Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருநல்லூர் |
இறைவன் பெயர் : | கல்யாண சுந்தரேஸ்வரர் |
இறைவி பெயர் : | கல்யாணசுந்தரி, திரிபுரசுந்தரி |
தல மரம் : | வில்வம் |
தீர்த்தம் : | சப்தசாகர தீர்த்தம் |
வழிபட்டோர்: | அகத்தியர், பிருங்கி முனிவர், வாயு |
எப்படிப் போவது : | தஞ்சாவூரில் இருந்து 25 கி.மி. தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 15 கி.மி. தொலைவிலும் உத்தமதானபுரம் என்ற இடத்திற்கு அருகாமையில் இத்தலம் உள்ளது. உத்தமதானபுரம் பாபநாசத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது. |
சிவஸ்தலம் பெயர் : | திருநல்லூர் |
ஆலயம் பற்றி : திருநாவுக்கரசர் திருச்சத்திமுற்றத்தில் இறைவன் தன்னுடைய திருப்பாதங்களைத் தன் தலைமேல் வைத்து அருளவேண்டும் என்று இறைவனிடம் பதிகம் பாடி வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோளை திருநல்லூர் தலத்தில் இறைவன் நிறைவேற்றுகிறார். தம் திருவடிகளை அப்பரின் தலைமீது இத்தலத்தில் சூட்டி அருளினார்.அப்பேறு பெற்ற திருநாவுக்கரசர் இறைவனை பதிகம் பாடி தொழுதார். பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் இறைவன் தன் திருவடியை சூட்டி அருளியதை குறிப்பிட்டுப் பாடுகிறார். தல வரலாறு கயிலை மலையிலிருந்து வாயுவால் ஏவப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று இத் தலம். (மற்றது ஆவூர்). இச்சிகரத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார்.இது சுந்தரகிரி எனப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டியத் திருத்தலம். பிருங்கி முனிவர் வண்டு வடிவம் தாங்கி, வழிபட்டது. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலக் காட்சி வழங்கியது. சிறப்புக்கள் அமர் நீதி நாயனாரும், அவரது குடும்பத்தாருக்கும் முக்தியளித்த தலம். அவர் இருவரின் பிரதிமைகள், கற்சிலையிலும், செப்புச் சிலையிலும் உள்ளன.. இறைவரின் இலிங்கத் திருமேனி நாள்தோறும் ஐந்துமுறை நிறம் மாறும் தன்மையுடையது. கோட்செங்கணாரின் மாடக் கோவில். சோழர் கால கல்வெட்டுகள் 22ம், முஹாய்சரர் கல்வெட்டு ஒன்றும் ஆக 23 கல்வெட்டுகள் உள்ளன. ...திருசிற்றம்பலம்... |