Holy India | தேவார ஆலயம் | தேவாரம் | ஆலய வழிகாட்டி | . | Advanced Search |
சிவஸ்தலம் பெயர் : | திருசாய்க்காடு (சாயாவனம்) |
இறைவன் பெயர் : | சாயாவனேஸ்வரர் |
இறைவி பெயர் : | குயிலினும் நன்மொழியம்மை |
தல மரம் : | பைஞ்சாய் (சாய்-கோரை) |
தீர்த்தம் : | காவிரி, ஐராவத தீர்த்தம் |
வழிபட்டோர்: | உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இந்திரனின் தாயார், ஆதிசேடன் |
எப்படிப் போவது : | சீர்காழியில் இருந்து பூம்புகார் சென்று அங்கிருந்து சிறிது தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம். |
சிவஸ்தலம் பெயர் : | திருசாய்க்காடு (சாயாவனம்) |
ஆலயம் பற்றி : காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருசாய்க்காடு தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருவெண்காடு, 3. திருவிடைமருதூர், 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும். சோழ மன்னன் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக்கோவில்களுள் இத்தலத்தில் உள்ள சாயவனேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். மூலவர் சாயவனேஸ்வரர் சந்நிதி யானை ஏற முடியாத ஒரு கட்டுமலையின் மேல் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. உட்பிரகாரத்தில் மூலவர் சந்நிதிக்கு அருகிலேயே இறைவியின் சந்நிதியும் உள்ளது. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமான் வில்லேந்தி போருக்குப் புறப்படும் நிலையில் காட்சி அளிக்கிறார். காலில் சிவபெருமான் கொடுத்த வீரகண்டமனியை அணிந்திருக்கிறார். சிக்கலில் அம்பாள் எதிரிகளை அழிக்க முருகனுக்குக் கொடுத்த வேல் போன்று சிவபெருமான் கொடுத்த இந்த வீரகண்டமனியும் எதிரிகளை அழிக்க பயன்பட்டது. 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் பிறந்து வளர்ந்து முக்தி அடைந்த தலம் இதுவாகும். தல வரலாறு பைஞ்சாய் எனும் கோரைப்புற் காடாக இருந்ததால், இப் பெயர். ஆதி சேடனது நாகமணி ஒளி வீசியதாலும் (இதனை சாய் - ஒளி என்பர்.) இப் பெயர் பெற்றது. இயற்பகை நாயனார் வழிபட்ட தலம். இந்திரன் தாயார் தினமும் இத் தலத்தைப் பூஜித்து வந்தனர். அவரது துயர் நீக்க, இந்திரன் இத்திருமேனியைத் தேவலோகம் கொண்டுபோக எண்ணித் தோண்டி, அது, பாதாளம் வரை சென்றிருந்தமையால், அவரை மீண்டும் அங்கேயே எழுந்தருளச் செய்தான். அவ்வடு இன்றும் உள்ளது. ...திருசிற்றம்பலம்... |