HolyIndia.Org

திருவெறும்பூர் ஆலய தேவாரம்

திருவெறும்பூர் ஆலயம்
5-74-5968:
விரும்பி ய[று விடேல்மட நெஞ்சமே 
கரும்பி னுறல்கண் டாய்கலந் தார்க்கவன் 
இரும்பி னுறல றாததோர் வெண்டலை 
எறும்பி ய[ர்மலை யானெங்க ளீசனே. 

5-74-5969:
பிறங்கு செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுசீர்க் 
கறங்கு பூத கணமுடைக் கண்ணுதல் 
நறுங்கு ழல்மட வாளொடு நாடொறும் 
எறும்பி ய[ர்மலை யானெங்க ளீசனே. 

5-74-5970:
மருந்து வானவர் தானவர்க் கின்சுவை 
புரிந்த புன்சடைப் புண்ணியன் கண்ணுதல் 
பொருந்து பூண்முலை மங்கைநல் லாளொடும் 
எறும்பி ய[ர்மலை யானெங்க ளீசனே. 

5-74-5971:
நிறங்கொள் கண்டத்து நின்மலன் எம்மிறை 
மறங்கொள் வேற்கண்ணி வாணுதல் பாகமா 
அறம்பு ரிந்தருள் செய்தவெம் அங்கணன் 
எறும்பி ய[ர்மலை யானெங்க ளீசனே. 

5-74-5972:
நறும்பொன் நாண்மலர்க் கொன்றையு நாகமுந் 
துறும்பு செஞ்சடைத் தூமதி வைத்துவான் 
உறும்பொன் மால்வரைப் பேதையோ ^ர்தொறும் 
எறும்பி ய[ர்மலை யானெங்க ளீசனே. 

5-74-5973:
கறும்பி ய[ர்வன ஐந்துள காயத்தில் 
திறம்பி ய[ர்வன மற்றும் பலவுள 
குறும்பி ய[ர்வதோர் கூட்டகத் திட்டெனை 
எறும்பி ய[ரரன் செய்த இயற்கையே. 

5-74-5974:
மறந்து மற்றிது பேரிடர் நாடொறுந் 
திறம்பி நீநினை யேல்மட நெஞ்சமே 
புறஞ்செய் கோலக் குரம்பையி லிட்டெனை 
எறும்பி ய[ரரன் செய்த இயற்கையே. 

5-74-5975:
இன்ப மும்பிறப் பும்மிறப் பின்னொடு 
துன்ப மும்முட னேவைத்த சோதியான் 
அன்ப னேயர னேயென் றரற்றுவார்க் 
கின்ப னாகும் எறும்பிய[ ரீசனே. 

5-74-5976:
கண்ணி றைந்த கனபவ ளத்திரள் 
விண்ணி றைந்த விரிசுடர்ச் சோதியான் 
உண்ணி றைந்துரு வாயுயி ராயவன் 
எண்ணி றைந்த எறும்பிய[ ரீசனே. 

5-74-5977:
நிறங்கொள் மால்வரை ஊன்றி யெடுத்தலும் 
நறுங்கு ழல்மட வாள்நடுக் கெய்திட 
மறங்கொள் வாளரக் கன்வலி வாட்டினான் 
எறும்பி ய[ர்மலை எம்மிறை காண்மினே. 

6-91-7141:
பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன்
எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாய
தன்னையுந்தன் றிறத்தறியாப் பொறியி லேனைத்
தன்றிறமு மறிவித்து நெறியுங் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய்
அடைந்தேனைத் தொடர்ந்தென்னை யாளாக் கொண்ட
தென்னெறும்பி ய[ர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

6-91-7142:
பளிங்கினிழ லுட்பதித்த சோதி யானைப்
பசுபதியைப் பாசுபத வேடத் தானை
விளிந்தெழுந்த சலந்தரனை வீட்டி னானை
வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும்
அருமருந்தை ஆமா றறிந்தென் னுள்ளந்
தெளிந்தெறும்பி ய[ர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

6-91-7143:
கருவையென்றன் மனத்திருந்த கருத்தை ஞானக்
கடுஞ்சுடரைப் படிந்துகிடந் தமர ரேத்தும்
உருவையண்டத் தொருமுதலை யோத வேலி
உலகினிறை தொழிலிறுதி நடுவாய் நின்ற
மருவைவென்ற குழன்மடவாள் பாகம் வைத்த
மயானத்து மாசிலா மணியை வாசத்
திருவெறும்பி ய[ர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

6-91-7144:
பகழிபொழிந் தடலரக்கர் புரங்கள் மூன்றும்
பாழ்படுத்த பரஞ்சுடரைப் பரிந்து தன்னைப்
புகழுமன்பர்க் கின்பமரும் அமுதைத் தேனைப்
புண்ணியனைப் புவனியது முழுதும் போக
உமிழுமம்பொற் குன்றத்தை முத்தின் று{ணை
உமையவள்தம் பெருமானை இமையோ ரேத்துந்
திகழெறும்பி ய[ர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

6-91-7145:
பாரிடங்க ளுடன்பாடப் பயின்று நட்டம்
பயில்வானை அயில்வாய சூல மேந்தி
நேரிடும்போர் மிகவல்ல நிமலன் றன்னை
நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும்
பாரிடந்தும் மேலுயர்ந்துங் காணா வண்ணம்
பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்க ளேத்துஞ்
சீரெறும்பி ய[ர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

6-91-7146:
கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர்
கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி
ஊர்பலவுந் திரிவானை ஊர தாக
ஒற்றிய[ ருடையனாய் முற்றும் ஆண்டு
பேரெழுத்தொன் றுடையானைப் பிரம னோடு
மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்துஞ்
சீரெறும்பி ய[ர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

6-91-7147:
நீணிலவும் அந்தீயும் நீரும் மற்றை
நெறியிலங்கு மிகுகாலும் ஆகா சமும்
வாணிலவு தாரகையும் மண்ணும் விண்ணும்
மன்னுயிரும் என்னுயிருந் தானாஞ் செம்பொன்
ஆணியென்றும் அஞ்சனமா மலையே யென்றும்
அம்பவளத் திரளென்றும் அறிந்தோ ரேத்துஞ்
சேணெறும்பி ய[ர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

6-91-7148:
அறந்தெரியா ஊத்தைவாய் அறிவில் சிந்தை
ஆரம்பக் குண்டரோ டயர்த்து நாளும்
மறந்துமரன் திருவடிகள் நினைய மாட்டா
மதியிலியேன் வாழ்வெலாம் வாளா மண்மேற்
பிறந்தநாள் நாளல்ல வாளா வீசன்
பேர்பிதற்றிச் சீரடிமைத் திறத்து ளன்பு
செறிந்தெறும்பி ய[ர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

6-91-7149:
அறிவிலங்கு மனத்தானை அறிவார்க் கன்றி
அறியாதார் தந்திறத்தொன் றறியா தானைப்
பொறியிலங்கு வாளரவம் புனைந்து பூண்ட
புண்ணியனைப் பொருதிரைவாய் நஞ்ச முண்ட
குறியிலங்கு மிடற்றானை மடற்றேன் கொன்றைச்
சடையானை மடைதோறுங் கமல மென்பூச்
செறியெறும்பி ய[ர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே. 

6-91-7150:
அருந்தவத்தின் பெருவலியா லறிவ தன்றி
அடலரக்கன் றடவரையை யெடுத்தான் றிண்டோ ள்
முரிந்துநெரிந் தழிந்துபா தாள முற்று
முன்கைநரம் பினையெடுத்துக் கீதம் பாட
இருந்தவனை ஏழுலகு மாக்கி னானை
எம்மானை கைம்மாவி னுரிவை போர்த்த
திருந்தெறும்பி ய[ர்மலைமேன் மாணிக் கத்தைச்
செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.