HolyIndia.Org

திருக்காறாயில் ( திருக்காரவாசல்) , கண்ணாயிரநாதர் ஆலயம்

கண்ணாயிரநாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருக்காறாயில் ( திருக்காரவாசல்)
இறைவன் பெயர் : கண்ணாயிரநாதர்
இறைவி பெயர் : கைலாயநாயகி
எப்படிப் போவது : திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 13 கி.மி. தெற்கே இத்தலம் உள்ளது. இத்தலத்திற்கு அருகில் திருநெல்லிக்கா, திருகைச்சினம், திருக்கொள்ளிலி ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்களும் உள்ளன.
சிவஸ்தலம் பெயர் : திருக்காறாயில் ( திருக்காரவாசல்)
ஆலயம் பற்றி :
திருக்காறாயில் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்து தியாகராஜர் ஆதிவிடங்கர் எனப்படுகிறார். நடனம் குக்குட நடனம். திருக்காறாயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலமாகும். இங்குள்ள தீர்த்தம் சேஷ தீர்த்தம். இது ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் உள்ளது. புரட்டாசி மாதம் பௌர்ணமி நாளில் இந்திரன் சேஷ தீர்த்தத்தில் நீராடி இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையாரை பூஜிப்பதாக ஐதீகம். ஒவ்வொரு பௌர்ணமியிலும் இந்த சேஷ தீர்த்தத்து நீரைப் பருகி வந்தால் தீராத நோய்களும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையர் என்று பெயர் பெற ஒரு தலபுராண வரலாறு உண்டு.வணிகன் ஒருவன் இத்தலத்து வழியே வர்த்தக நிமித்தமாக வரும் போது இங்குள்ள சேஷ தீர்த்தக்கரையில் இளைப்பாறினான். அவனுடன் வந்த வண்டியில் ஜாதிக்காய் மூட்டைகள் இருந்தன. அவனிடம் திருவிளையாடல் புரிய நினைத்து விநாயகர் ஒரு சிறுவனாக வணிகன் முன்வந்து மூட்டைகளில் என்ன இருக்கிறது என்று கேட்டார். வணிகன் வேண்டுமென்றெ கடுக்காய இருக்கிறது என்று பதில் கூறினான். விநாயகர் புன்னகை புரிந்தார். வணிகன் தான் சேர வேண்டிய இடம் வந்ததும் மூட்டைகளைப் பிரித்துப் பார்க்க அவைகளில் கடுக்காய் இருக்கக் கண்டு திடுக்கிட்டான். ஏதோ தெய்வ குற்றம் செய்து விட்டோம் என்று உணர்ந்த அவன் இறைவனிடம் முறையிட்டு பிழை பொறுத்தருள வேண்டினான். விநாயகப் பெருமான் அவன் முன் காட்சி கொடுத்து கடுக்காயை ஜாதிக்காய்களாக மாற்றி அருள் புரிந்தார். அது முதல் இத்தலத்து விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்ற பெயருடன் இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்....திருசிற்றம்பலம்...

திருக்காறாயில் ( திருக்காரவாசல்) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருநெல்லிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.74 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதெங்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.67 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.24 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவலிவலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.52 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநாட்டியாத்தான்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.81 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகைச்சினம் (கச்சனம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.21 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகொள்ளிக்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.04 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சிற்றேமம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.35 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கோளிலி (திருக்குவளை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.51 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாய்மூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.33 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.