ஆலயம் பற்றி : தல வரலாறு
ஊர்ப் பெயர் - அன்பில்; கோயிலின் பெயர் - ஆலந்துறை.
இங்குள்ள விநாயகர் "செவிசாய்த்த விநாயகர் " என்றழைக்கப்படுகிறார். கொள்ளிடத் தென்கரையில் நின்று பாடிய சம்பந்தரின் பாடல்களைச் செவிசாய்த்து கேட்டமையின், இவ்விநாயகர் இப்பெயர் பெற்றார்.
இத்தலத்தில் பராந்தகசோழன் குறியேற்றிய நூற்றெட்டு அக்னிஹோத்திரிகளின், ஜைமினி சாமவேத பாராணயத்தை(சம்பந்தர் பாடலைக் கேட்கும்) முன்னரே கேட்டருளிய இத்தல விநாயகர், "சாமகானம் கேட்ட விநாயகர் " என்றும் வழங்கப்படுகிறார்.
சிறப்புக்கள்
துவாரபாலகர்களின் பக்கத்தில் பிரமன் வழிபடுகின்ற சிற்பம் உள்ளது.
மூலவர் சிவலிங்கத் திருமேனி - சுயம்பு மூர்த்தி; சதுரபீட ஆவுடையார்.
இக்கோயில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டது. அதற்கு முன்பு மாடக் கோயிலாக இருந்ததாம்.
முன்மண்டபத் தூணில் பாம்பின் வால் ஒருபுறமும் தலை மறுபுறமுமாக கல்லுள் நுழைந்து வந்திருப்பது போல உள்ள சிற்பமும், மற்றொரு தூணில் இருபாம்புகள் ஒன்றொடொன்று பலமுறை பின்னிக் கொண்டிருக்க மத்தியில் சிவலிங்கம் உள்ளதாக உள்ள சிற்பமும், முருகப் பெருமான் சிவலிங்கத்தை வழிபடும் சிற்பமும் கண்களுக்கு பெருவிருந்தாக உள்ளது.
...திருசிற்றம்பலம்... |