சிவஸ்தலம் பெயர் : | தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) |
இறைவன் பெயர் : | சுடர்கொழுந்தீசர், கடந்தை நாதர், புஷ்பவனேஸ்வரர் |
இறைவி பெயர் : | கடந்தை நாயகி, ஆமோதனாம்பிகை |
எப்படிப் போவது : | தேவாரப் பாடல்களில் தூங்கானை மாடம் என்று குறிப்பிடப்பட்டுள்ள சிவஸ்தலம் தற்போது பெண்ணாகடம் அல்லது பெண்ணாடம் என்று வழங்கப்படுகிறது. விருத்தாசலம் நகரில் இருந்து தென்மேற்கே 18 Km தொலைவில் பெண்ணாடம் இருக்கிறது. சென்னையில் இருந்து பெண்ணாடம் சுமார் 235 Km தொலைவில |
சிவஸ்தலம் பெயர் : | தூங்கானை மாடம் (பெண்ணாகடம்) |
ஆலயம் பற்றி : தேவகன்னியர், தெய்வலோகப் பசுவான காமதேனு, வெள்ளை யானை இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இத்தலம் பெண்ணாகடம் (பெண் + ஆ + கடம்) என்று வழங்குகிறது. ஆலயத்திற்கு தூங்கானை மாடம் என்று பெயர்.
திருநாவுக்கரசர் தூங்கானைமாடம் தலத்திற்கு வந்தபோது தான் சமணநெறியில் ஈடுபட்டு சிலகாலம் இருந்ததை நினைத்து வருந்தினார். சமணர் குழுவிலே, சமண நெறியிலே வாழ்ந்துவந்த இந்த மெய்யுடம்புடன் வாழ விரும்பவில்ல என்றும் சிவபெருமானுடைய அடையாளங்களை என் உடம்பிலே இட்டால் நான் வாழ்வேன் என்றும் வேண்டிக்கொண்டு திருப்பதிகம் ஒன்று பாடினார்.
...திருசிற்றம்பலம்... |