HolyIndia.Org

திருக்கூடலையாற்றூர் ஆலய தேவாரம்

திருக்கூடலையாற்றூர் ஆலயம்
7-85-8086:
வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடுங்
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்று{ரில்
அடிகளிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 

7-85-8087:
வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்
பையர விளவல்குற் பாவையொ டும்முடனே
கொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்று{ரில்
ஐயனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 

7-85-8088:
ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்று
வார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனே
கூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்று{ரில்
ஆர்வனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 

7-85-8089:
சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன்
பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனே
கொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்று{ரில்
அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே. 

7-85-8090:
வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற்
சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடுங்
கோதிய வண்டறையுங் கூடலை யாற்று{ரில்
ஆதியிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 

7-85-8091:
வித்தக வீணையொடும் வெண்புரி நுல்பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே
கொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்று{ரில்
அத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 

7-85-8092:
மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல்
இழைநுழை துகிலல்குல் ஏந்திழை யாளோடுங்
குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்று{ரில்
அழகனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 

7-85-8093:
மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்
பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்
குறள்படை யதனோடுங் கூடலை யாற்று{ரில்
அறவனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 

7-85-8094:
வேலையின் நஞ்சுண்டு விடையது தானேறிப்
பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனே
கோலம துருவாகிக் கூடலை யாற்று{ரில்
ஆலனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 

7-85-8095:
கூடலை யாற்று{ரிற் கொடியிடை யவளோடும்
ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்றமிழால் நாவல வு[ரன்சொற்
பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.