HolyIndia.Org

திருவாவடுதுறை , மாசிலாமனி ஈஸ்வரர், பிரகாசமனி நாதர், கோமுதீசர் ஆலயம்

மாசிலாமனி ஈஸ்வரர், பிரகாசமனி நாதர், கோமுதீசர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவாவடுதுறை
இறைவன் பெயர் : மாசிலாமனி ஈஸ்வரர், பிரகாசமனி நாதர், கோமுதீசர்
இறைவி பெயர் : அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை
தல மரம் : அரசு (இது, படர்ந்துள்ளதால், படர் அரசு எனப்படுகிறது.)
தீர்த்தம் : கோமுக்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம்
வழிபட்டோர்: அம்பிகை, தரும தேவதை, முசுகுந்தச் சக்கரவர்த்தி, திருமூலர், போகர்
எப்படிப் போவது : மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்த
சிவஸ்தலம் பெயர் : திருவாவடுதுறை
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • அம்பிகை, பசு வடிவத்தில் இறைவனை வழிபட்ட தலம். எனவே, ஆவடுதுறையாயிற்று(ஆ-பசு) .
  • தரும தேவதை வழிபட்டு, இத் தல இறைவனின் ரிஷப வாகனமாகும் பேறுபெற்றது. மேலும் சந்நிதியில்
    அரசமரத்தின் நிழலில் கோவில்கொண்டிருக்கும் பேறும் பெற்றது.
  • தலமரமான படர் அரசின் கீழ், தேவர்களும் முனிவர்களும் வேண்டிட, இறைவன் தாண்டவம் புரிந்தமையால்,
    இது போதி அம்பல சபை எனப்படுகிறது(போதி-அரசமரம்).
  • நந்தி தருமநந்திதேவராவார்.
  • முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு, இறைவன் இத் தலத்தைத் திருவாரூராகவும், தம்மைத் தியாகேசராகவும்
    காட்டியருளியது. தியாகேசருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது. (தியாகர்-செம்பொன் தியாகர்:
    ஆசனம்-வீரசிங்காசனம்; நடனம்-சுந்தர நடனம்.)
  • திருமூலரைத் தடுத்தாட்கொண்டு ஆகமசாரமாகிய திருமந்திரத்தை வெளிப்படுத்தி, இறைவன் திருவருள் புரிந்த பதி.
  • போகர் முதலிய சித்தர்களுக்கு அட்டமாசித்தியை அருளிய பதி.
  • முசுகுந்த மன்னனுக்கு மகப்பேறு அளித்த பதி.
  • சம்பந்தர் பெருமான் தமது தந்தையாரின் வேள்விக்கு, இறைவனிடம் பொற்கிழி பெற்ற பதி.
  • திருமாளிகைத் தேவர் அற்புதங்களை நிகழ்திய பதி.
...திருசிற்றம்பலம்...

திருவாவடுதுறை அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருநீலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.15 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • தென்குரங்காடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.72 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கோழம்பம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.36 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோடிக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.64 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகஞ்சனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.15 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருத்துருத்தி ( குத்தாலம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.49 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமங்கலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.49 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவைகன் மாடக்கோவில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.91 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவழுந்தூர் (தேரழுந்தூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.47 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேள்விக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.49 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.