சிவஸ்தலம் பெயர் : | திருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) |
இறைவன் பெயர் : | ஐராவதேஸ்வரர் |
இறைவி பெயர் : | மலர்க்குழல் மாதம்மை, சுகந்த குந்தளாம்பிகை |
வழிபட்டோர்: | ஐராவதம் |
எப்படிப் போவது : | இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருமணஞ்சேரி என்ற பாடல் பெற்ற ஸ்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. |
சிவஸ்தலம் பெயர் : | திருஎதிர்கொள்பாடி (மேலதிருமனஞ்சேரி) |
ஆலயம் பற்றி : தல வரலாறு
இத்தலம் மக்கள் வழக்கில் மேலைத் திருமணஞ்சேரி என்று வழங்குகிறது.
வேள்விக்குடியில் திருமணஞ் செய்துகொண்டு அத்திருமணக் கோலத்துடன் வந்த தன் அடியவனான அரசகுமாரனை அவனுடைய அம்மானைப்போல இறைவன் வந்து எதிர்கொண்டழைத்துச் சென்றமையால் இத்தலம் எதிர்கொள்பாடி என்றாயிற்று. (இப்பெயர் பண்டைக் காலத்தில் "எருதுபாடி" என்று திரிந்து வழங்கியதாகவும் செய்தியொன்று தெரிவிக்கின்றது.)
சிறப்புக்கள்
ஐராவதம் வழிபட்டுப் பேறு பெற்றத் தலம்.
...திருசிற்றம்பலம்... |