HolyIndia.Org

திருவிடைவாய் , விடைவாயப்பர், புண்ணியகோட்டீஸ்வரர் ஆலயம்

விடைவாயப்பர், புண்ணியகோட்டீஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவிடைவாய்
இறைவன் பெயர் : விடைவாயப்பர், புண்ணியகோட்டீஸ்வரர்
இறைவி பெயர் : உமையம்மை, அபிராமி.
எப்படிப் போவது : தஞ்சாவூர் மாவட்டம், கொரடாச்சேரி - கூத்தாநல்லூர் பாதையில் வெண்ணாற்றுப் பாலத்திற்கு அருகில் பிரியும் "திருவிடைவாயில்" என்னும் வழிகாட்டிப் பாதையில் 2 கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். தற்போது திருவிடைவாயில் என்று வழங்குகிறது.
சிவஸ்தலம் பெயர் : திருவிடைவாய்
ஆலயம் பற்றி :
தல வரலாறு சோழநாட்டு காவிரி தென்கரையில் இது 114வது தலமாகும். இத்தலம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டத் திருமுறைத் தலமாகும். கி. பி. 1917ல் இத்தலம் கண்டெடுக்கப்பட்டது. மேடு ஒன்றினை வெட்டியெடுக்கும்போது உள்ளே கோயில் இருந்ததாகவும், தோண்டிப் பார்க்கையில் கோயிலுக்குள் அத்தலத்தைப் பற்றிய திருஞானசம்பந்தர் தேவாரம் கல்வெட்டில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. சிறப்புக்கள் ஐயடிகள் காடவர்கோன் தம்முடைய க்ஷேத்திரக் கோவையில் "தென் இடைவாய்" என்று குறிப்பிட்டுப்பாடுகிறார். கோயிலில் தலப்பதிக கல்வெட்டு உள்ளது. ...திருசிற்றம்பலம்...

திருவிடைவாய் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.89 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெண்ணியூர் ( கோயில் வெண்ணி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.92 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பூவனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.95 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாதாளீச்சரம் (பாமணி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.13 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதலையாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.87 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பேரெயில் (ஓகைப்பேரையூர் ,வங்காரப் பேரையூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.12 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • குடவாசல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.28 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசக்கரப்பள்ளி ( அய்யம்பேட்டை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.83 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஇரும்பூளை (ஆலங்குடி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.14 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகரவீரம் (கரையுபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.35 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.