HolyIndia.Org

திருவெண்பாக்கம் (பூண்டி) , ஊண்றீஸ்வரர் ஆலயம்

ஊண்றீஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவெண்பாக்கம் (பூண்டி)
இறைவன் பெயர் : ஊண்றீஸ்வரர்
இறைவி பெயர் : மின்னொளி அம்மை
எப்படிப் போவது : திருவள்ளூர் நகரில் இருந்து சுமார் 12 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. திருவள்ளூரில் இருந்து நகரப் பேருந்து T-41 மற்றும் T-52 ஆகியவை பூண்டி செல்கின்றன. திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை பேருந்தில் சென்று வழியில் நெய்வேலி கூட்டு சாலையில் இறங்கி 1 கி.மி. சென்றும
சிவஸ்தலம் பெயர் : திருவெண்பாக்கம் (பூண்டி)
ஆலயம் பற்றி :

தேவார காலத்தில் இருந்த திருவெண்பாக்கம் ஆலயம் சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முனபு பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது நீரில் மூழ்கி விட்டது. இப்போதுள்ள ஆலயம் பூண்டி நீர்த்தேக்கம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு 1968-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன.

சுந்தரர் திருவொற்றியூரில் தங்கி இருக்கும் போது சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் இருந்து பிரிய மாட்டேன் என்று சபதம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சமயம் திருவாரூரில் உள்ள பரவை நாச்சியாரை நினைத்து திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் கண் பார்வை இழந்தார். பிறகு திருமுல்லைவாயில் இறைவனை தரிசித்து பின் திருவெண்பாக்கம் வந்த போது இங்குள்ள இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார். கண்ணொளிக்குப் பதிலாக ஊண்றுகோல் கொடுத்த இறைவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் இறைவனைப் பார்த்து நீர் உள்ளே இருக்கிறீரா என்று கேட்க இறைவனும் "உளோம் போகீர் " என்று பதில் அளிக்கிறார். ஊண்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை வீசியெறிய அது நந்தியின் மேல் பட்டு அதன் கொம்பு உடைந்தது. இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நிதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து காணப்படுகிறது.

கோவில் அமைப்பு; இப்போதுள்ள ஆலயத்திற்கு கிழக்கிலும், தெற்கிலும் வாயில்கள் இருந்தாலும், பிரதான சாலையில் உள்ள தெற்கு நுழைவு வாயில் தான் முக்கிய வாயிலாக உள்ளது. கிழக்கு நுழைவு வாயில் முன் புதர்கள் மண்டிக் கிடப்பதால் அது உபயோகத்தில் இல்லை. தெற்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் வெளிப் பிரகாரத்தில் வழித்துணை விநாயகர் ஒரு சிறிய சந்நிதியில் காணப்படுகிறார். கிழக்கு வெளிப் பிரகாரத்தில் சற்று உயரமான மண்டபத்தில் நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி, அம்பாள் சந்நிதி மற்றும் இதர சந்நிதிகள் எல்லாம் சற்று உயரமான மண்டபத்தினுள் அமைந்திருக்கின்றன. கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே ஊண்றீஸ்வரர் சந்நிதி உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி உள்ளார். தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் நேர் எதிரே அம்பாள் மின்னொளி அம்மை சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கண் பார்வை இழந்த சுந்தரருக்கு அவ்வப்போது மின்னலாகத் தோன்றி வழிகாட்டியதால் அம்பாளுக்கு மின்னொளி அம்மை என்று பெயர். சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளை தனித்தனியாக வலம் வர வசதிகள் உள்ளன. சுவாமி சந்நிதி கருவறைச் சுற்றில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகர், மகாலட்சுமி சந்நிதிகள் பார்த்து பரவசமடைய வேண்டிவை. கருவறை கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பவர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, துர்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதி முன் நந்தி, பலிபீடம், அருகில் சுந்தரர் ஊண்றுகோலுடன் நின்று கொண்டிருக்கிறார். உள் மண்டபத்தில் பைரவர், நால்வர் சந்நிதி, அருணகிரிநாதர்,சூரியன், நவக்கிரகங்கள் சந்நிதி ஆகியவை கிழக்குப பக்கம் இருக்கின்றன.

திருவெண்பாக்கம் ஊண்றீஸ்வரர் ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்ததாக உள்ளது.

...திருசிற்றம்பலம்...

திருவெண்பாக்கம் (பூண்டி) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருப்பாசூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.88 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.42 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கள்ளில் ( திருக்கண்டிலம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 23.12 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவிற்கோலம் ( கூவம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.18 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • இலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 25.02 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஊறல் (தக்கோலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 27.66 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 28.46 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேற்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 29.97 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவலிதாயம் (சென்னை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 35.58 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமாற்பேறு (திருமால்பூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 40.96 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.