திருப்பாதிரிபுலியூர் ( கடலூர் NT) ஆலய தேவாரம்
திருப்பாதிரிபுலியூர் ( கடலூர் NT) ஆலயம்2-121-2780:
முன்னம்நின்ற முடக்கால் முயற்கருள் செய்துநீள்
புன்னைநின்று கமழ்பா திரிப்புலி ய[ருளான்
தன்னைநின்று வணங்குந் தனைத்தவ மில்லிகள்
பின்னைநின்ற பிணியாக் கையைப் பெறுவார்களே.
2-121-2781:
கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவே
முள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்
புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலிய[ர்தனை
உள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே.
2-121-2782:
மருளினல்லார் வழிபாடு செய்யும் மழுவாளர்மேல்
பொருளினல்லார் பயில்பா திரிப்புலி ய[ருளான்
வெருளின்மானின் பிணைநோக்கல் செய்துவெறி செய்தபின்
அருளியாகத் திடைவைத் ததுவும் மழகாகவே.
2-121-2783:
போதினாலும் புகையாலும் உய்த்தே யடியார்கள்தாம்
போதினாலே வழிபாடு செய்யப் புலிய[ர்தனுள்
ஆதினாலும் மவலம் மிலாதவடி கள்மறை
ஓதிநாளும் மிடும்பிச்சை யேற்றுண் டுணப்பாலதே.
2-121-2784:
ஆகநல்லார் அமுதாக்க வுண்டான் அழலைந்தலை
நாகநல்லார் பரவந்நயந் தங்கரை யார்த்தவன்
போகநல்லார் பயிலும் பாதிரிப்புலி ய[ர்தனுள்
பாகநல்லா ளொடுநின்ற எம்பர மேட்டியே.
2-121-2785:
மதியமொய்த்த கதிர்போ லொளிம்மணற் கானல்வாய்ப்
புதியமுத்தந் திகழ்பா திரிப்புலி ய[ரெனும்
பதியில்வைக்கப் படுமெந்தை தன்பழந் தொண்டர்கள்
குதியுங்கொள்வர் விதியுஞ் செய்வர் குழகாகவே.
2-121-2786:
கொங்கரவப் படுவண் டறைகுளிர் கானல்வாய்ச்
சங்கரவப் பறையின் னொலியவை சார்ந்தெழப்
பொங்கரவம் முயர்பா திரிப்புலி ய[ர்தனுள்
அங்கரவம் மரையில் லசைத்தானை அடைமினே.
2-121-2787:
வீக்கமெழும் இலங்கைக் கிறைவிலங் கல்லிடை
ஊக்கமொழிந் தலறவ் விரலாலிறை ய[ன்றினான்
பூக்கமழும் புனல்பா திரிப்புலி ய[ர்தனை
நோக்கமெலிந் தணுகா வினைநுணு குங்களே.
2-121-2788:
அன்னந்தாவும் மணியார் பொழின்மணி யார்புன்னை
பொன்னந்தாது சொரிபா திரிப்புலி ய[ர்தனுள்
முன்னந்தாவி அடிமூன் றளந்தவன் நான்முகன்
தன்னந்தாளுற் றுணராத தோர்தவ நீதியே.
2-121-2789:
உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி ய[ரையே.
2-121-2790:
அந்தண்நல் லாரகன் காழியுள் ஞானசம்
பந்தன்நல் லார்பயில் பாதிரிப்புலி ய[ர்தனுள்
சந்தமாலைத் தமிழ்பத் திவைதரித் தார்கள்மேல்
வந்துதீயவ் வடையாமை யால்வினை மாயுமே.
4-95-5071:
ஈன்றாளு மாயெனக் கெந்தையு
மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந்
தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன்
திருப்பா திரிப்புலிய[ர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன்
றன்னடி யோங்களுக்கே.
4-95-5072:
பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்
சேயிந்தப் பாரைமுற்றுஞ்
சுற்றாய் அலைகடல் மூடினுங்
கண்டேன் புகல்நமக்கு
உற்றான் உமையவட் கன்பன்
திருப்பா திரிப்புலிய[ர்
முற்றா முளைமதிக் கண்ணியி
னான்றன மொய்கழலே.
4-95-5073:
விடையான் விரும்பியென் னுள்ளத்
திருந்தான் இனிநமக்கிங்
கடையா அவலம் அருவினை
சாரா நமனையஞ்சோம்
புடையார் கமலத் தயன்போல்
பவர்பா திரிப்புலிய[ர்
உடையான் அடியார் அடியடி
யோங்கட் கரியதுண்டே.
4-95-5074:
மாயமெல் லாமுற்ற விட்டிருள்
நீங்க மலைமகட்கே
நேயம் நிலாவ இருந்தா
னவன்றன் திருவடிக்கே
தேயமெல் லாநின் றிறைஞ்சுந்
திருப்பா திரிப்புலிய[ர்
மேயநல் லான்மலர்ப் பாதமென்
சிந்தையுள் நின்றனவே.
4-95-5075:
வைத்த பொருள்நமக் காமென்று
சொல்லி மனத்தடைத்துச்
சித்த மொருக்கிச் சிவாய
நமவென் றிருக்கினல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வா
ரவர்பா திரிப்புலிய[ர்
அத்தன் அருள்பெற லாமோ
அறிவிலாப் பேதைநெஞ்சே.
4-95-5076:
கருவாய்க் கிடந்துன் கழலே
நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்றன் நாமம்
பயின்றேன் உனதருளாற்
திருவாய் பொலியச் சிவாய
நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா
திரிப்புலி ய[ரரனே.
4-95-5077:
எண்ணா தமரர் இரக்கப்
பரவையுள் நஞ்சமுண்டாய்
திண்ணார் அசுரர் திரிபுரந்
தீயெழச் செற்றவனே
பண்ணார்ந் தமைந்த பொருள்கள்
பயில்பா திரிப்புலிய[ர்க்
கண்ணார் நுதலாய் கழல்நங்
கருத்தில் உடையனவே.
4-95-5078:
புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
வுன்னடி யென்மனத்தே
வழுவா திருக்க வரந்தர
வேண்டுமிவ் வையகத்தே
தொழுவார்க் கிரங்கி யிருந்தருள்
செய்பா திரிப்புலிய[ர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
மேல்வைத்த தீவண்ணனே.
4-95-5079:
மண்பா தலம்புக்கு மால்கடல்
மூடிமற் றேழுலகும்
விண்பால் திசைகெட் டிருசுடர்
வீழினும் அஞ்சல்நெஞ்சே
திண்பால் நமக்கொன்று கண்டோ ந்
திருப்பா திரிப்புலிய[ர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட்
சுடரான் கழலிணையே.
4-95-5080:
திருந்தா அமணர்தந் தீநெறிப்
பட்டுத் திகைத்துமுத்தி
தருந்தா ளிணைக்கே சரணம்
புகுந்தேன் வரையெடுத்த
பொருந்தா அரக்கன் உடல்நெரித்
தாய்பா திரிப்புலிய[ர்
இருந்தாய் அடியேன் இனிப்பிற
வாமல்வந் தேன்றுகொள்ளே.