HolyIndia.Org

திருகுடந்தை கீழ்கோட்டம் , நாகேஸ்வரர் ஆலயம்

நாகேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருகுடந்தை கீழ்கோட்டம்
இறைவன் பெயர் : நாகேஸ்வரர்
இறைவி பெயர் : பிரஹந்நாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம்
வழிபட்டோர்: நாகராசன், சூரியன்
எப்படிப் போவது : இத்தலம் கும்பகோணம் நகரில் நாகேஸ்வரம் சந்நிதி தெருவில் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருகுடந்தை கீழ்கோட்டம்
ஆலயம் பற்றி :
கோவில் விபரங்கள்: கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் நாகேஸ்வரன் கோவில் என்ற பெயரில் எல்லோராலும் அறியப்படுகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் கோபுரங்களைக் கொண்டுள்ள இவ்வாலயத்திற்கு கிழக்கு கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள் நுழைந்தவுடன் வெளிப் பிரகார சுற்றில் இடது புறம் சப்தமாதாக்கள் சந்நிதி உள்ளது. வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் பிரஹந்நாயகி சந்நிதி அமைந்திருக்கிறது. 3வது சுற்றில் மூலவர் நாகேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இத்தலத்தில் சூரியனும் ஆதிசேஷனும் இறைவனை வழிபட்டுள்ளனர். இங்குள்ள நடராஜர் திருமேனி காணவேண்டிய ஒன்று. மேலும் பிரளயகால ருத்ரர், வலஞ்சுழி விநாயகர், மூன்று கரங்களுடன் கூடிய அர்த்தநாரீஸ்வரர் உருவம் ஆகியவையும் காண வேண்டியவை. சித்திரை 11,12,13 தேதிகளில் காலை வேளையில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றன. இந்நாட்களில் சூரிய பூஜையைக் காண பக்தர்கள் பெருமளவில் ஆலயத்தில் கூடுகின்றனர்.

தல வரலாறு அமுதகலசத்தின் (குடத்தின்) வில்வம் சிவலிங்கமான தலம். சிறப்புக்கள் "கோயிற் பெருத்தது கும்பகோணம்" என்னும் மொழிக்கேற்ப இத்தலத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. தீர்த்தக் கிணற்றில் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்; இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன. இங்குள்ள நடராச மண்டபம், "பேரம்பலம்" எனப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது; இருபுறங்களிலும் உள்ள கல் (தேர்¢ச்) சக்கரம் கண்டு மகிழத் தக்கது, இச்சக்கரங்களின் ஆரங்களாக 12 ராசிகளும் இடம் பெற இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது மனதைக் கவர்வதாக உள்ளது; பெயரே ஆனந்தத் தாண்டவ நடராசசபை அல்லவா? நடனத்திற்குச் சிவகாமி தாளம் போடும் பாவனையும், மகாவிஷ்ணு குழலூதும் காட்சியும் பேரழகுடையன. மூலவர் - அழகான திருமேனி; உயரமான ஆவுடையார் - மிகவும் குட்டையான பாணம். "பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்கசுவாமிகள்" என்னும் மகான்; புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச் சீர்த்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்வித்துள்ளார். ராஜகோபுரம், மேற்குக் கோபுரம், நடராசசபை, சுற்றுச்சுவர்கள், சங்கமுகதீர்த்தக்கிணறு முதலிய திருப்பணிகள் அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான், தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி திரட்டிய அருஞ்செயலை இன்று கேட்டாலும், நினைத்தாலும் நம் மனம் நெகிழ்கின்றது.

...திருசிற்றம்பலம்...

திருகுடந்தை கீழ்கோட்டம் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருக்குடந்தைக் காரோணம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.30 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குடமூக்கு (கும்பகோணம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 0.72 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கொட்டையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.34 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகலயநல்லூர் (சாக்கோட்டை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.59 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • பழையாறை வடதளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.25 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • சிவபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.25 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கருக்குடி (மருதாநல்லூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.73 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருஇன்னாம்பர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.95 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசத்திமுத்தம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.17 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • பட்டீச்சரம் (பட்டீஸ்வரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.22 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.