HolyIndia.Org

திருமயேந்திரப்பள்ளி , திருமேனியழகர், அந்தமிலா அழகர் ஆலயம்

திருமேனியழகர், அந்தமிலா அழகர் தேவாரம்
சிவஸ்தலம் பெயர் : திருமயேந்திரப்பள்ளி
இறைவன் பெயர் : திருமேனியழகர், அந்தமிலா அழகர்
இறைவி பெயர் : வடிவாம்பிகை
தல மரம் : கண்டமரம், தாழை
தீர்த்தம் : மயேந்திரதீர்த்தம்
வழிபட்டோர்: இந்திரன், மயேந்திரன், சந்திரன்
எப்படிப் போவது : சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று திருமயேந்திரப்பள்ளி சிவஸ்தலம் அடையலாம். அருகில் உள்ள மற்றொரு சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் (ஆச்சாள்புரம்). 3 கி. மி. தொலைவில் உள்ளது.
சிவஸ்தலம் பெயர் : திருமயேந்திரப்பள்ளி
ஆலயம் பற்றி :
தல வரலாறு இன்று மக்கள் வழக்கில் மகேந்திரப்பள்ளி என்று வழங்கப்படுகிறது. பண்டை நாளில் (மன்னன் ஆண்ட பகுதி) இருந்த பகுதி கோயிலடிப்பாளையம் என்பது. அருகில் உள்ள தீவுகோட்டையில் கண்டெடுக்கப்பட்ட நடராசத் திருமேனிதான் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. சிறப்புக்கள் ஆங்கிலேயர் ஆட்சியில், கிளைவ், இங்கு மன்னன் ஒருவன் ஆண்டு வந்த பகுதியைக் குண்டுவைத்துத் தகர்த்ததாகவும் அப்பகுதி இன்றும் தீவுக்கோட்டை என்று வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவிலுள்ள இவ்விடத்தில் பழமையான கொடிக்கம்பம், கொடிமேடை முதலிய சின்னங்கள் உள்ளன. இங்கு மிக அழகான மூர்த்தத்தையுடைய விஜயகோதண்ட ராமசாமிப் பெருமான் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கும், தீவுகோட்டை நடராசருக்கும் தனித்தனியே அரசால் மோகினிப் பணம் தரப்பட்டு வருகின்றது. ஆண்டுதோறும் இன்றும் பங்குனித் திங்களில் ஒரு வாரம் சூரியஒளி சுவாமி மீது படுகிறது. இதைச் சூரிய வழிபாடாகக் கொண்டாடுகின்றனர். ...திருசிற்றம்பலம்...

திருமயேந்திரப்பள்ளி அருகில் உள்ள சிவாலயங்கள்

  • திருநல்லூர் பெருமணம் ( ஆச்சாள்புரம்) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 5.62 கிலோமீட்டர் தொலைவில் தென் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருவேட்களம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.62 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கழிப்பாலை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.66 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருநெல்வாயல் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 8.75 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • சிதம்பரம் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 11.54 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்குருகாவூர் வெள்ளடை எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 13.41 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • தென்திருமுல்லைவாயில் எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 14.49 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • சீர்காழி எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.17 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருகோலக்கா எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 15.87 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.
  • திருக்கலிகாமூர்(அன்னப்பன் பேட்டை) எனும் தேவார பதிகம் பெற்ற கோயில் 17.19 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு திசையில் அமைத்துள்ளது.