HolyIndia.Org

திருக்குருகாவூர் வெள்ளடை ஆலய தேவாரம்

திருக்குருகாவூர் வெள்ளடை ஆலயம்
3-124-4131:
சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்
தெண்ணரும் பல்கணம் ஏத்தநின் றாடுவார்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே. 

3-124-4132:
திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமக ளோடுடன் ஆடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாளர வாட்டுகந் தீரே. 

3-124-4133:
அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்ன
நடைமட மங்கையோர் பாகம் நயந்து
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே. 

3-124-4134:
வளங்கிளர் கங்கை மடவர லோடு
களம்பட ஆடுதிர் காடரங் காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே. 

3-124-4135:
சுரிகுழல் நல்ல துடியிடை யோடு
பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை எந்தை பிரானே. 

3-124-4136:
காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத்
தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்துகொண் டாட்டுகந் தீரே. 

7-29-7513:
இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் 
பித்தரே என்றும்மைப் பேசுவார் பிறரெல்லாம் 
முத்தினை மணிதன்னை மாணிக்கம் முளைத்தெழுந்த 
வித்தனே குருகாவு[ர் வெள்ளடை நீயன்றே. 

7-29-7514:
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் 
வாவியிற் கயல்பாயக் குளத்திடை மடைதோறுங் 
காவியுங் குவளையுங் கமலஞ்செங் கழுநீரும் 
மேவிய குருகாவு[ர் வெள்ளடை நீயன்றே. 

7-29-7515:
பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் 
ஓடுநன் கலனாக உண்பலிக் குழல்வானே 
காடுநல் லிடமாகக் கடுவிருள் நடமாடும் 
வேடனே குருகாவு[ர் வெள்ளடை நீயன்றே. 

7-29-7516:
வெப்பொடு பிணியெல்லாந் தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் 
ஒப்புடை ஒளிநீலம் ஓங்கிய மலர்ப்பொய்கை 
அப்படி அழகாய அணிநடை மடவன்னம் 
மெய்ப்படு குருகாவு[ர் வெள்ளடை நீயன்றே. 

7-29-7517:
வரும்பழி வாராமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் 
சுரும்புடை மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றானே 
அரும்புடை மலர்ப்பொய்கை அல்லியும் மல்லிகையும் 
விரும்பிய குருகாவு[ர் வெள்ளடை நீயன்றே. 

7-29-7518:
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் 
கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய் 
மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே 
விண்ணிடைக் குருகாவு[ர் வெள்ளடை நீயன்றே. 

7-29-7519:
போந்தனை தரியாமே நமன்தமர் புகுந்தென்னை 
நோந்தன செய்தாலும் நுன்னல தறியேன்நான் 
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை ஆட்கொண்ட 
வேந்தனே குருகாவு[ர் வெள்ளடை நீயன்றே. 

7-29-7520:
மலக்கில்நின் னடியார்கள் மனத்திடை மால்தீர்ப்பாய் 
சலச்சல மிடுக்குடைய தருமனார் தமரென்னைக் 
கலக்குவான் வந்தாலுங் கடுந்துயர் வாராமே 
விலக்குவாய் குருகாவு[ர் வெள்ளடை நீயன்றே. 

7-29-7521:
படுவிப்பாய் உனக்கேயாட் பலரையும் பணியாமே 
தொடுவிப்பாய் துகிலொடுபொன் தோலுடுத் துழல்வானே 
கெடுவிப்பாய் அல்லாதார் கேடிலாப் பொன்னடிக்கே 
விடுவிப்பாய் குருகாவு[ர் வெள்ளடை நீயன்றே. 

7-29-7522:
வளங்கனி பொழில்மல்கு வயலணிந் தழகாய 
விளங்கொளி குருகாவு[ர் வெள்ளடை உறைவானை 
இளங்கிளை ஆரூரன் வனப்பகை யவளப்பன் 
உளங்குளிர் தமிழ்மாலை பத்தர்கட் குரையாமே.