HolyIndia.Org

திருவியலூர் (திருவிசைநல்லூர்) , வில்வாரண்யேஸ்வரர், யோகானந்தேஸ்நரர் ஆலயம்

வில்வாரண்யேஸ்வரர், யோகானந்தேஸ்நரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருவியலூர் (திருவிசைநல்லூர்)
இறைவன் பெயர் : வில்வாரண்யேஸ்வரர், யோகானந்தேஸ்நரர்
இறைவி பெயர் : சௌந்தரநாயகி, சாந்தநாயகி
தீர்த்தம் : சடாயுதீர்த்தம்
வழிபட்டோர்: சடாயு
எப்படிப் போவது : கும்பகோணத்தில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவிலும், திருவிடைமருதூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 8 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருவியலூர் (திருவிசைநல்லூர்)
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • மக்கள் திருவிசலூர், திருவிசநல்லூர் என்று சொல்கின்றனர். திருவிசலூர் என்ற பெயரில் தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்களிருப்பதால் இப்பதி "பண்டாரவாடை திருவிசலூர் " திருவிசநல்லூர் என்று வழங்கப்படுகிறது.

  • சடாயு வழிபட்டு பேறு பெற்றத் தலம்.

சிறப்புக்கள்

  • சைவசித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்றாகிய "திருவுந்தியார் " பாடிய "திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் " அவதரித்த தலம்.

  • சோழர் காலக் கல்வெட்டில் இத்தலம் "வடகரை ராஜேந்திர சிம்ம சோழவளநாட்டு, மண்ணிநாட்டு பிரமதேயமான வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்த ஊர் " என்றும், இறைவன் பெயர் "திருவிசலூர் தேவ பட்டாகரர், சிவயோகநாதர் " எனவும் குறிக்கப்படுகிறது.
  • இரண்டாம் பராந்தகன் காலக் கல்வெட்டில், விளக்கெரிக்க நிலமும் ஆடுகளும் அளித்த செய்தியையும், அபிஷேகத்திற்கு நிலம் விட்ட செய்தியையும், காவிரியிலிருந்து அபிஷேகத்திற்கு நீர் கொண்டுவர ஆட்களை நியமித்து ஊதியம் வழங்க நிலங்களை விட்ட செய்தியையும் தெரிவிக்கின்றன.
  • இராசேந்திரன் காலக் கல்வெட்டில், அரசன் கோயிலுக்கு நிலமளித்த செய்தியையும், அவன் மனைவியான அரசி, சுவாமிக்கு தங்க நகைகளும், அபிஷேகத்திற்கு வெள்ளிக் கவசமும் அளித்த செய்திகளையும் தெரிவிக்கின்றது.

அமைவிடம்

மாநிலம் : தமிழ் நாடு
திருவிடைமருதூர் - வேப்பத்தூர் சாலையில் சென்றால் கோயிலை அடையலாம். கும்பகோணத்திலிருந்தும் செல்லலாம்; நகரப் பேருந்துகள் உள்ளன.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது ...திருசிற்றம்பலம்...

திருவியலூர் (திருவிசைநல்லூர்) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.03 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவிடைமருதூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.76 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநாகேஸ்வரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.93 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமங்கலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.97 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • சிவபுரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.61 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகுடந்தை கீழ்கோட்டம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.19 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசேய்ஞலூர் (செங்கானூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.20 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குடந்தைக் காரோணம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.34 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குடமூக்கு (கும்பகோணம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.68 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கொட்டையூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.23 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.