HolyIndia.Org

திருஇரும்பூளை (ஆலங்குடி ) , ஆபத்சகாயேசுவரர் ஆலயம்

ஆபத்சகாயேசுவரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருஇரும்பூளை (ஆலங்குடி )
இறைவன் பெயர் : ஆபத்சகாயேசுவரர்
இறைவி பெயர் : ஏலவார் குழலியம்மை
எப்படிப் போவது : கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. நவக்கிரக ஸ்தலங்களில் ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது.
சிவஸ்தலம் பெயர் : திருஇரும்பூளை (ஆலங்குடி )
ஆலயம் பற்றி :

குரு பரிகாரத் தலமாக விளங்கும் ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமையுடையதாகும். மேலும் இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் சாயரட்சை பூஜை காலத்தில் இறைவனை தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. இக்கோவில் திருவாரூரில் இருந்து அரசாண்டு வந்த முசுகுந்த சக்கரவர்த்தியிடம் அமைச்சராக இருந்த அமுதோகர் என்பவரால் கட்டப்பட்டது. அமுதோகர் ஒரு சிறந்த சிவபக்தர். முசுகந்த சக்கரவர்த்தி தனது அமைச்சர் அமுதோகரிடம் அவரது புண்ணியத்தில் பாதியை தனக்கு தத்தம் செய்து தரவேண்டும் என்று கேட்டான். அமைச்சர் மறுக்க அவரின் தலையை வெட்டிவிடும் படி முசுகுந்தன் கூறினான். கொலையாளி அமுதோகர் தலையை வெட்டியவுடன் அமுதோகர் என்ற சப்தம் தலம் முழுவதும் ரீங்காரமிட்டது. தனது தவறை உணர்ந்த முசுகுந்த சக்கரவர்த்தி இத்தலத்து இறைவன் ஆபத்சகாயேஸ்வரரை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றான் என்பது வரலாறு. மற்றுமொரு புராணச் செய்தியின் படி பாற்கடலைக் கடையும் போது உண்டான ஆலகால விஷத்தை இறைவன் சிவபெருமான் உண்டதலம் இதுவாகும். இங்கு ஈசன் ஆலகால விஷத்தை குடித்ததால் இத்தலம் ஆலங்குடி என்று பெயர் பெற்றது. இத்தலத்தில் பாம்பு தீண்டி யாரும் இறப்பதில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

நான்கு புறமும் நீண்ட மதில்களையுடைய இவ்வாலயம் சுமார் 1¼ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.ராஜகோபுரம் 5 நிலைகளையுடையது.இத்தல விநாயகர் கலங்காமற் காத்த விநாயகர் என்று பெயர் பெற்றவர். கோபுர வாயிலில் உள்ளார். ஆலகால விஷத்தால் கலங்கிய தேவ்பர்களைக் கலங்காமல் காத்து அருளியவர். உள்ளே முதல் பிரகாரத்தில் அம்பாள் ஏலவார் குழலியம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் சூரிய பகவானின் சந்நிதி உள்ளது. சூரிய பகவானின் சந்நிதிக்கு தென்புறத்தில் சுந்தரர் சந்நிதி இருக்கிறது. இத்தலத்தில் உள்ள இந்த சுந்தரர் திருமேனி மிகவும் அழகானது. அடுத்து வரும் உள் பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தலிங்கங்கள், நால்வர் சந்நிதி ஆகியவற்றைக் காணலாம். அடுத்துள்ள மகாமண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். விசுவாமித்திரர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளார். இத்தலத்தில் உள்ள அகத்தியரை வழிபட்ட பிறகே இங்குள்ள முருகப்பெருமானை வழிபட வேண்டும் இதனால் பேய், பிசாசு ஆகியவற்றின் அச்சம் நீங்கும். இங்குள்ள நாகர் சந்நிதியில் தோஷ நிவர்த்திப் பரிகாரம் செய்து கொண்டால் நாகதோஷம் விலகி நன்மைகள் உண்டாகும்.

இத்தலத்தில் குரு தட்சினாமூர்த்தி தான் பிரபலமானவர். குருவே தட்சினாமூர்த்தியாகவும், தட்சினாமூர்த்தியே குருவாகவும் எழுந்தருளியுள்ள ஒப்பற்ற குருபீடமாக இத்தலம் அமைந்துள்ளது. வியாழக்கிழமைகளில் குரு சந்நிதி மிகவும் விசேஷம். வருடாவருடம் நடைபெறும் குருப்பெயர்ச்சி நாளில் திரளான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து குருபகவானை வழிபட்டு சகலவித தோஷங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம்

...திருசிற்றம்பலம்...

திருஇரும்பூளை (ஆலங்குடி ) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.26 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஅரதைப் பெரும்பாழி (அரித்துவார மங்கலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.49 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநாலூர் மயானம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.19 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பரிதிநியமம் (பரிதியப்பர் கோவில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.31 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சேறை (உடையார் கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.51 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.56 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • குடவாசல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.37 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஅவளிவநல்லூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.88 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவெண்ணியூர் ( கோயில் வெண்ணி ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.39 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பூவனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.40 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.