HolyIndia.Org

திருக்கடம்பூர் ஆலய தேவாரம்

திருக்கடம்பூர் ஆலயம்
3-121-4101:
இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்
கடறினா ராவர் காற்றுளா ராவர் காதலித் துறைதரு கோயில்
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க் கோவணங் கொண்டு கூத்தாடும்
படிறனார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

3-121-4102:
கழியுளா ரெனவுங் கடலுளா ரெனவுங் காட்டுளார் நாட்டுளா ரெனவும்
வழியுளா ரெனவும் மலையுளா ரெனவும் மண்ணுளார் விண்ணுளா ரெனவுஞ்
சுழியுளா ரெனவுஞ் சுவடுதா மறியார் தொண்டர்வாய் வந்தன சொல்லும்
பழியுளார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

3-121-4103:
காட்டினா ரெனவும் நாட்டினா ரெனவுங் கடுந்தொழிற் காலனைக் காலால்
வீட்டினா ரெனவுஞ் சாந்தவெண் ணீறு பூசியோர் வெண்மதி சடைமேற்
சூட்டினா ரெனவுஞ் சுவடுதா மறியார் சொல்லுள சொல்லு நால்வேதப்
பாட்டினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

3-121-4104:
முருகினார் பொழில்சூழ் உலகினா ரேத்த மொய்த்தபல் கணங்களின் றுயர்கண்
டுருகினா ராகி உறுதிபோந் துள்ளம் ஒண்மையால் ஒளிதிகழ் மேனி
கருகினா ரெல்லாங் கைதொழு தேத்தக் கடலுள்நஞ் சமுதமா வாங்கிப்
பருகினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

3-121-4105:
பொன்னினார் கொன்றை யிருவடங் கிடந்து பொறிகிளர் பூணநுல் புரள
மின்னினார் உருவின் மிளிர்வதோர் அரவம் மேவுவெண் ணீறுமெய் பூசித்
துன்னினார் நால்வர்க் கறமமர்ந் தருளித் தொன்மையார் தோற்றமுங் கேடும்
பன்னினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

3-121-4106:
ஒண்பொனா ரனைய அண்ணல்வாழ் கெனவும் உமையவள் கணவன்வாழ் கெனவும்
அண்பினார் பிரியார் அல்லுநண் பகலும் அடியவர் அடியிணை தொழவே
நண்பினார் எல்லாம் நல்லரென் றேத்த அல்லவர் தீயரென் றேத்தும்
பண்பினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

3-121-4107:
எற்றினார் ஏதும் இடைகொள்வா ரில்லை இருநிலம் வானுல கெல்லை
தெற்றினார் தங்கள் காரண மாகச் செருமலைந் தடியிணை சேர்வான்
முற்றினார் வாழும் மும்மதில் வேவ மூவிலைச் சூலமும் மழுவும்
பற்றினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

3-121-4108:
ஒலிசெய்த குழலின் முழவம தியம்ப வோசையால் ஆட லறாத
கலிசெய்த பூதங் கையினா லிடவே காலினாற் பாய்தலும் அரக்கன்
வலிகொள்வர் புலியின் உரிகொள்வ ரேனை வாழ்வுநன் றானுமோர் தலையிற்
பலிகொள்வர் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதி யாரே. 

3-121-4109:
சேற்றினார் பொய்கைத் தாமரை யானுஞ் செங்கண்மா லிவரிரு கூறாத்
தோற்றினார் தோற்றத் தொன்மையை யறியார் துணைமையும் பெருமையுந் தம்மில்
சாற்றினார் சாற்றி யாற்றலோ மென்னச் சரண்கொடுத் தவர்செய்த பாவம்
பாற்றினார் போலும் பந்தண நல்லூர் நின்றவெம் பசுபதியாரே. 

3-121-4110:
கல்லிசை பூணக் கலையொலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
நல்லிசை யாளன் புல்லிசை கேளா நற்றமிழ் ஞானசம் பந்தன்
பல்லிசை பகுவாய்ப் படுதலை யேந்தி மேவிய பந்தண நல்லூர்
சொல்லிய பாடல் பத்தும்வல் லவர்மேல் தொல்வினை சூழகி லாவே. 

6-10-6340:
நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்
நுல்பூண்டார் நுல்மேலோ ராமை பூண்டார்
பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப்
பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி
ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்
அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்
பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 

6-10-6341:
காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்
களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக
ஓடலாற் கருதாதார் ஒற்றி ய[ரார்
உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணாற்
பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தை
குடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப்
பாடலா ராடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 

6-10-6342:
பூதப் படையுடையார் பொங்கு நுலார்
புலித்தோ லுடையினார் போரேற் றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார் 
விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி
ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 

6-10-6343:
நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்
நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்
ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்
ஒலிகடல் வாய்நஞ்சம் மிடற்றி லேற்றார்
வாருலா முலைமடவாள் பாக மேற்றார்
மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்
பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 

6-10-6344:
தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்
துளங்கா மணிமுடியார் தூய நீற்றார்
இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த 
இடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும்
அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்
அருக்கனா யாரழலாய் அடியார் மேலைப்
பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 

6-10-6345:
கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்
கானப்பேர் காதலார் காதல் செய்து
மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்
மானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காண
நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 

6-10-6346:
முற்றா மதிச்சடையார் மூவ ரானார்
மூவுலகு மேத்தும் முதல்வ ரானார்
கற்றார் பரவுங் கழலார் திங்கள்
கங்கையாள் காதலார் காம்பேய் தோளி
பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்
பான்மையா லூழி உலக மானார்
பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 

6-10-6347:
கண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார்
கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப்
பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்
மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப்
பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 

6-10-6348:
ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்
இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்
நீறேறு மேனியார் நீல முண்டார்
நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்
ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி
அனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்
பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. 

6-10-6349:
கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்
காரோணங் காதலார் காதல் செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்
நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்
மல்லூர் மணிமலையின் மேலி ருந்து
வாளரக்கர் கோன்றலையை மாளச் செற்றுப்
பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்
பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.