HolyIndia.Org

அம்பர் மாகாளம் , மாகாளநாதர், காளகண்டேஸ்வரர் ஆலயம்

மாகாளநாதர், காளகண்டேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : அம்பர் மாகாளம்
இறைவன் பெயர் : மாகாளநாதர், காளகண்டேஸ்வரர்
இறைவி பெயர் : பக்ஷயாம்பிகை
தல மரம் : கருங்காலி
தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
வழிபட்டோர்: காளி, மாகாள இருடியர்
எப்படிப் போவது : மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மி. தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே இத்தலம் அமைந்துள்ளது. பேரளம் என்ற ஊரிலிருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. அம்பர் பெருந்திருக்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம
சிவஸ்தலம் பெயர் : அம்பர் மாகாளம்
ஆலயம் பற்றி :

புராண வரலாறு: 63 நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமார் நாயனார் நடத்திய யாகத்திறகு இறைவனும் இறைவியும் நேரில் வந்த தலம் இதுவாகும். சோமாசிமார் நாயனார் விரும்பியபடி, அவர் நடத்தும் சோமயாகத்திற்கு இறைவன் நேரில் எழுந்தருளினார். ஆனால் பறையன் உருவில் எழுந்தருளுகிறார். நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாகப் பிடித்துக் கொண்டு தம்பட்டம், மதுக்குடம், மாட்டு இறைச்சி ஆகியவற்றை சுமந்து கொண்டு யாகத்திற்கு எழுந்தருளுகிறார். யாகத்தை நடத்திவந்த அந்தணர்கள், பறையன் வந்ததால் யாகம் கெட்டுவிட்டது என்று கூறி ஓடி விடுகின்றனர். ஆனால் சோமாசிமார் நாயனார் வந்திருப்பது இறைவன் எனத் தெரிந்து, தனது மனைவியுடன் பறைத் தமபதிகளை எதிர்கொண்டு வரவேற்று அவிர்பாகம் கொடுக்கிறார்கள். இறைவனும் தனது பறையன் உருவைக் களைந்து ரிஷப வாகனத்தில் சோமாசிமார் நாயனாருக்கும் அவர் மனைவிக்கும் காட்சி கொடுத்து அருளினார்.

அம்பர் பெருந்திருக்கோவில், அம்பர் மாகாளம் என்ற இரண்டு கோவில்களுக்கும் இடையில் சோமாசிமார் நாயனார் செய்த யாககுண்டம் உள்ளது.ஆண்டு தோறும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று இங்கு யாக உற்சவம் நடைபெறும்.

இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர். இறைவன் சோழ மன்னன் ஒருவனுக்கு தனது மனக்கோலத்தைக் காட்டியருளிய தலம். அம்பாள் சம்பாசுரனை வதம் செய்ததும் இத்தலத்தில் தான். புன்னை மரம் தலவிருட்சமாகும். இறைவன், இறைவி பறையர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோவிலில் உள்ளனர். சோமாசிமார் நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோவிலில் உள்ளன. ஆலயம் ஒரு கட்டுமலை மேல் அமைந்துள்ளது. சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.

தல வரலாறு அம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற பாவம் நீங்க மாகாளி பூசித்தது. சோமாசி மாற நாயனார் யாகம் செய்த பதி. சிறப்புக்கள் ஆண்டு தோறும் வைகாசி மாதம் சோமாசி மாறனார் யாக விழா நடைபெறுகிறது. அதிகார நந்தி மானிட உருவம். சோழர் காலக் கல்வெட்டுகள் உள்ளன.

...திருசிற்றம்பலம்...

அம்பர் மாகாளம் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • அம்பர் பெருந்திருக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.16 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோட்டாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.43 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமீயச்சூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.33 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமீயச்சூர் இளங்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.34 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புகலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.52 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.53 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருத்திலதைப்பதி ( செதலபதி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.56 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநள்ளாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.96 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • ராமனதீச்சுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.08 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சாத்தமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.11 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.