HolyIndia.Org

திருஇடும்பாவனம் ஆலய தேவாரம்

திருஇடும்பாவனம் ஆலயம்
1-17-174:
மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த் 
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ளுந்திச் 
சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில் 
இனமாதவர் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 

1-17-175:
மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி 
நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புகழ் ஒளிசேர் 
கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில் 
இலையார்தரு பொழில்சூழ்வரும் இடும்பாவன மிதுவே. 

1-17-176:
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழும் எந்தை 
ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர் நலமார் 
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில் 
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவன மிதுவே. 

1-17-177:
பொழிலார்தரு குலைவாழைகள் எழிலார்திகழ் போழ்தில் 
தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில் 
குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில் 
எழிலார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 

1-17-178:
பந்தார்விரல் உமையாளொரு பங்காகங்கை முடிமேல் 
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல் 
கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில் 
எந்தாயென இருந்தானிடம் இடும்பாவன மிதுவே. 

1-17-179:
நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி 
அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக் 
குறிநீர்மையர் (மூ)குணமார்தரு மணமார்தரு குன்றில் 
எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவன மிதுவே. 
(மூ) குளமார்தரும் என்றும் பாடம். 

1-17-180:
நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம் 
பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக் 
கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி 
ஏறேறிய இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 

1-17-181:
தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை 
ஓராதெடுத் தார்த்தான்முடி யொருப/தவை நெரித்துக் 
கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த 
ஏரார்தரும் இறைவர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 

1-17-182:
பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த் 
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதூய் 
மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த 
இருளார்தரு கண்டர்க்கிடம் இடும்பாவன மிதுவே. 

1-17-183:
தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்(மூ)சம ணடப்பர் 
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்பிட்டுழல் வாரும் 
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல் 
இடுக்கண்பல களைவானிடம் இடும்பாவன மிதுவே. 10 
(மூ) சமண்டப்பர் என்றும் பாடம். 

1-17-184:
கொடியார்நெடு மாடக்குன்ற @ரிற்கரைக் கோல 
இடியார்கட லடிவீழ்தரும் இடும்பாவனத் திறையை 
அடியாயுமந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன் 
படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே.