Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருவைகன் மாடக்கோவில் |
இறைவன் பெயர் : | வைகன் நாதர் |
இறைவி பெயர் : | வைகன் நாயகி |
தல மரம் : | சண்பகம் (தற்போதில்லை) |
வழிபட்டோர்: | இலக்குமி |
எப்படிப் போவது : | மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள ஆடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள பெரிய நகரம் கும்பகோணம். |
சிவஸ்தலம் பெயர் : | திருவைகன் மாடக்கோவில் |
ஆலயம் பற்றி : இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களுள் ஒன்றாகும். தல வரலாறு ஊர் - வைகல்; கோயில் - மாடக்கோயில். இக்கோயிலில் இலக்கு வழிபட்டு பேறு பெற்றாள். சிறப்புக்கள் இத்தலத்தில் மூன்று கோயில்கள் உள்ளன:- 1. விசுவநாதர் ஆலயம் - "வளநகர் " என்று இப்பகுதி வழங்குகிறது - திருமால் வழிபட்டது, 2. பிரமபு£¦சுவரர் ஆலயம் - தற்போது சிறப்பாக உள்ள கோயில் - பிரமன் வழிபட்டது, 3. வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில்; பாடல் பெற்றது. சண்பகாரண்யம், நித்யவாசபுரம் முதலயன இத்தலத்தின் வேறு பெயர்கள். மூலவர் - சுயம்பு மூர்த்தி; அழகான பாணம். அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - காரைக்கால் செல்லும் பாதையில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் "நாட்டார் வாய்க்கா "லைக் கடந்து, பழியஞ்சியநல்லூரை அடைந்து, மேலும் 2 கி. மீ. அதே சாலையில் சென்றால் வைகலை அடையலாம். (நாட்டார் வாய்க்கால் மீது உள்ள காலம் குறுகலானது; ஆதலின் பேருந்து செல்லாது.) ...திருசிற்றம்பலம்... |