HolyIndia.Org

திருவாலம்பொழில் , ஆத்மநாதேஸ்வரர் ஆலயம்

ஆத்மநாதேஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவாலம்பொழில்
இறைவன் பெயர் : ஆத்மநாதேஸ்வரர்
இறைவி பெயர் : ஞானாம்பிகை
தல மரம் : ஆல்
வழிபட்டோர்: காசிபர், அஷ்டவசுக்கள்
எப்படிப் போவது : திருக்கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் திருப்பூந்துருத்திக்கு அடுத்து திருஆலம்பொழில் தலம் இருக்கிறது. கண்டியூரில் இருந்து சுமார் 7 கி.மி. தொலைவில் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருவாலம்பொழில்
ஆலயம் பற்றி :

தல வரலாறு மக்கள் வழக்கில் திருவாலம்பொழில், திருவாம்பொழில் என வழங்குகிறது. இத்தலக் கல்வெட்டில் இறைவனை "தென் பரம்பைக்குடி திருவாலம் பொழில் உடைய நாதர் " என்று குறிக்கப்படுவதுடன், அப்பரும், தம் திருத்தாண்டகத்தில், "தென் பரம்பைக்குடியின்மேய திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே " என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர் - பரம்பைக்குடி என்றும்; கோயில் - திருவாலம் பொழில் என்றும் வழங்கப்பட்டதாகத் தெரிகின்றது. சிறப்புக்கள் காசிபர், அஷ்டவசுக்கள் வழிபட்டு பேறு பெற்ற சிறப்புடையத் தலம். அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு திருக்கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் உள்ள தலம். கண்டியூரிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. திருவையாற்றிலிருந்து பூதலூர் வழயாகத் திருச்சி செல்லும் பேருந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம்.

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. ...திருசிற்றம்பலம்...

திருவாலம்பொழில் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருப்பூந்துருத்தி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.47 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநெய்த்தானம் (தில்லைஸ்தானம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.15 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பெரும்புலியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.53 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவையாறு எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.22 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கானூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.36 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கண்டியூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.39 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • மேலைதிருக்காட்டுப்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.94 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பழனம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.08 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேதிகுடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.45 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசோற்றுத்துறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 10.60 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.