சிவஸ்தலம் பெயர் : | திருப்பறியலூர் |
இறைவன் பெயர் : | வீரட்டேஸ்வரர், தக்ஷபுரீசர் |
இறைவி பெயர் : | இளம்கொம்பனையாள், வாலாம்பாள் |
தல மரம் : | வில்வம். (பலா என்றும் சொல்லப்படுகிறது.) |
தீர்த்தம் : | உத்திரவேதி தீர்த்தம். |
எப்படிப் போவது : | மயிலாடுதுறையில் இருந்து திருக்கடவூர் செல்லும் வழியில் திருசெம்பொன்பள்ளியில் இருந்து 2 கி.மி. தூரத்தில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருப்பறியலூர் |
ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
- அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்று.
- கருவறைச் சுவரில் தக்கன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது.
- மூலவர் பெரிய திருமேனி - சுயம்பு மூர்த்தி - சதுர ஆவுடையார்; கோமுகம் மாறி உள்ளது.
- இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒன்பதும் இல்லை. சூரியன் மட்டுமே உள்ளார்.
- இங்கு அர்த்தசாம வழிபாடு பைரவருக்கு நடத்தப்படுகிறது.
- சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலக் கல்வெட்டில் இத்தலம் "ஜயங்கொண்ட சோழவளநாட்டு வீழைநாட்டு ராஜ நாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர் " என்றும்;
இறைவன் "திருவீரட்டான முடையார்", "தக்ஷேஸ்வரமுடையார்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
- திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் அருளிச் செய்த தலபுராணம் உள்ளது.
...திருசிற்றம்பலம்... |