ஆலயம் பற்றி : திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
அருத்தனை அறவனை அமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல்
ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்
கருத்தவன் வளநகர் கடைமுடியே.
தல வரலாறு
மக்கள் வழக்கில் கீழையூர் என்றும் கீழூர் என்றும் வழங்குகிறது. (கீழையூர் என்பது ஏழு ஊர்கள் சேர்ந்து - மிகப் பெரிய ஊர். இதனால் இதற்கு ஏழூர் என்றும் பெயர் வழங்குகிறது. (திருச்சென்னம்பூண்டி - என்னும் ஊரே கல்வெட்டின்படி கடைமுடி என்பர் ஆய்வர்.
பிரமன், கண்வமகரிஷி முதலியோர் வழிபட்டதாக ஐதீகம்.
சிறப்புக்கள்
காவிரி இங்கு வடக்கு முகமாகவந்து மேற்காக ஓடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
மூலவர் - சற்று உயர்ந்த பாணத்துடன் தரிசனம் தருகிறார்.
...திருசிற்றம்பலம்... |