லூன்றினான்
சூழ்ந்த பாரிடஞ் சோற்றுத் துறையர்க்குத்
தாழ்ந்து நீபணி செய்மட நெஞ்சமே. 

6-44-6681:
மூத்தவனா யுலகுக்கு முந்தி னானே முறைமையால் எல்லாம் படைக்கின் றானே ஏத்தவனா யேழுலகு மாயி னானே இன்பனாய்த் துன்பங் களைகின் றானே காத்தவனா யெல்லாந்தான் காண்கின் றானே கடுவினையேன் தீவினையைக் கண்டு போகத் தீர்த்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 

6-44-6682:
தலையவனாய் உலகுக்கோர் தன்மை யானே தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே நிலையவனாய் நின்னொப்பா ரில்லா தானே நின்றுணராக் கூற்றத்தைச் சீறிப் பாய்ந்த கொலையவனே கொல்யானைத் தோல்மே லிட்ட கூற்றுவனே கொடிமதில்கள் மூன்று மெய்த சிலையவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 

6-44-6683:
முற்றாத பான்மதியஞ் சூடி னானே முளைத்தெழுந்த கற்பகத்தின் கொழுந்தொப் பானே உற்றாரென் றொருவரையு மில்லா தானே உலகோம்பும் ஒண்சுடரே ஓதும் வேதங் கற்றானே எல்லாக் கலைஞா னமுங் கல்லாதேன் தீவினைநோய் கண்டு போகச் செற்றானே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 

6-44-6684:
கண்ணவனாய் உலகெல்லாங் காக்கின் றானே காலங்கள் ஊழிகண் டிருக்கின் றானே விண்ணவனாய் விண்ணவர்க்கு மருள்செய் வானே வேதனாய் வேதம் விரித்திட் டானே எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையாமுன் எரிகொளுவ நோக்கி நக்க திண்ணவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 

6-44-6685:
நம்பனே நான்மறைக ளாயி னானே நடமாட வல்லானே ஞானக் கூத்தா கம்பனே கச்சிமா நகரு ளானே கடிமதில்கள் மூன்றினையும் பொடியா வெய்த அம்பனே அளவிலாப் பெருமை யானே அடியார்கட் காரமுதே ஆனேறேறுஞ் செம்பொனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 

6-44-6686:
ஆர்ந்தவனே உலகெலாம் நீயே யாகி அமைந்தவனே அளவிலாப் பெருமை யானே கூர்ந்தவனே குற்றால மேய கூத்தா கொடுமூ விலையதோர் சூல மேந்திப் பேர்ந்தவனே பிரளயங்க ளெல்லா மாய பெம்மானென் றெப்போதும் பேசும் நெஞ்சிற் சேர்ந்தவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 

6-44-6687:
வானவனாய் வண்மை மனத்தி னானே மாமணிசேர் வானோர் பெருமான் நீயே கானவனாய் ஏனத்தின் பின்சென் றானே கடிய அரணங்கள் மூன்றட் டானே தானவனாய்த் தண்கயிலை மேவி னானே தன்னொப்பா ரில்லாத மங்கைக் கென்றுந் தேனவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 

6-44-6688:
தன்னவனா யுலகெல்லாந் தானே யாகித் தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே என்னவனா யென்னிதயம் மேவி னானே ஈசனே பாச வினைகள் தீர்க்கும் மன்னவனே மலைமங்கை பாக மாக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித் தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 

6-44-6689:
எறிந்தானே எண்டிசைக்குங் கண்ணா னானே ஏழுலக மெல்லாமுன் னாய்நின் றானே அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியு மந்தமு மாகி யங்கே பிறிந்தானே பிறரொருவர் அறியா வண்ணம் பெம்மானென் றெப்போது மேத்து நெஞ்சிற் செறிந்தானே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 

6-44-6690:
மையனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரு மறியாத வண்ணச் சூலக் கையவனே கடியிலங்கைக் கோனை யன்று கால்விரலாற் கதிர்முடியுந் தோளுஞ் செற்ற மெய்யவனே அடியார்கள் வேண்டிற் றீயும் விண்ணவனே விண்ணப்பங் கேட்டு நல்குஞ் செய்யவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே. 

7-94-8178:
அழல்நீர் ஒழுகி யனைய சடையும்
உழையீ ருரியும் உடையான் இடமாம்
கழைநீர் முத்துங் கனகக் குவையுஞ்
சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே. 

7-94-8179:
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டன் பிடைய றாத
தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே. 

7-94-8180:
கோல அரவுங் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடமாம்
ஆலும் மயிலும் ஆடல் அளியுஞ்
சோலை தருநீர்ச் சோற்றுத் துறையே. 

7-94-8181:
பளிக்குத் தாரை பவள வெற்பிற்
குளிக்கும் போல்நுற் கோமாற் கிடமாம்
அளிக்கும் ஆத்தி அல்லான் மதுவந்
துளிக்குஞ் சோலைச் சோற்றுத் துறையே. 

7-94-8182:
உதையுங் கூற்றுக் கொல்கா விதிக்கு
வதையுஞ் செய்த மைந்தன் இடமாம்
திதையுந் தாதுந் தேனுஞ் ஞிமிறுந்
துதையும் பொன்னிச் சோற்றுத் துறையே. 

7-94-8183:
ஓதக் கடல்நஞ் சினையுண் டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம்
சீதப் புனலுண் டெரியைக் காலுஞ்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே. 

7-94-8184:
இறந்தார் என்பும் எருக்குஞ் சூடிப்
புறங்காட் டாடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றந் திருவென் றின்ன
துறந்தார் சேருஞ் சோற்றுத் துறையே. 

7-94-8185:
காமன் பொடியாக் கண்ணொன் றிமைத்த
ஓமக் கடலார் உகந்த இடமாம்
தேமென் குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பார் சோற்றுத் துறையே. 

7-94-8186:
இலையால் அன்பால் ஏத்து மவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையாற் றாழுந் தவத்தோர்க் கென்றுந்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே. 

7-94-8187:
சுற்றார் தருநீர்ச் சோற்றுத் துறையுள்
முற்றா மதிசேர் முதல்வன் பாதத்
தற்றார் அடியார் அடிநாய் ஊரன்
சொற்றான் இவைகற் றார்துன் பிலரே.