HolyIndia.Org

திருவான்மியூர் ஆலய தேவாரம்

திருவான்மியூர் ஆலயம்
2-4-1502:
கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மிய[ர்
உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே. 

2-4-1503:
சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மிய[ர்ச்
சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே. 

2-4-1504:
கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மிய[ர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே. 

2-4-1505:
மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மிய[ர்
துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே. 

2-4-1506:
மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மிய[ர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே. 

2-4-1507:
போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந்
தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மிய[ர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி ய[ட்டிய மொய்ம்பதே. 

2-4-1508:
வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மிய[ர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே. 

2-4-1509:
தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மிய[ர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே. 

2-4-1510:
பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மிய[ர்
சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே. 

2-4-1511:
மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மிய[ர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே. 

2-4-1512:
மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மிய[ர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே. 

3-55-3384:
விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே 
உரையார் பல்புகழாய் உமைநங்கையோர் பங்குடையாய் 
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி ய[ருறையும் 
அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 

3-55-3385:
இடியார் ஏறுடையாய் இமையோர்தம் மணிமுடியாய் 
கொடியார் மாமதியோ டரவம்மலர்க் கொன்றையினாய் 
செடியார் மாதவிசூழ் திருவான்மி ய[ருறையும் 
அடிகேள் உன்னையல்லால் அடையாதென தாதரவே. 

3-55-3386:
கையார் வெண்மழுவா கனல்போல்திரு மேனியனே 
மையார் ஒண்கண்நல்லாள் உமையாள்வளர் மார்பினனே 
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி ய[ருறையும் 
ஐயா வுன்னையல்லால் அடையாதென தாதரவே. 

3-55-3387:
பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே 
மின்போ லும்புரிநுல் விடையேறிய வேதியனே 
தென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில் 
அன்பா வுன்னையல்லால் அடையாதென தாதரவே. 

3-55-3388:
கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல் 
எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ் 
திண்ணார் வண்புரிசைத் திருவான்மி ய[ருறையும் 
அண்ணா வுன்னையல்லால் அடையாதென தாதரவே. 

3-55-3389:
நீதீ நின்னையல்லால் நெறியாதும் நினைந்தறியேன் 
ஓதீ நான்மறைகள் மறையோன்தலை யொன்றினையுஞ் 
சேதீ சேதமில்லாத் திருவான்மி ய[ருறையும் 
ஆதீ உன்னையல்லால் அடையாதென தாதரவே. 

3-55-3390:
வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவருங் 
கானார் ஆனையின்தோல் உரித்தாய்கறை மாமிடற்றாய் 
தேனார் சோலைகள்சூழ் திருவான்மி ய[ருறையும் 
ஆனா யுன்னையல்லால் அடையாதென தாதரவே. 

3-55-3391:
பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும் 
நெறியார் நீள்கழல்மேல் முடிகாண்பரி தாயவனே 
செறிவார் மாமதில்சூழ் திருவான்மி ய[ருறையும் 
அறிவே யுன்னையல்லால் அடையாதென தாதரவே. 

3-55-3392:
குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள் 
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய் 
திண்டேர் வீதியதார் திருவான்மி ய[ருறையும் 
அண்டா வுன்னையல்லால் அடையாதென தாதரவே. 

3-55-3393:
கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில் 
நன்றா னபுகழான் மிகுஞானசம் பந்தனுரை 
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி ய[ரதன்மேற் 
குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே. 

5-82-6038:
விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர் 
அண்ட நாயகன் றன்னடி சூழ்மின்கள் 
பண்டு நீர்செய்த பாவம் பறைந்திடும் 
வண்டு சேர்பொழில் வான்மிய[ ரீசனே. 

5-82-6039:
பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர் 
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத் 
தருளு மாவல்ல ஆதியா யென்றலும் 
மருள றுத்திடும் வான்மிய[ ரீசனே. 

5-82-6040:
மந்த மாகிய சிந்தை மயக்கறுத் 
தந்த மில்குணத் தானை யடைந்துநின் 
றெந்தை யீசனென் றேத்திட வல்லிரேல் 
வந்து நின்றிடும் வான்மிய[ ரீசனே. 

5-82-6041:
உள்ள முள்கலந் தேத்தவல் லார்க்கலாற் 
கள்ள முள்ள வழிக்கசி வானலன் 
வெள்ள முமர வும்விர வுஞ்சடை 
வள்ள லாகிய வான்மிய[ ரீசனே. 

5-82-6042:
படங்கொள் பாம்பரைப் பான்மதி சூடியை 
வடங்கொள் மென்முலை மாதொரு கூறனைத் 
தொடர்ந்து நின்று தொழுதெழு வார்வினை 
மடங்க நின்றிடும் வான்மிய[ ரீசனே. 

5-82-6043:
நெஞ்சி லைவர் நினைக்க நினைக்குறார் 
பஞ்சின் மெல்லடி யாளுமை பங்கவென் 
றஞ்சி நாண்மலர் தூவி யழுதிரேல் 
வஞ்சந் தீர்த்திடும் வான்மிய[ ரீசனே. 

5-82-6044:
நுணங்கு நுலயன் மாலு மறிகிலாக் 
குணங்கள் தாம்பர விக்குறைந் துக்கவர் 
சுணங்கு பூண்முலைத் தூமொழி யாரவர் 
வணங்க நின்றிடும் வான்மிய[ ரீசனே. 

5-82-6045:
ஆதி யும்மர னாயயன் மாலுமாய்ப் 
பாதி பெண்ணுரு வாய பரமனென் 
றோதி யுள்குழைந் தேத்தவல் லாரவர் 
வாதை தீர்த்திடும் வான்மிய[ ரீசனே. 

5-82-6046:
ஓட்டை மாடத்தி லொன்பது வாசலுங் 
காட்டில் வேவதன் முன்னங் கழலடி 
நாட்டி நாண்மலர் தூவி வலஞ்செயில் 
வாட்டந் தீர்த்திடும் வான்மிய[ ரீசனே. 

5-82-6047:
பார மாக மலையெடுத் தான்றனைச் 
சீர மாகத் திருவிர லூன்றினான் 
ஆர்வ மாக அழைத்தவ னேத்தலும் 
வார மாயினன் வான்மிய[ ரீசனே.