HolyIndia.Org

திருநள்ளாறு , தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்

தர்ப்பாரண்யேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருநள்ளாறு
இறைவன் பெயர் : தர்ப்பாரண்யேஸ்வரர்
இறைவி பெயர் : பிராணம்பிகை, போகமார்த்த பூன்முலையாள்
தல மரம் : தர்ப்பை
தீர்த்தம் : நளதீர்த்தம், சிவகங்கை
வழிபட்டோர்: திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர்,அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், வசுக்கள், போஜன், முசுகுந்தச் சக்கரவர்த்தி
எப்படிப் போவது : காரைக்காலில் இருந்து மேற்கே 5 கி.மி. தொலைவில் திருநள்ளாறு ஸ்தலம் இருக்கிறது. திருநள்ளாறு நவக்ரஹ ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலம் ஆகும்.
சிவஸ்தலம் பெயர் : திருநள்ளாறு
ஆலயம் பற்றி :

இத்தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜர் தகவிடங்கர் எனப்படுகிறார். அவர் ஆடும் நடனம் உன்மத்த நடனம் எனப்படும். இத்தலத்தின் மூலவராக சிவபெருமான் தர்ப்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் அருள் பாலித்து வந்தாலும், இத்தலத்தின் பெருமைக்கு மூலகாரணமாக இருப்பவர் இத்தலத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆவார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சந்நிதிக்கும், இறைவி பிராணம்பிகை சந்நிதிக்கும் இடையில் சனீஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. சனிக்கழமைகளில் சனீஸ்வரரை வழிபடுவதற்காக பக்தர்கள் பெருமளவில் இங்கு கூடுகிறார்கள்.

நள தீர்த்தம்: இக்கோவிலுக்கு அருகில் நள தீர்த்தம் என்ற பெயரில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. சனியின் ஆதிக்கத்திற்கு உள்ளான நளச் சக்கரவர்த்தி பல துன்பங்களை அனுபவித்தான். கடைசியில் இத்தலம் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டு துன்பம் நீங்கப் பெற்றான். நளன் நீராடிய தீர்த்தம் அவன் பெயரால் நள தீர்த்தம் என்று பெயர் பெற்றது. சனிப் பெயர்ச்சியின் போது அவர் அவர்கள் ஜாதகத்தின் தன்மைக்குத் தக்கவாறு நன்மை தீமைகள் நடைபெறகூடும் என்பதால் இந்நாளில் சனிபகவானுக்கு தீபமேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு சனிப் பெயர்ச்சியின் போதும் லக்ஷக்கணக்கில் இங்கு வந்து நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானையும், இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபாடு செய்கின்றனர்.

தல வரலாறு இது, நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான். திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது. சிறப்புக்கள் இது, முசுகுந்தச் சக்கரவர்த்தி எழுந்தருளுவித்த சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று (தியாகராஜர்-நகவிடங்கர்;நடனம்-உன்மத்த நடனம்). இது,சனிபகவான் சன்னதிச் சிறப்புடையது. இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட பின்னரே சனிஸ்வரன் சன்னிதிக்குச் செல்ல வேண்டும். இத்தலத்தின் போகமார்த்த பூண்முலையாள் என்ற மேலே குறிக்கப்பட்டுள்ள பதிகத்தைப் பாடி சிவபெருமானை வழிபட சனி தோஷம் விலகும்.. இது,தருமை ஆதீனக் கோவிலாகும். சோழர்காலக் கல்வெட்டுகள் இரண்டு உள்ளன.

...திருசிற்றம்பலம்...

திருநள்ளாறு அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருதர்மபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.04 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருதெளிச்சேரி (கோயில்பத்து ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.28 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருச்சாத்தமங்கை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.04 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோட்டாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.41 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமருகல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.96 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேட்டக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.22 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • அம்பர் மாகாளம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.96 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • அம்பர் பெருந்திருக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.93 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசெங்கட்டாங்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.25 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.77 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.