HolyIndia.Org

திருமுருகபூண்டி , திருமுருகநாதஸ்வாமி ஆலயம்

திருமுருகநாதஸ்வாமி தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருமுருகபூண்டி
இறைவன் பெயர் : திருமுருகநாதஸ்வாமி
இறைவி பெயர் : ஆவுடைநாயகி
எப்படிப் போவது : கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவினாசியில் இருந்து 5 Km தொலைவில், அவினாசி - திருப்பூர் சாலை வழியில் திருமுருகபூண்டி உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருமுருகபூண்டி
ஆலயம் பற்றி :

கோவில் அமைப்பு: மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோவிலில் மற்ற கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாய் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில் சுமார் 2 1/2 அடி உயரம் உள்ளதாக தரிசனம் தருகிறார். மேற்குப்பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் முருகன் சந்நிதி உள்ளது. 5 அடி உயரம் உள்ள இந்த சிற்பம் முன்பக்கம் 5 தலைகளும், பின்பக்கம் ஒரு தலையும் உடையதாக அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் ஆவுடைநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது.

கோவிலுக்கு உள்ளே சண்முக தீர்த்தமும், கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்த பிரமை பிடித்தவர்களை இந்த்ச் சிவஸ்தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தல புராணம்: புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம்.

சேரமான் பெருமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சுந்தரர் திருமுருகபூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார். கவலை அடைந்த சுந்தரர் திருமுருகபூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். இறைவன் நேரில் தோன்றி கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை மீண்டும் சுந்தரரிடம் ஒப்படைத்தார். இதற்குச் சான்று கூறும் வகையில் இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிசுப் பொருள்களை பறி கொடுத்த நிலை ஒன்று, பறி கொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று ஆக இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம். திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும்.

...திருசிற்றம்பலம்...

திருமுருகபூண்டி அருகில் உள்ள சிவாலயங்கள்

  • அவிநாசி (திருப்புக்கொளியூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.31 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநணா (பவானி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 50.46 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பாண்டிக்கொடுமுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 63.68 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்செங்கோடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 68.01 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • வெஞ்சமாக்கூடல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 83.28 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • கருவூர் (கரூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 86.67 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஈங்கோய்மலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 120.95 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாட்போக்கி (ரத்னகிரி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 121.15 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகடம்பந்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 123.16 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பராய்த்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 140.49 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.