HolyIndia.Org

திருப்பாண்டிக்கொடுமுடி , கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி ஆலயம்

கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி
இறைவன் பெயர் : கொடுமுடிநாதர், மகுடேஸ்வரசுவாமி
இறைவி பெயர் : வடிவுடைநாயகி, சௌடாம்பிகை
எப்படிப் போவது : ஈரோட்டில் இருந்து சுமார் 40 Km தொலைவில் கொடுமுடி உள்ளது. கொடுமுடி ரயில் நிலயம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. கோவில் ரயில் நிலயத்திற்கு அருகிலேயே உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருப்பாண்டிக்கொடுமுடி
ஆலயம் பற்றி :

கோவில் அமைப்பு: வடமேற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மெற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.

இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். இக்கோவிலில் உமா மகேசுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் ச்ந்திரனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. வடதிசையில் பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் பிரம்மாவின் சந்நிதி உள்ளது. பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் இருந்து, மலயத்துவஜ பாண்டியன், பாறவர்மன் சுந்தரபாண்டியன், பாண்டிய கேசரிவர்மன் முதலிய பாண்டிய மன்னர்கள் நிலம், நகைகள் மற்றும் கிராமங்களை இந்தக் கோவிலுக்கு தானமாக கொடுத்திருப்பது தெரிய வருகிறது.

நமச்சிவாய பதிகம்: திருஞானசம்பந்தர் திருநல்லூர் பெருமணத்தில் சிவபெருமானுடன் ஜோதியில் தன் அடியார்களுடனும், சுற்றத்தாருடனும் கலக்கும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். திருநாவுக்கரசரோ பல்லவ மன்னன் அவரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலினுள் எறியும் போது நமச்சிவாய பதிகம் பாடுகிறார். ஆணால் சுந்தரரோ பாண்டிக்கொடுமுடி வந்து அங்குள்ள இறைவனைக் கண்டு வணங்கி நமச்சிவாய பதிகம் பாடுகிறார். அவர் பாடிய நமச்சிவாய பதிகத்தில் இருந்து ஒரு பாடல்:

...திருசிற்றம்பலம்...

திருப்பாண்டிக்கொடுமுடி அருகில் உள்ள சிவாலயங்கள்

  • கருவூர் (கரூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 24.39 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • வெஞ்சமாக்கூடல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 30.89 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்செங்கோடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 32.98 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநணா (பவானி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 45.75 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஈங்கோய்மலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 57.30 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாட்போக்கி (ரத்னகிரி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 58.29 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகடம்பந்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 59.63 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமுருகபூண்டி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 63.68 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • அவிநாசி (திருப்புக்கொளியூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 68.69 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பராய்த்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 77.09 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.