HolyIndia.Org

திருக்கோட்டூர் ஆலய தேவாரம்

திருக்கோட்டூர் ஆலயம்
2-109-2648:
நீல மார்தரு கண்டனே நெற்றியோர் 
கண்ணனே ஒற்றைவிடைச் 
சூல மார்தரு கையனே துன்றுபைம் 
பொழில்கள்சூழ்ந் தழகாய 
கோல மாமலர் மணங்கமழ் கோட்^ர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத் 
தாங்குவர் பாங்காலே. 

2-109-2649:
பங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு 
மெல்விர லரவல்குல் 
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென 
மிழற்றிய மொழியார்மென் 
கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்^ர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு 
அருள்பெறல் எளிதாமே. 

2-109-2650:
நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் 
அடியவர் தமக்கெல்லாஞ் 
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் 
செல்வமல் கியநல்ல 
கொம்ப னார்தொழு தாடிய கோட்^ர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ 
டமர்ந்தினி திருப்பாரே. 

2-109-2651:
பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா 
மாங்கனி பயில்வாய 
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் 
அன்னஞ்சேர்ந் தழகாய 
குலவு நீள்வயல் கயலுகள் கோட்^ர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை 
நீடிய புகழாரே. 

2-109-2652:
உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் 
அன்பராம் அடியார்கள் 
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு 
பத்திசெய் தெத்திசையுங் 
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்^ர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் 
அவனருள் பெறலாமே. 

2-109-2653:
துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் 
துன்னெருக் கார்வன்னி 
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் 
புலியுரி யுடையாடை 
கொன்றை பொன்னென மலர்தரு கோட்^ர்நற் 
கொழுந்தேயென் றெழுவாரை 
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை 
ஏதம்வந் தடையாவே. 

2-109-2654:
மாட மாளிகை கோபுரங் கூடங்கள் 
மணியரங் கணிசாலை 
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் 
பரிசொடு பயில்வாய 
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்^ர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
கேட தொன்றில ராகிநல் லுலகினிற் 
கெழுவுவர் புகழாலே. 

2-109-2655:
ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை 
யெடுத்தலும் உமையஞ்சிச் 
சுளிய வு[ன்றலுஞ் சோர்ந்திட வாளொடு 
நாளவற் கருள்செய்த 
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்^ர்நற் 
கொழுந்தினைத் தொழுவார்கள் 
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் 
தவமுடை யவர்தாமே. 

2-109-2656:
பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும் 
முத்தினைப் பவளத்தைத் 
தேடி மாலயன் காணவொண் ணாதவத் 
திருவினைத் தெரிவைமார் 
கூடி யாடவர் கைதொழு கோட்^ர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் 
நிகழ்தரு புகழாரே. 

2-109-2657:
கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்^ர்நற் 
கொழுந்தினைச் செழுந்திரளைப் 
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா 
மெய்யன்நல் லருளென்றுங் 
காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் 
டாக்கர்சொற் கருதாதே 
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர் 
பெருமையைப் பெறுவாரே. 

2-109-2658:
பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் 
பாவையோ டுருவாருங் 
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்^ர்நற் 
கொழுந்தினைச் செழும்பவளம் 
வந்து லாவிய காழியுள் ஞானசம் 
பந்தன்வாய்ந் துரைசெய்த 
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர் 
தாங்குவர் புகழாலே.