HolyIndia.Org

திருசக்கரப்பள்ளி ( அய்யம்பேட்டை ) , சக்ரவாகேஸ்வரர் ஆலயம்

சக்ரவாகேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருசக்கரப்பள்ளி ( அய்யம்பேட்டை )
இறைவன் பெயர் : சக்ரவாகேஸ்வரர்
இறைவி பெயர் : ஸ்ரீசக்ரலோக நாயகி
வழிபட்டோர்: திருமால், சயந்தன், தேவர்கள். (சக்கரவாகப் பறவையும் வழிபட்டது என்பார்.)
எப்படிப் போவது : தஞ்சாவூரில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள அய்யம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருசக்கரப்பள்ளி ( அய்யம்பேட்டை )
ஆலயம் பற்றி :
தல வரலாறு மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது. (இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இதை தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்) திருமால் வழிபட்டுச் சக்கராயுதம் பெற்ற தலம். (சக்கரவாகப் பறவை வழிபட்டத் தலம் என்பாருமுளர்.) சிறப்புக்கள் கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை. கல்வெட்டுக்களில் இவ்வூர், "குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்" என்று குறிக்கப்பட்டுள்ளது. (மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12-ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றது. நாற்பது வயதுக்கும் மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்க வேண்டும் என்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன.) அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் ஐயம்பேட்டை உள்ளது. கும்பகோணம் - தஞ்சாவூர் புகைவண்டி மார்க்கத்தில் ஐயம்பேட்டை புகைவண்டி நிலையம் உள்ளது. ஊர்ப் பெயர் ஐயம்பேட்டை; கோயில் இருப்பது சக்கரப்பள்ளி என்றபகுதியில். ...திருசிற்றம்பலம்...

திருசக்கரப்பள்ளி ( அய்யம்பேட்டை ) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருதலையாலங்காடு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.23 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பெருவேளூர் ( மணக்கால் ஐயம்பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.67 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகரவீரம் (கரையுபுரம் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.96 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவாஞ்சியம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.49 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • நன்னிலம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.01 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநல்லம் ( கோனேரி ராஜபுரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.22 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • குடவாசல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.37 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவிளமர் ( விளமல் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.84 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கொள்ளம்புதூர் (திருக்களம்புதூர், திருக்களம்பூர் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.30 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கொண்டீச்சரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 9.46 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.