சிவஸ்தலம் பெயர் : | திருநீலக்குடி |
இறைவன் பெயர் : | நீலகண்டேஸ்வரர், நல்லநாயகேஸ்வரர் |
இறைவி பெயர் : | உமையம்மை, அழகாம்பிகை |
தல மரம் : | பஞ்சவில்வம் |
தீர்த்தம் : | தேவி தீர்த்தம், பாரத்வாஜ தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம தீர்த்தம்,க்ஷீரகுண்டம். |
வழிபட்டோர்: | வசிட்டர், காமதேனு, தேவமாதர், மார்க்கண்டேயர் |
எப்படிப் போவது : | கும்பகோணத்தில் இருந்து 16 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. |
சிவஸ்தலம் பெயர் : | திருநீலக்குடி |
ஆலயம் பற்றி :
தல வரலாறு
சிறப்புக்கள்
- இத்தலத்திற்கு பஞ்சவில்வாரண்ய«க்ஷத்திரம் என்றும் பெயருண்டு.
- அப்பரின் திருவாக்கில் "நெல்லுநீள் வயல் நீலக்குடி" என்று மலர்ந்ததற்கேற்ப சுற்றிலும் வயல்கள் உள்ளன.
- உட்பிரகாரத்தில் பிரம்மா வழிபட்ட பிரம்மலிங்கம் உள்ளது.
- மூலவர் - சிறப்பான, அதிசய மூர்த்தியாக திகழ்கிறார். இங்கு மூலவருக்கு தைலாபிஷேகம் (எண்ணெய்) விசேஷம். எவ்வளவு எண்ணெய் வார்த்துத் தேய்த்தாலும்
அவ்வளவும் பாணத்திற்குள்ளேயே சுவறிப்போகும்; வெளியே வழியாது. தவமிருக்கும் அம்பாளே, சுவாமிக்குத் தலாபிஷேகம் செய்வதாக ஐதீகம். ஆகவே அம்பாள்
முன் எண்ணெய் வைத்துப் பின்பு எடுத்துச் சுவாமிக்குத் தேய்ப்பர். (சித்திரை, கார்த்திகை, மாசியில் இந்த அபிஷேகம் செய்வது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
- இங்குள்ள பலாமரம் தெய்விகமானது. காய்க்குங் காலத்தில் நித்யபடியாக பலாச்சுளை நிவேதமுண்டு. நிவேதித்த பலாச்சுளைச் சாப்பிடுவது நல்லது. ஆனால் நிவேதிக்காமல்
பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக்கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாபழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப்போவது இன்றும் கண்கூடானதொன்றாகும் என்று
சொல்லப்படுகிறது.
...திருசிற்றம்பலம்... |