HolyIndia.Org

திருநின்றியூர் , மஹாலக்ஷ்மீசர், ஜமதக்னீஸ்வரர் ஆலயம்

மஹாலக்ஷ்மீசர், ஜமதக்னீஸ்வரர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருநின்றியூர்
இறைவன் பெயர் : மஹாலக்ஷ்மீசர், ஜமதக்னீஸ்வரர்
இறைவி பெயர் : உலகநாயகி
தல மரம் : விளாமரம்
தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம்
வழிபட்டோர்: இலக்குமி, பரசுராமர், அகத்தியர்
எப்படிப் போவது : சீர்காழி - மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது.
சிவஸ்தலம் பெயர் : திருநின்றியூர்
ஆலயம் பற்றி :

தல வரலாறு

  • மக்கள் கொச்சை வழக்கில் திருநன்யூர் என்றும் வழங்குகிறது. (திருநின்றவூர் என்பது வேறு; இஃது தொண்டை நாட்டில் உள்ளது.)

  • மன்னன் ஒருவன் கோயிலைக் கட்டும் விருப்புடன் இங்கு வந்து பூமியை இடித்துப் பார்க்கும்போது குருதி பீறிட, தோண்டிப் பார்க்கையில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு, கோயிலைக் கட்டினான் என்பது தலவரலாறு. இடித்தஇடி பட்டமையால் இன்றும் சிவலிங்கத்தின் மீது உச்சியில் குழி இருப்பதைக் காணலாம்.

சிறப்புக்கள்

  • பழைய நாளில் இதுவும் கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில்களுள் ஒன்றாக விளங்கியது. நூறு ஆண்டுகளுக்கு முன் நகரத்தார் திருப்பணி செய்தபோது இதை இப்போதுள்ள அமைப்பில் மாற்றிக் கட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.
  • இக்கோயிலில் கொடி மரம் இல்லை.
  • பரசுராமர் வழிபட்ட லிங்கம் உள்ளது.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி; உயர்ந்த பாணம்.
...திருசிற்றம்பலம்...

திருநின்றியூர் அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருவிளநகர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 4.54 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கண்ணார்கோவில் (குறுமானக்குடி) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.04 கிலோமீட்டர் தொலைவில் வடகிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்புன்கூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.37 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கடைமுடி (கீழையூர்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.40 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன்கோவில்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.84 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருசெம்பொன்பள்ளி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.30 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநனிபள்ளி (புஞ்ஜை ) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.60 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருப்பறியலூர் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 6.84 கிலோமீட்டர் தொலைவில் தென் கிழக்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகருப்பறியலூர் (தலைஞாயிறு) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.23 கிலோமீட்டர் தொலைவில் வட மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • மயிலாடுதுறை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 7.43 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.