HolyIndia.Org

திருசேய்ஞலூர் (செங்கானூர்) , சத்யகிரீஸ்வரர் ஆலயம்

சத்யகிரீஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருசேய்ஞலூர் (செங்கானூர்)
இறைவன் பெயர் : சத்யகிரீஸ்வரர்
இறைவி பெயர் : சகிதேவியம்மை
தீர்த்தம் : மண்ணியாறு. (சத்திய புஷ்கரணி - குளம்)
வழிபட்டோர்: சிபி, அரிச்சந்திரன்
எப்படிப் போவது : கும்பகோணம் - அணைக்கரை பேருந்து மார்க்கத்தில் சென்று செங்கானூர் நிறுத்தத்தில் இறங்கி 1 Km நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சிவஸ்தலம் பெயர் : திருசேய்ஞலூர் (செங்கானூர்)
ஆலயம் பற்றி :
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம் தல வரலாறு மக்கள் வழக்கில் "சேங்கலூர் " என்று வழங்குகிறது. இத்தலச் சிறப்பைக் கந்தபுராணம், வழிநடைப்படலத்தில் பேசுகிறது. சூரனை அழிப்பதற்காக வந்த முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு, சர்வசங்காரப் படைக்கலத்தை - உருத்திர பாசுபதத்தைப் பெற்றார். சேய் - முருகன். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. சிறப்புக்கள் சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம். சத்தியகிரி, குமாரபுரி, சண்டேசுவரபுரம் என்ப வேறு பெயர். கோச் செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில், கோயில் "கட்டுமலை" மேல் உள்ளது. கர்ப்பக்கிரகத்தைச் சுற்றிலும் மலைமேல் ஒரு பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு பிராகாரமும் உள்ளன. சண்டேசுவரரின் திருமுடியில் பிறை, சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்கு காட்சித் தந்த சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். ...திருசிற்றம்பலம்...

திருசேய்ஞலூர் (செங்கானூர்) அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருஆப்பாடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 1.40 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பனந்தாள் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 2.81 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமழப்பாடி (பெரம்பாலூர் மாவட்டம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 3.15 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருந்துதேவன்குடி(நண்டாங் கோயில் ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.19 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகஞ்சனூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.33 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருமங்கலக்குடி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.58 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவியலூர் (திருவிசைநல்லூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.20 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பழவூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.84 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • தென்குரங்காடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.41 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவிடைமருதூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.45 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.