திருக்கானாட்டுமுள்ளூர் ஆலய தேவாரம்
திருக்கானாட்டுமுள்ளூர் ஆலயம்2-86-2399:
உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம
செயல்தீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்
மிகவேத்தி நித்தம் நினைமின்
வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து
வளர்கங்குல் நங்கை வெருவ
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்
திருநாரை ய[ர்கை தொழவே.
2-86-2400:
ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற
பிணிநோ யொருங்கும் உயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி
விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூதப் படையா னியங்கு
விடையான் இலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
திருநாரை ய[ர்கை தொழவே.
2-86-2401:
ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
துயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மௌ;ளவந்து பழியுற்ற வார்த்தை
ஒழிவுற்ற வண்ண மகலும்
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று
புகழ்வானு ளோர்கள் புணருந்
தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த
திருநாரை ய[ர்கை தொழவே.
2-86-2402:
தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்
வினைசெற்ற வுற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல
விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை ய[ர்கை தொழவே.
2-86-2403:
வசையப ராதமாய வுவரோத நீங்குந்
தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு
விரிநுலர் விண்ணும் நிலனும்
இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி
யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்
திருநாரை ய[ர்கை தொழவே.
2-86-2404:
உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
உணர்வாக்கும் உண்மை உலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்
அரவார்த்த அண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற
திருநாரை ய[ர்கை தொழவே.
2-86-2405:
தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து
வருதிக் குழன்ற உடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று
நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச்
சரமுன் றெரிந்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்
திருநாரை ய[ர்கை தொழவே.
2-86-2406:
உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்
நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்
அழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்
அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை ய[ர்கை தொழவே.
2-86-2407:
வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க
பகைதீர்க்கு மேய வுடலில்
தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
கரவைக் கரந்து திகழுஞ்
சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத்
திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத்
திருநாரை ய[ர்கை தொழவே.
2-86-2408:
மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்
வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்
ஒலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும்
உரைமாயும் வண்ணம் அழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை ய[ர்கை தொழவே.
2-86-2409:
எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை
பெருமானை உள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத்
திருநாரை ய[ர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
உரைமாலை பத்தும் மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க
துளதென்பர் செம்மை யினரே.
3-102-3890:
காம்பினை வென்றமென் தோளிபாகங் கலந்தான் நலந்தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மாமடுவின் திருநாரை ய[ர்மேய
பூம்புனல் சேர்புரி புன்சடையான் புலியின் னுரிதோன்மேற்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.
3-102-3891:
தீவினை யாயின தீர்க்கநின்றான் திருநாரை ய[ர்மேயான்
பூவினை மேவு சடைமுடியான் புடைசூழப் பலபூதம்
ஆவினில் ஐந்துங்கொண் டாட்டுகந்தான் அடங்கார் மதில்மூன்றும்
ஏவினை யெய்தழித் தான்கழலே பரவா எழுவோமே.
3-102-3892:
மாயவன் சேயவன் வெள்ளியவன் விடஞ்சேரும் மைமிடற்றன்
ஆயவ னாகியோர் அந்தரமும் மவனென்று வரையாகந்
தீயவன் நீரவன் பூமியவன் திருநாரை ய[ர்தன்னில்
மேயவ னைத்தொழு வாரவர்மேல் வினையாயின வீடுமே.
3-102-3893:
துஞ்சிரு ளாடுவர் தூமுறுவல் துளங்கும் உடம்பினராய்
அஞ்சுட ராரெரி யாடுவர்ஆர் அழலார் விழிக்கண்ணி
னஞ்சுமிழ் நாகம் அரைக்கசைப்பர் நலனோங்கு நாரைய[ர்
எஞ்சிவ னார்க்கடி மைப்படுவார்க் கினியில்லை யேதமே.
3-102-3894:
பொங்கிளங் கொன்றையி னார்கடலில் விடமுண் டிமையோர்கள்
தங்களை ஆரிடர் தீரநின்ற தலைவர் சடைமேலோர்
திங்களை வைத்தனல் ஆடலினார் திருநாரை ய[ர்மேய
வெங்கனல் வெண்ணீ றணியவல்லார் அவரே விழுமியரே.
3-102-3895:
பாருறு வாய்மையி னார்பரவும் பரமேட்டி பைங்கொன்றைத்
தாருறு மார்புடை யான்மலையின் தலைவன் மலைமகளைச்
சீருறு மாமறு கிற்சிறைவண் டறையுந் திருநாரை
ய[ருறை யெம்மிறை வர்க்கிவை யொன்றொடொன் றொவ்வாவே.
3-102-3896:
கள்ளி இடுதலை யேந்துகையர் கரிகாடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடைதன்மேன் மிளிரா டரவார்த்து
நள்ளிருள் நட்டம தாடுவர்நன் னலன்ஓங்கு நாரைய[ர்
உள்ளிய போழ்திலெம் மேல்வருவல் வினையாயின வோடுமே.
3-102-3897:
நாமம் எனைப்பல வும்முடையான் நலனோங்கு நாரைய[ர்
தாமொம் மெனப்பறை யாழ்குழ றாளார் கழல்பயில
ஈம விளக்கெரி சூழ்சுடலை யியம்பு மிடுகாட்டிற்
சாமம் உரைக்கநின் றாடுவானுந் தழலாய சங்கரனே.
3-102-3898:
ஊனுடை வெண்டலை கொண்டுழல்வான் ஒளிர்புன் சடைமேலோர்
வானிடை வெண்மதி வைத்துகந்தான் வரிவண்டி யாழ்முரலத்
தேனுடை மாமலர் அன்னம்வைகுந் திருநாரை ய[ர்மேய
ஆனிடை யைந்துகந் தானடியே பரவா அடைவோமே.
3-102-3899:
தூசு புனைதுவ ராடைமேவுந் தொழிலா ருடம்பினிலுள்
மாசு புனைந்துடை நீத்தவர்கள் மயல்நீர்மை கேளாதே
தேசுடை யீர்கள் தெளிந்தடைமின் திருநாரை ய[ர்தன்னில்
பூசு பொடித்தலை வர்அடியார் அடியே பொருத்தமே.
3-102-3900:
தண்மதி தாழ்பொழில் சூழ்புகலித் தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்மதி சேர்சடை யான்உறையுந் திருநாரை ய[ர்தன்மேற்
பண்மதி யாற்சொன்ன பாடல்பத்தும் பயின்றார் வினைபோகி
மண்மதி யாதுபோய் வான்புகுவர் வானோர் எதிர்கொளவே.
3-107-3945:
கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
உடலிடை யிற்பொடிப் பூசவல்லான் உமையோ டொருபாகன்
அடலிடை யிற்சிலை தாங்கியெய்த அம்மான் அடியார்மேல்
நடலைவி னைத்தொகை தீர்த்துகந் தானிடம் நாரைய[ர்தானே.
3-107-3946:
விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபூ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமான் எரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை ய[ரானென்
றெண்ணுமின் நும்வினை போகும்வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே.
3-107-3947:
தோடொரு காதொரு காதுசேர்ந்த குழையான் இழைதோன்றும்
பீடொரு கால்பிரி யாதுநின்ற பிறையான் மறையோதி
நாடொரு காலமுஞ் சேரநின்ற திருநாரை ய[ரானைப்
பாடுமின் நீர்பழி போகும்வண்ணம் பயிலும் உயர்வாமே.
3-107-3948:
வெண்ணில வஞ்சடை சேரவைத்து விளங்குந் தலையேந்திப்
பெண்ணில மர்ந்தொரு கூறதாய பெருமான் அருளார்ந்த
அண்ணல்மன் னியுறை கோயிலாகும் அணிநாரை ய[ர்தன்னை
நண்ணல மர்ந்துற வாக்குமின்கள் நடலை கரிசறுமே.
3-107-3949:
வானமர் தீவளி நீர்நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊனமர் இன்னுயிர் தீங்குகுற்ற முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான் திருநாரை ய[ரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா கொடுவல் வினைதானே.
3-107-3950:
கொக்கிற குங்குளிர் சென்னிமத்தங் குலாய மலர்சூடி
அக்கர வோடரை யார்த்துகந்த அழகன் குழகாக
நக்கம ருந்திரு மேனியாளன் திருநாரை ய[ர்மேவிப்
புக்கம ரும்மனத் தோர்கள்தம்மைப் புணரும் புகல்தானே.
3-107-3951:
ஊழியும் இன்பமுங் காலமாகி உயருந் தவமாகி
ஏழிசை யின்பொருள் வாழும்வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகை யும்பல ஞாயிறாகி நளிர்நாரை ய[ர்தன்னில்
வாழியர் மேதகு மைந்தர்செய்யும் வகையின் விளைவாமே.
3-107-3952:
கூசமி லாதரக் கன்வரையைக் குலுங்க எடுத்தான்றோள்
நாசம தாகி இறஅடர்த்த விரலான் கரவாதார்
பேசவி யப்பொடு பேணநின்ற பெரியோன் இடம்போலுந்
தேசமு றப்புகழ் செம்மைபெற்ற திருநாரை ய[ர்தானே.
3-107-3953:
பூமக னும்மவ னைப்பயந்த புயலார் நிறத்தானும்
ஆமள வுந்திரிந் தேத்திக்காண்டல் அறிதற் கரியானுர்
பாமரு வுங்குணத் தோர்கள்ஈண்டிப் பலவும் பணிசெய்யுந்
தேமரு வுந்திகழ் சோலைசூழ்ந்த திருநாரை ய[ர்தானே.
3-107-3954:
வெற்றரை யாகிய வேடங்காட்டித் திரிவார் துவராடை
உற்றரை யோர்கள் உரைக்குஞ்சொல்லை உணரா தெழுமின்கள்
குற்றமி லாததோர் கொள்கையெம்மான் குழகன் தொழிலாரப்
பெற்றர வாட்டி வரும்பெருமான் திருநாரை ய[ர்சேர்வே.
3-107-3955:
பாடிய லுந்திரை சூழ்புகலித் திருஞான சம்பந்தன்
சேடிய லும்புக ழோங்குசெம்மைத் திருநாரை ய[ரான்மேற்
பாடிய தண்டமிழ் மாலைபத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையி னார்க்குநீங்கும் அவலக் கடல்தானே.
5-55-5780:
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூற னாகிலுங் கூன்பிறை சூடிலும்
நாறு பூம்பொழில் நாரைய[ர் நம்பனுக்
காறு சூடலும் அம்ம அழகிதே.
5-55-5781:
புள்ளி கொண்ட புலியுரி யாடையும்
வெள்ளி கொண்டவெண் பூதிமெய் யாடலும்
நள்ளி தெண்டிரை நாரைய[ ரான்நஞ்சை
அள்ளி யுண்டலும் அம்ம அழகிதே.
5-55-5782:
வேடு தங்கிய வேடமும் வெண்டலை
ஓடு தங்கிய வுண்பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரைய[ ரான்நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.
5-55-5783:
கொக்கின் று{வலுங் கூவிளங் கண்ணியும்
மிக்க வெண்டலை மாலை விரிசடை
நக்க னாகிலும் நாரைய[ர் நம்பனுக்
கக்கி னாரமும் அம்ம அழகிதே.
5-55-5784:
வடிகொள் வெண்மழு மானமர் கைகளும்
பொடிகொள் செம்பவ ளம்புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர்திரு நாரைய[ர்
அடிகள் தம்வடி வம்ம அழகிதே.
5-55-5785:
சூல மல்கிய கையுஞ் சுடரொடு
பாலு நெய்தயி ராடிய பான்மையும்
ஞால மல்கிய நாரைய[ர் நம்பனுக்
கால நீழலும் அம்ம அழகிதே.
5-55-5786:
பண்ணி னான்மறை பாடலொ டாடலும்
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரைய[ர்
அண்ண லார்செய்கை அம்ம அழகிதே.
5-55-5787:
என்பு பூண்டெரு தேறி இளம்பிறை
மின்பு ரிந்த சடைமேல் விளங்கவே
நன்ப கற்பலி தேரினும் நாரைய[ர்
அன்ப னுக்கது அம்ம அழகிதே.
5-55-5788:
முரலுங் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவி னின்றெரி யாடலு நீடுவான்
நரலும் வாரிநன் னாரைய[ர் நம்பனுக்
கரவும் பூணுதல் அம்ம அழகிதே.
5-55-5789:
கடுக்கை யஞ்சடை யன்கயி லைம்மலை
எடுத்த வாளரக் கன்றலை ஈரைஞ்சும்
நடுக்கம் வந்திற நாரைய[ ரான்விரல்
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.
6-74-6977:
சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச்
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானை
அல்லானைப் பகலானை அரியான் றன்னை
அடியார்கட் கெளியானை அரண்மூன் றெய்த
வில்லானைச் சரம்விசயற் கருள்செய் தானை
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி யேத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் றன்னை
நாரைய[ர் நன்னகரிற் கண்டேன் நானே.
6-74-6978:
பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் றன்னைப்
பாரொடுநீர் சுடர்படர்காற் றாயி னானை
மஞ்சுண்ட வானாகி வானந் தன்னில்
மதியாகி மதிசடைமேல் வைத்தான் றன்னை
நெஞ்சுண்டென் நினைவாகி நின்றான் றன்னை
நெடுங்கடலைக் கடைந்தவர்போய் நீங்க வோங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக் கமுதீந் தானை
நாரைய[ர் நன்னகரிற் கண்டேன் நானே.
6-74-6979:
மூவாதி யாவர்க்கும் மூத்தான் றன்னை
முடியாதே முதல்நடுவு முடிவா னானைத்
தேவாதி தேவர்கட்குந் தேவன் றன்னைத்
திசைமுகன்றன் சிரமொன்று சிதைத்தான் றன்னை
ஆவாத அடலேறொன் றுடையான் றன்னை
அடியேற்கு நினைதோறும் அண்ணிக் கின்ற
நாவானை நாவினில்நல் லுரையா னானை
நாரைய[ர் நன்னகரிற் கண்டேன் நானே.
6-74-6980:
செம்பொன்னை நன்பவளந் திகழு முத்தைச்
செழுமணியைத் தொழுமவர்தஞ் சித்தத் தானை
வம்பவிழும் மலர்க்கணைவேள் உலக்க நோக்கி
மகிழ்ந்தானை மதிற்கச்சி மன்னு கின்ற
கம்பனையெங் கயிலாய மலையான் றன்னைக்
கழுகினொடு காகுத்தன் கருதி யேத்தும்
நம்பனையெம் பெருமானை நாதன் றன்னை
நாரைய[ர் நன்னகரிற் கண்டேன் நானே.
6-74-6981:
புரையுடைய கரியுரிவைப் போர்வை யானைப்
புரிசடைமேற் புனலடைத்த புனிதன் றன்னை
விரையுடைய வெள்ளெருக்கங் கண்ணி யானை
வெண்ணீறு செம்மேனி விரவி னானை
வரையுடைய மகள்தவஞ்செய் மணாளன் றன்னை
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரைவிடைநற் கொடியுடைய நாதன் றன்னை
நாரைய[ர் நன்னகரிற் கண்டேன் நானே.
6-74-6982:
பிறவாதும் இறவாதும் பெருகி னானைப்
பேய்பாட நடமாடும் பித்தன் றன்னை
மறவாத மனத்தகத்து மன்னி னானை
மலையானைக் கடலானை வனத்து ளானை
உறவானைப் பகையானை உயிரா னானை
உள்ளானைப் புறத்தானை ஓசை யானை
நறவாரும் பூங்கொன்றை சூடி னானை
நாரைய[ர் நன்னகரிற் கண்டேன் நானே.
6-74-6983:
தக்கனது வேள்விகெடச் சாடி னானைத்
தலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்
கொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்
கோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை
அறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை
நக்கனைவக் கரையானை நள்ளாற் றானை
நாரைய[ர் நன்னகரிற் கண்டேன் நானே.
6-74-6984:
அரிபிரமர் தொழுதேத்தும் அத்தன் றன்னை
அந்தகனுக் கந்தகனை அளக்க லாகா
எரிபுரியும் இலிங்கபுரா ணத்து ளானை
எண்ணாகிப் பண்ணா ரெழுத்தா னானைத்
திரிபுரஞ்செற் றொருமூவர்க் கருள்செய் தானைச்
சிலந்திக்கும் அரசளித்த செல்வன் றன்னை
நரிவிரவு காட்டகத்தி லாட லானை
நாரைய[ர் நன்னகரிற் கண்டேன் நானே.
6-74-6985:
ஆலால மிடற்றணியா அடக்கி னானை
ஆலதன்கீழ் அறம்நால்வர்க் கருள்செய் தானைப்
பாலாகித் தேனாகிப் பழமு மாகிப்
பைங்கரும்பா யங்கருந்துஞ் சுவையா னானை
மேலாய வேதியர்க்கு வேள்வி யாகி
வேள்வியினின் பயனாய விமலன் றன்னை
நாலாய மறைக்கிறைவ னாயி னானை
நாரைய[ர் நன்னகரிற் கண்டேன் நானே.
6-74-6986:
மீளாத ஆளென்னை உடையான் றன்னை
வெளிசெய்த வழிபாடு மேவி னானை
மாளாமை மறையவனுக் குயிரும் வைத்து
வன்கூற்றின் உயிர்மாள உதைத்தான் றன்னைத்
தோளாண்மை கருதிவரை யெடுத்த தூர்த்தன்
தோள்வலியுந் தாள்வலியுந் தொலைவித் தாங்கே
நாளோடு வாள்கொடுத்த நம்பன் றன்னை
நாரைய[ர் நன்னகரிற் கண்டேன் நானே.