சிவஸ்தலம் பெயர் : | திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர் ) |
இறைவன் பெயர் : | வில்வவனேசுவரர் |
இறைவி பெயர் : | சௌந்தராம்பிகை |
எப்படிப் போவது : | கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி இத்தலத்தை அடையலாம். |
சிவஸ்தலம் பெயர் : | திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர் ) |
ஆலயம் பற்றி : சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும்போது காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி இப்பதிகம் பாடினார். ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது....திருசிற்றம்பலம்... |