HolyIndia.Org
Holy India Org Add New Temple
Thiruvidaikazhi Home- Nearest Places - Map - Nearest Metro/Twon - Location - Bus - Railway Station - AirPort - Schools - Nearest Temple Map -

Thiruvidaikazhi

Thiruvidaikazhi is a place in India state of Tamil Nadu located at the longitude of 79.788624 and the latitude of 11.040757.

The moolavar, Lord Murugan showers his blessings facing east under ThiruKura tree. A shivalingam is situated at the back of moolvar and a spatika linga is situated in the front. Goddess Devayanai has a separate sannadhi in this shrine.

The sthala puranam says this is the place where the Nichayathaartham (betrothal) was happened for muruga and theivaanai.thiruvidaikazhi index
About Temple:

மயிலாடுதுறையிலிருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் 9 கி.மீ செம்பனார்கோவிலிலிருந்து பிரியும் மேமாத்தூர் சாலையில் சென்றால் 3 கி.மீ இடது புறம் திரும்பி மஞ்சளாற்றின் கரைகளில் அழகான தார்சாலையில் வளைவு நெளிவுகளில் வளைந்து நெளிந்து,கொண்டேஏஏஏஎ சென்றால், சரியாக 12வது கிமீ ஒரு கோபுரம் அகலத்தில் சிறிதாக உயரமாக தெரியும்!அங்குதான் திருப்புகழ் பாடப்பெற்ற இறைவன் முருகன் காட்சி + அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார் - (நேரடியாக திருக்கடையூர் வந்து, அங்கிருந்து தில்லையாடி வந்தால் எளிதாக இருந்தாலும் அதைவிட இந்த ரூட் எதுக்குன்னா? வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள சாலையில் வருவதென்பது எவ்ளோ சுகமானதுன்னு அனுபவிச்சு பார்க்கத்தான்...!) தேவாரப்பாடல்களில் திருவிசைப்பாவில் பாடல் பெற்ற ஸ்தல்ம் கூடுதலாக அருணகிரிநாதரால் முருகன் அருளை பெற, திருப்புகழினால் பாடப்பெற்ற இடமும் கூட இது! புராணத்தில் சூரன் மகன் இரண்யாசுரனை அட்டாக் செய்த இடமாக கூறப்படுகிறது!

ஸ்தல் விருட்சமாக, வாசம் தரும் குரா மலர்களை கொண்ட குரா மரம் ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது.

தைப்பூசத்திற்கு, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக பக்தர்கள் திருவிடைக்கழி வருவது பெரிய விழாவாக நடைபெறுகிறது! அது மட்டுமல்லாமல் சஷ்டி விழாவும், சுற்றுபுற கிராம மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூட இங்கு வெகு விமரிசையாக நடைப்பெற்றுவருகிறது!

முன்பு பஸ் வசதி ரொம்ப குறைவாக இருந்து, கால நேரம் தெரியாமல் காத்திருந்த காலங்கள் மனதில் நினைவாடுகின்றன! அந்த பிரச்சனைகள் இப்போது இல்லவே இல்லை அடுத்தடுத்து பஸ்கள் அல்லது மினி பேருந்துகளால் அமர்க்களப்படுகின்றது!

பெரும்பாலும் திருக்கடையூர் கோவிலை தரிசிக்க வருபவர்கள் இந்த கோவிலை தவறவிடுவதில்லை! இந்த கோவில் தெற்குவீதி (மெயின் ரோடும் அதான்) பார்த்தால் தில்லையாடி சிவன் கோவில் அதற்குபக்கத்திலேயே தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் வாசலில் காந்தி சிலை!
Writen by : sivaNadimai , Date :Sunday - 26 September 2010 Report / Delete
Murugan - One faced Eeswaran - ThirukAmEswarar Ambigai - District - NAgappattinam Postcode - 609310
Writen by : sivaNadimai , Date :Thursday - 09 September 2010 Report / Delete
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
Writen by : sivaNadimai , Date :Thursday - 09 September 2010 Report / Delete


Festival :

திருவிடைக்கழி இறைவர் திருப்பெயர் : காமேசுவரர். இறைவியார் திருப்பெயர் : காமேசுவரி. தல மரம் : குரா, மகிழம். தீர்த்தம் : சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு. வழிபட்டோர் : முசுகுந்தன், வசிட்டர், சேந்தனார், அருணகிரிநாதர் ஆகியோர். திருவிசைப்பா பாடல்கள் : கருவூர்த்தேவர் - திருவிசைப்பா.

தல வரலாறு * தெய்வயானை இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடை கேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர். * அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை. * மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.

சிறப்புக்கள் * இத்தலத்திற்கு - ஒன்பதின்மரில் சேந்தனார், திருவிசைப்பா பாடியுள்ளார்; இவர் பாடியுள்ள திருவிசைப்பா பதிகம் முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது. * இப்பதிகம், தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின் துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய் இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது. * ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டுப் பதிகங்கள் பொதுவாக - சிவபெருமானின் திருமேனிச் சிறப்பு, அடியார்க்கருளிய அப்பெருமானின் நலங்கள் முதலியவற்றையும் எடுத்துரைப்பதோடு, ஆங்காங்குச் சைவசமயத் தத்துவக் கருத்துக்களையும் புகழ்ந்தோதுகிறது. * அழகான ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் வண்ணப் பொலிவுடன் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றது. * தற்போது முருகன் தலமாகப் பிறசித்தி பெற்றுள்ளது. * சுப்பிரமணியக் கடவுள் மூலத்தான மூர்த்தியாக விளங்கும் இத்தலத்திற்கு 'மகிழவனம்' என்ற பெயருமுண்டு. * தெய்வயானைக்குத் தனிச் சந்நிதி; தவக்கோல தரிசனம். * சேந்தனார் முத்தி பெற்ற தலம். * திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முருகன் தலம். * கோயிலுள் நுழைந்தால், முன்பண்டபத்தில் திருப்புகழ், வேல் விருத்தம் முதலியவை பதித்த கல்வெட்டுக்கள் உள்ளன. * இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம். * தல மரமாகிய "குராமரம்" தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குராமரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது. இதன் கீழமர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர். * சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்களையும் அருளுகின்றது. * சண்டேசுவர மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்சண்டேசுவரர் என்று இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக பெயர்கள் சொல்லப்படுகின்றன. * இரண்டாம் பிராகாரத்தில் வடக்கு மதிற்சுவரில் இரு உருவங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் மேல் பொற்கோயில் நம்பி, தில்லை மூவாயிரநம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றின் கீழ் ஒரு மேடையில் ரிஷபம், இடையன், குடம், பாம்பு முதலிய உருவங்களும், சற்றுத் தள்ளி மன்னன் ஒருவன் உள்ளிட்ட பல உருவங்களும் உள்ளன. இவற்றின் விவரம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை தலபுராணத்துடன் தொடர்புடையனவாக இருக்கலாம். * கோயிலில் தேசாந்திரி கட்டளை உள்ளது. நான்கு கால பூசைகள் நடைபெறுகின்றன. * கல்வெட்டில் முருகனுடைய பெயர் "திருக்குராத்துடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது. * கல்வெட்டுக்களிலிருந்து அங்கு பல மடங்கள் இருந்ததாகவும், வேதமோதுவார்க்கும் வழிபாட்டுக்கும் இறையிலியாக நிலங்களை அளித்ததும் ஆகிய செய்திகள் தெரியவருகின்றன. * அண்மையில் உள்ள திருமுறைத் தலம் திருக்கடவூர் ஆகும்.

அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு மயிலாடுதுறையிலிருந்து தில்லையாடி (தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து) சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் திருவிடைக்கழி தலத்தையடையலாம். கோயில் வரை பேருந்து வசதிசெல்கிறது.
Writen by : sen , Date :Sunday - 26 September 2010 Report / Delete


Temple Management:

திருவிடைக்கழி எனும் இத்தலத்தை சோழ நாட்டு செந்தூர் (திருச்செந்தூர்) என்கிறார்கள். சங்க நூல்களில் இத்தலம் குராப்பள்ளி என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இங்கே சிவாலய அமைப்பில் அமைந்த முருகன் கோயில் பேரருள் புரிகிறது.

முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்ய சிவபெருமானிடம் ஆசி பெற்றுச் சென்ற தலம் இது. மேலும் சூரசம்ஹாரத்திற்குப் பின் தேவர்களை மண்ணுலகிலிருந்து தேவருலகிற்குச் செல்ல முருகப் பெருமான் விடை கொடுத்து அனுப்பிய தலம் என்பதால் விடைக்கழி என்றழைக்கப்பட்டது. தல விருட்சமாக குரா மரம் திகழ்கிறது. இம்மரம் பழனி, திருத்தணி போன்ற மலைச்சாரலில் மட்டுமே வளரக்கூடியது. குகனுக்கு உகந்த மரமாகவும் குரா மரம் விளங்குகிறது.

சிவனும், முருகனும் ஒருவரே என்பதை உலகிற்கே உணர்த்தும் தன்மை பெற்றது இத்தலம். குரா மரத்தின் கீழ் சிவலிங்கத் திருமேனியுடன், முருகப்பெருமானின் திருமேனியும் ஒருங்கே அருளும் அரிய தலம் இது. எங்கும் ‘செந்தில் மேய வள்ளி மணாள’னாகத் திகழும் முருகக் கடவுள், இங்கே குமார சிவமாக எழுந்தருளி அற்புத தரிசனம் தருவதை பரவசத்துடன் கண்டு மகிழலாம்.

இம்மை, மறுமை மற்றும் முக்தி ஆகிய மூன்று நலன்களையும் தந்தருளும் முருகப் பெருமான் பாலசுப்ரமணியராக எழுந்தருளியுள்ளார். அவர் திருமுன் ஸ்படிக லிங்கமும் உள்ளது. சிவபெருமான், தம்மை குரா மரத்தடியில் பூஜித்த தம் குமாரர் முருகக் கடவுளைத் தம் வடிவாகவே இத்தலத்தில் விளங்கச் செய்ததாக புராணம் கூறுகிறது.

முருகப்பெருமான் ஒரு திருமுகம், இரு திருக்கரங்களுடன் ஒரு கரம் அபயமருள, மற்றொன்றை இடுப்பில் ஊன்றிய நிலையில் நின்ற நிலையில் தரிசனம் தருகிறார். தெய்வானை சந்நதி, 16 விநாயகர்கள் திருமேனி, ஆதி மூர்த்தியாம் காமேஸ்வரர் சந்நதி, சப்தமாதர்கள் மற்றும் நவவீரர்கள் போன்றோரும் ஆலயத்தில் அருள்கின்றனர்.

இவ்வளவு சிறப்பான தலத்திற்கு முரு கன் அடியார்கள் 29ம் வருட பாதயாத்திரையை சிதம்பரத்திலிருந்து மேற்கொள்கின்றனர். 17.9.2010 தொடங்கி 19.9.2010 அன்று பாதயாத்திரை நிறைவு பெறுகிறது.

இத்தலம் சிதம்பரம் - நாகப்பட்டினம் சாலையில் திருக்கடையூர் தலத்திலிருந்து தென்மேற்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து சங்கரன்பந்தல் வழியில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
Writen by : mugugesan , Date :Sunday - 26 September 2010 Report / Delete
அருள்மிகு திருக்காமேசுவரர்

குளம்: சரவணப்பொய்கை மரம்: குரா

திருக்கோயிலின் கருவறையில் முருகப் பெருமான் திருமேனி முதலில் இருக்கிறது. அவர் திருமேனிக்குச் சற்றுவடமேற்குப் பாகத்தில் இலிங்கத் திருமேனி இருக்கின்றது. இருவருக்கும் இம்முறைப்படியே விமானங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. தெய்வயானை அம்மையார்க்குத் தனிக்கோயில் இருக்கின்றது. சிவபெருமானுக்குரிய அம்மன்கோயில் இக்கோயிலில் இல்லை.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் திருவிடைக்கழி உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருவிடைக்கழி செல்லப் பேருந்துகள் உள. கல்வெட்டு: இக்கோயில் கல்வெட்டுக்களில் முருகப்பெருமான் திருக்குராத்துடையார் என்று குறிக்கப்பட்டுள்ளனர். இவ்வூரில் சேனாபதிப் பிள்ளைப் பெருந்தெருவில் குறும்பனாங்குடையான் கூத்தன் சிவதவகன் என்னும் வியாபாரி எழுந்தருளுவித்துள்ள ஐந்நூற்றுவப் பிள்ளையார்க்கு வழிபாட்டிற்குத் திருநாமத்துக் காணியாக திருவிடைக்கழிப் பெருமக்கள் நிலத்தைத் திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜேந்திர சோழனின் 11-ஆம் ஆட்சியாண்டில் அளித்துள்ளனர். இவ்வூரில் திருவலஞ்சுழியுடையான் மண்டபம் என்று ஒரு மண்டபம் இருந்தது.

திருக்குடந்தைமடம் என்று ஒரு மடம் இருந்தது. அம்மடத்தில் கோக்காட்டு நாராயணன்ராமன் அருளாளப்பெருமாளை எழுந்தருளு வித்துள்ளான். அதற்குப் பொன்னம்பலநம்பி நல்லாடை மாங்குடியில் இரண்டுமா நிலத்தைக் கொடுத்துள்ளான். இது நிகழ்ந்தது திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் 19-ஆம் ஆட்சியாண்டில் ஆகும்.

குன்றத்துநாராயணன், இவ்வூரில் மடம் ஒன்றை நிறுவி அதன் பொருட்டுப் போதிமங்கலத்தில் 5 வேலி சொச்சம் நிலத்தை விலைக்கு வாங்கி அம்மடத்தில் மலையாளத்திலிருந்து வந்து வேதம் படிக்கும் பிராமண மாணவர்களின் செலவினங்கட்குக் கொடுத்துள்ளான். திருவிடைக்கழிச்சபையார் அந்நிலத்தை இறையிலியாகச் செய்தனர். இந்நிகழ்ச்சி திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜதேவரின் 13ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.

அரசனுடைய கட்டளைப்படி, நான்குவேலி நிலம் இராஜராஜன் பெருவிலையாக 20750 காசுக்குப் பூவனூர் சிவதானப் பெருமாளுக்கு விற்கப்பட்டது. அச்சிவதானப்பெருமாள் அந்நிலத்தைத் திருவிடைக்கழிப் பெருமானுக்குச் சிறுகாலைச் சந்திக்குக் கொடுத்துள்ளான். இந்நிகழ்ச்சி இராஜராஜதேவரின் 8 ஆம் ஆண்டு 26ஆம் நாளில் நிகழ்ந்தது.

கற்பகஞ்சேரி நாராயணன் கட்டிய ஒரு மடத்துக்குத் திரு விடைக்கழியிலும் மற்றுமுள்ள ஊர்களிலும் அரசன் கட்டளைப்படி நிலங்கள் விடப்பட்டன. இது கோனேரின்மை கொண்டானின் 21 ஆம் ஆண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும்.

இரண்டாம் பிராகாரத்து வடக்குமதில் சுவரில் இரண்டு பிரதிமங்கள் செதுக்கப்பட்டு அவைகளின் தலைப்பில் பொற்கோயில் நம்பி, தில்லைமூவாயிரநம்பி என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இப்பிரதிமங்களின்கீழ், ஒரு மேடையில் ரிஷபம், அதன்கீழ் ஒரு இடையன், குடம், பாம்பு இவைகளும், இவைகளுக்கு மேற்கில் அதே சுவரில் ஆறு உருவங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஆறாவது உருவம் ஓர் அரசனாகக் காட்சியளிக்கிறது. இந்நிகழ்ச்சி இத்தல வரலாற்றைக் குறிக்கலாம்.
Writen by : siva , Date :Sunday - 26 September 2010 Report / Delete


Contact Details : Please furnish the contact details - phone, mobile number of Thiruvidaikazhi temple
Writen by : Baskaran , Date :Saturday - 25 September 2010 Report / Delete
Murugan Temple Phone no required
Writen by : rajendran , Date :Saturday - 04 September 2010 Report / Delete

Features : குன்றிருக்கும் இடம் மட்டும் குமரன் இருக்கும் இடமல்ல, குரா மரம் (Webera corymbosa, Bottle brush tree) இருக்கும் இடமும் குமரன் இருக்கும் இடமே. இந்த திருக்கோவில் திருக்கடையூர் இருந்து 6 கி. மீ. தூரத்தில் உள்ளது. சூரபத்மன் வதம் செய்தபின் சுறா வடிவமெடுத்து மறைந்த சூரபத்மனின் புதல்வன் இரண்யனை வதம் செய்து தன் மீதான சாபம் தீர ஈசனை நோக்கி தவம் செய்த இடம் இந்த திருக்கோவில். தவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் தலம். இங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது.

இந்த தளத்திற்கு மற்றொரு சிறப்பும் உண்டு, இங்குதான் தெய்வானைக்கும் முருகப்பெருமானுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாம். இதற்கு சான்றுபோல் தெய்வானை சந்நிதியில் உள்ள அவரின் சிலையில் முகம் முருகப்பெருமானை நோக்கி சற்றே நாணத்துடன் தலை சாய்த்து இருப்பதுபோல் காணப்படுகிறது.

இத்தளத்தின் தல விருட்சம் குரா மரம், இந்த மரத்தின் இலைகளுக்கு விஷமுறிவு சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.

மிகவும் அமைதியான ஆலயம், எனக்கு மிகவும் பிடித்தமான ஆலயமும் கூட, இங்குள்ள அர்ச்சகரும் மிக நல்ல முறையில் சேவை செய்துவருகின்றார்.
Writen by : இரா. சதீஷ் குமார் , Date :Sunday - 26 September 2010 Report / Delete



Kindly click here to provide more details / comments
Add PHOTOS with detail