HolyIndia.Org

திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) ஆலய தேவாரம்

திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) ஆலயம்
2-43-1928:
கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானார் உறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வே@ரே. 

2-43-1929:
தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்
ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்
மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்
பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வே@ரே. 

2-43-1930:
வாசநலஞ் செய்திமையோர் நாடோ றும் மலர்தூவ
ஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமே
பூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வே@ரே. 

2-43-1931:
மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடை
ஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்
ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்
போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வே@ரே. 

2-43-1932:
கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வே@ரே. 

2-43-1933:
திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வே@ரே. 

2-43-1934:
அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப்
பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்
பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்து
புத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வே@ரே. 

2-43-1935:
பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்
எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்
புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வே@ரே. 

2-43-1936:
வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்
ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்
போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வே@ரே. 

2-43-1937:
கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமே
தடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்
விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காப்
புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வே@ரே. 

2-43-1938:
செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்
பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வே@ரைக்
கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்
மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே. 

5-79-6014:
வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப் 
புள்ளி ருக்குவே @ரரன் பொற்கழல் 
உள்ளி ருக்கு முணர்ச்சியில் லாதவர் 
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே. 

5-79-6015:
மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க் 
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே 
போற்ற வல்லிரேற் புள்ளிருக் குவே@ர் 
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே. 

5-79-6016:
அரும றையனை ஆணொடு பெண்ணனைக் 
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப் 
புரிவெண் ணூலனைப் புள்ளிருக் குவே@ர் 
உருகி நைபவர் உள்ளங் குளிருமே. 

5-79-6017:
தன்னு ருவை யொருவர்க் கறிவொணா 
மின்னு ருவனை மேனிவெண் ணீற்றனைப் 
பொன்னு ருவனைப் புள்ளிருக் குவே@ர் 
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே. 

5-79-6018:
செங்கண் மால்பிர மற்கு மறிவொணா 
அங்கி யின்னுரு வாகி அழல்வதோர் 
பொங்க ரவனைப் புள்ளிருக் குவே@ர் 
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே. 

5-79-6019:
குற்ற மில்லியைக் கோலச் சிலையினாற் 
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப் 
புற்ற ரவனைப் புள்ளிருக் குவே@ர் 
பற்ற வல்லவர் பாவம் பறையுமே. 

5-79-6020:
கையி னோடுகால் கட்டி யுமரெலாம் 
ஐயன் வீடினன் என்பதன் முன்னம்நீர் 
பொய்யி லாவரன் புள்ளிருக் குவே@ர் 
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே. 

5-79-6021:
உள்ளம் உள்கி உகந்து சிவனென்று 
மௌ;ள வுள்க வினைகெடும் மெய்ம்மையே 
புள்ளி னார்பணி புள்ளிருக் குவே@ர் 
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. 

5-79-6022:
அரக்க னார்தலை பத்தும் அழிதர 
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய 
பொருப்ப னாருறை புள்ளிருக் குவே@ர் 
விருப்பி னாற்றொழு வார்வினை வீடுமே. 

6-54-6784:
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் றன்னை
நேமிவான் படையால்நீ ளுரவோ னாகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறிவாள் அரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 

6-54-6785:
சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தை யுள்ளே 
திகழ்ந்தானைச் சிவன்றன்னைத் தேவ தேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக் 
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பொன் றில்லாப் 
பெம்மானைக் கைம்மாவி னுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 

6-54-6786:
பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவு மேத்தும் இறைவன் றன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே ய[றும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 

6-54-6787:
இருளாய உள்ளத்தி னிருளை நீக்கி
இடர்பாவங் கெடுத்தேழை யேனை யுய்யத்
தெருளாத சிந்தைதனைத் தெருட்டித் தன்போற்
சிவலோக நெறியறியச் சிந்தை தந்த
அருளானை ஆதிமா தவத்து ளானை
ஆறங்கம் நால்வேதத் தப்பால் நின்ற
பொருளானைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 

6-54-6788:
மின்னுருவை விண்ணகத்தி லொன்றாய் மிக்கு 
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த்தாழ் புனலின் நான்காய்த்
தரணிதலத் தஞ்சாகி யெஞ்சாத் தஞ்ச
மன்னுருவை வான்பவளக் கொழுந்தை முத்தை
வளரொளியை வயிரத்தை மாசொன் றில்லாப்
பொன்னுருவைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 

6-54-6789:
அறையார்பொற் கழலார்ப்ப அணியார் தில்லை 
அம்பலத்துள் நடமாடும் அழகன் றன்னைக்
கறையார்மூ விலைநெடுவேற் கடவுள் தன்னைக்
கடல்நாகைக் காரோணங் கருதி னானை
இறையானை என்னுள்ளத் துள்ளே விள்ளா 
திருந்தானை ஏழ்பொழிலுந் தாங்கி நின்ற
பொறையானைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 

6-54-6790:
நெருப்பனைய திருமேனி வெண்ணீற் றானை
நீங்காதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை
வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோ டீங்கோய் நீங்கா 
இறையவனை எனையாலுங் கயிலை யென்னும்
பொருப்பவனைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 

6-54-6791:
பேரா யிரம்பரவி வானோ ரேத்தும் 
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமுந் தந்திரமும் மருந்து மாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் றன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 

6-54-6792:
பண்ணியனைப் பைங்கொடியாள் பாகன் றன்னைப்
படர்சடைமேற் புனல்கரந்த படிறன் றன்னை
நண்ணியனை யென்னாக்கித் தன்னா னானை
நான்மறையின் நற்பொருளை நளிர்வெண் டிங்கள்
கண்ணியனைக் கடியநடை விடையொன் றேறுங்
காரணனை நாரணனைக் கமலத் தோங்கும்
புண்ணியனைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே. 

6-54-6793:
இறுத்தானை இலங்கையர்கோன் சிரங்கள் பத்தும்
எழுநரம்பின் இன்னிசைகேட் டின்புற் றானை
அறுத்தானை அடியார்தம் அருநோய் பாவம்
அலைகடலில் ஆலால முண்டு கண்டங்
கறுத்தானைக் கண்ணழலாற் காம னாகங்
காய்ந்தானைக் கனன்மழுவுங் கலையு மங்கை
பொறுத்தானைப் புள்ளிருக்கு வே@ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.