HolyIndia.Org

திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்) , வன்மீகிநாதர், புற்றிடங்கொண்ட நாதர் ஆலயம்

வன்மீகிநாதர், புற்றிடங்கொண்ட நாதர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்)
இறைவன் பெயர் : வன்மீகிநாதர், புற்றிடங்கொண்ட நாதர்
இறைவி பெயர் : அல்லியங்கோதை
எப்படிப் போவது : இத்தலம் திருவாரூர் நகரில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருவாரூர் அரநெறி என்று அழைக்கப்படும் மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இந்த ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. திருவாரூர் நகரின் கிழக்கு
சிவஸ்தலம் பெயர் : திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்)
ஆலயம் பற்றி :
  • திருவாரூர் பிறக்க முக்தி தரும் தலம்.
  • பாம்புப் புற்றை தான் எழுந்தருளி இருக்கும் இடமாக தானே விரும்பி ஏற்றுகொண்ட வன்மீகி நாதர் கருவறையில் குடிகொண்டிருக்கும் தலம்.
  • கோவில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி என்று போற்றப்படும் மிகப்பெரிய சிவாலயமும் கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய திருத்தலம்.
  • முசுகுந்த சக்கரவர்த்தி, மனுநீதிச் சோழன் போன்றோரால் ஆட்சி செய்யப்பட்ட தலைநகரமாகிய விளங்கிய திருத்தலம்.
  • சப்தவிடங்கத் தலங்களில் மூலாதாரத் தலம், பஞ்ச பூதங்களில் பிருத்வி (பூமி) தலம்.
  • திருமுதுகுன்றம் சிவஸ்தலத்தில் மணிமுத்தா நதியில் சுந்தரர் தான் இட்ட பொன்னை கமலாலயம் திருக்குளத்தில் எடுத்துக் கொள்ள அருளிய தலம்.
  • சுந்தரர் வேண்டிக் கொண்டதின் பேரில் அவருக்காக தியாகராஜப் பெருமான் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது போக இவ்வூர் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடைய திருத்தலம்.
  • சங்கிலி நாச்சியாரைப் பிரிய மாட்டேன் என்று செய்து கொடுத்த வாக்கை மீறி திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டதால் தன் இரண்டு கண் பார்வையும் இழ்ந்த சுந்தரர் காஞ்சீபுரத்தில் இடது கண் பார்வை பெற்றபின், திருவாரூர் தலத்தில் பதிகம் பாடி வலது கண் பார்வையும் பெற்ற தலம்.
  • விறன்மிண்ட நாயனார், நமி நந்தி அடிகள் நாயனார், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், சுழற்சிங்க நாயனார் முதலிய சிவனடியார்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம்.
  • எந்த ஒரு சிவஸ்தலத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கோவில், குளம், வீதி, தேர்த்திருவிழா ஆகியவற்றைப் பற்றி தேவாரப் பாடல்கள் கொண்ட சிறப்பைப் பெற்றுள்ள தலம் இதுவே.
என்ற பல பெருமைகளை உடைய தலம் திருவாரூர் ஆகும்.

திருவாரூர் திருக்கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார். திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் இராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.பிற்கால சோழ மன்னர்களில் ஒருவனான கண்டராதித்ய சோழனின் மனைவியான செம்பியன் மாதேவி இக்கோவிலை கற்றளிக் கோவிலாக மாற்றியதாகவும், பின்னர் குலோத்துங்க மன்னர்கள் காலத்தில் பெரியதாக விரிவாக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

திருவாரூர் ஆலயத்தில் எட்டு துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. முதல் பிரகாரத்திலுள்ள மகிஷாசுரமர்த்தினி பிரதான துர்க்கையாகும். மேலும் 2 துர்க்கை சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் நான்கும், கமலாம்பாள் சந்நிதியில் ஒன்றும் ஆக மொத்தம் எட்டு துர்க்கை சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருப்பது இதன் சிறப்பமசம். நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கும் கோலத்தில் காணப்படுவதும் இக்கோவிலில் காணும் ஒரு சிறப்பம்சம்.

...திருசிற்றம்பலம்...

திருவாரூர் (திருமூலட்டானம், திருவாரூர் பூங்கோயில்) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவாரூர் அரநெறி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.07 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • ஆரூர் பரவையுண்மண்டளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.39 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவிளமர் ( விளமல் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.30 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவிற்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.13 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திரு பள்ளியின்முக்கூடல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.55 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகரவீரம் (கரையுபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.79 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பெருவேளூர் ( மணக்கால் ஐயம்பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.04 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநாட்டியாத்தான்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.80 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பேரெயில் (ஓகைப்பேரையூர் ,வங்காரப் பேரையூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.04 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பனையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.18 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.