HolyIndia.Org

திருப்புகலூர் , அக்னீஸ்வரர்.கோணப்பிரான் ஆலயம்

அக்னீஸ்வரர்.கோணப்பிரான் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருப்புகலூர்
இறைவன் பெயர் : அக்னீஸ்வரர்.கோணப்பிரான்
இறைவி பெயர் : கருந்தாழ் குழலி
எப்படிப் போவது : நன்னிலத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது. இறைவன் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது. திருப்புகலூருக்கு மிக அருகில் உள்ள த
சிவஸ்தலம் பெயர் : திருப்புகலூர்
ஆலயம் பற்றி :

கோவில் விபரம்: திஒருப்புகலூர் அக்னீசுவரர் ஆலயம் ஒரு பெரிய கோவில். கோவிலின் பரப்பளவு சுமார் 73000 சதுர அடி. கிழக்கு-மேற்கு மதில் சுவர் நீளம் 325 அடி. வடக்கு-தெற்கு மதில் சுவர் நீலம் 225 அடி. கோவில் மதில் சுவரை ஒட்டி வெளிப்புறத்தில் நான்கு பக்கமும் அகழி இருக்கிறது. மூலவர் அக்னீசுவரர் சந்நிதிக்கு உள்ள நுழைவு வாயில் கோபுரம் 5 நிலை உள்லதாகவும் சுமார் 90 அடி உயரமும் உள்ளது. உள்ளே நுழைந்ததும் நாம் உதலில் காண்பது இறைவி கருந்தாழ்குழலியின் தெற்கு நோக்கிய சந்நிதி. இந்த சந்நிதியை ஒட்டியே மூலவர் அக்னீசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவருக்கு கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. மூலவர் சந்நிதிக்கு வடக்கே வர்த்தமானீசுவரர் அவரி துணைவி மனோண்மனிக்கும் சந்நிதி இருக்கின்றன. இந்த வர்த்தமானீசுவரரைப் பாராட்டி ச்மப்னதர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார். மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசெகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணலாம். நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் "" என்ற அமைப்பில் இருக்கிறார்கள்.

ஸ்தலத்தின் சிறப்பம்சம்: இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு பெற்றிருக்கிறார். அவர் தவம் செய்யும் போது தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம் அமைத்துக் கொள்கிறார். அதுவே கோவில் வெளிப்புறத்தில் அகழியாக, அக்னி தீர்த்தமாக விளங்கிறது.

இத்தலத்து இறைவன் கோணப்பிரான் என்று அழைக்கபடுவதற்கும் காரணம் உண்டு. பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை செய்பவள். தாயாரின் புஜைக்காக சுயம்பு லிங்கங்களைப் பெயர்த்து எடுத்து வருகிறான் பாணாசுரன். ஆணால் திருப்புகலூர் அக்னீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே தன்னையே பலி கொடுக்க முயர்ச்சி செய்யும் போது இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார். அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக தலை சாய்த்து காட்சி அளிக்கிறார். அதனாலேயே இறைவன் கோணப்பிரான் என்றும் அறியப்படுகிறார்.

இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.

செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறியது: திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கொயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை "தம்மையே புகழ்ந்து" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.

இத்தலத்தில் தான் சமயக் குறவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் முக்தி அடைந்தார். இவருக்கு இக்கோவிலில் தனி சந்நிதியும் இருக்கிறது.

...திருசிற்றம்பலம்...

திருப்புகலூர் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.01 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • ராமனதீச்சுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.78 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசெங்கட்டாங்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.21 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபயற்றூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.70 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமருகல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.16 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பனையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.39 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சாத்தமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.15 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • அம்பர் பெருந்திருக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.07 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • அம்பர் மாகாளம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.52 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கொண்டீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.00 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.