HolyIndia.Org

மயிலாடுதுறை ஆலய தேவாரம்

மயிலாடுதுறை ஆலயம்
1-38-404:
கரவின் றிநன்மா மலர்கொண்டே 
இரவும் பகலுந் தொழுவார்கள் 
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ் 
வரமா மயிலா டுதுறையே. 

1-38-405:
உரவெங் கரியின் னுரிபோர்த்த 
பரமன் னுறையும் பதியென்பர் 
குரவஞ் சுரபுன் னையும்வன்னி 
மருவும் மயிலா டுதுறையே. 

1-38-406:
ஊனத் திருள்நீங் கிடவேண்டில் 
ஞானப் பொருள்கொண் டடிபேணுந் 
தேனொத் தினியா னமருஞ்சேர் 
வானம் மயிலா டுதுறையே. 

1-38-407:
அஞ்சொண் புலனும் மவைசெற்ற 
மஞ்சன் மயிலா டுதுறையை 
நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல் 
துஞ்சும் பிணியா யினதானே. 

1-38-408:
(மூ)தணியார் மதிசெஞ் சடையான்றன் 
அணியார்ந் தவருக் கருளென்றும் 
பிணியா யினதீர்த் தருள்செய்யும் 
மணியான் மயிலா டுதுறையே. 
(மூ) கணியார் என்றும் பாடம். 

1-38-409:
தொண்ட ரிசைபா டியுங்கூடிக் 
கண்டு துதிசெய் பவனுராம் 
பண்டும் பலவே தியரோத 
வண்டார் மயிலா டுதுறையே. 

1-38-410:
அணங்கோ டொருபா கமமர்ந்து 
இணங்கி யருள்செய் தவனுராம் 
நுணங்கும் புரிநு லர்கள்கூடி 
வணங்கும் மயிலா டுதுறையே. 

1-38-411:
சிரங்கை யினிலேந் தியிரந்த 
பரங்கொள் பரமேட் டிவரையால் 
அரங்கவ் வரக்கன் வலிசெற்ற 
வரங்கொள் மயிலா டுதுறையே. 

1-38-412:
ஞாலத் தைநுகர்ந் தவன்றானுங் 
கோலத் தயனும் மறியாத 
சீலத் தவனுர் சிலர்கூடி 
மாலைத் தீர்மயிலா டுதுறையே. 

1-38-413:
நின்றுண் சமணும் நெடுந்தேரர் 
ஒன்றும் மறியா மையுயர்ந்த 
வென்றி யருளா னவனுராம் 
மன்றன் மயிலா டுதுறையே. 

1-38-414:
நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன் 
மயல்தீர் மயிலா டுதுறைமேல் 
செயலா லுரைசெய் தனபத்தும் 
உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே. 

3-70-3548:
ஏனவெயி றாடரவோ டென்புவரி யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே. 

3-70-3549:
அந்தண்மதி செஞ்சடையர் அங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்
எந்தம்அடி கட்கினிய தானமது வேண்டில்எழி லார்பதியதாங்
கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே. 

3-70-3550:
தோளின்மிசை வரியரவம் நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையும் முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமணம் நாறுமயி லாடுதுறையே. 

3-70-3551:
ஏதமிலர் அரியமறை மலையர்மக ளாகியஇ லங்குநுதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாங்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளான்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே. 

3-70-3552:
பூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறும் நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாங்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே. 

3-70-3553:
கடந்திகழ் கருங்களி றுரித்துமையும் அஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழும் மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாந்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக நாறுமயி லாடுதுறையே. 

3-70-3554:
அவ்வதிசை யாரும்அடி யாருமுள ராகஅருள் செய்தவர்கள்மேல்
எவ்வமற வைகலும் இரங்கியெரி யாடுமெம தீசனிடமாங்
கவ்வையொடு காவிரிக லந்துவரு தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவிம யங்கிமணம் நாறுமயி லாடுதுறையே. 

3-70-3555:
இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினோ டிருபதுதோள் நெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ ரிருந்தவிடம் வினவுதிர்களேற்
கலங்கல்நுரை யுந்தியெதிர் வந்தகயம் மூழ்கிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரிநி ரந்துபொழி கின்றமயி லாடுதுறையே. 

3-70-3556:
ஒண்டிறலின் நான்முகனும் மாலுமிக நேடியுண ராதவகையால்
அண்டமுற அங்கியுரு வாகிமிக நீண்டஅர னாரதிடமாங்
கெண்டையிரை கொண்டுகெளி றாருடனி ருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டல்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே. 

3-70-3557:
மிண்டுதிறல் அமணரொடு சாக்கியரும் அலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை கிளைக்கமது வந்தொழுகு சோலைமயி லாடுதுறையே. 

3-70-3558:
நிணந்தரும யானநில வானமதி யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம் பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய் வார்பெறுவர் பொன்னுலகமே. 

5-39-5615:
கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளை
உள்ளம் உள்கி யுரைக்குந் திருப்பெயர்
வள்ளல் மாமயி லாடு துறையுறை
வெள்ளந் தாங்கு சடையனை வேண்டியே. 

5-39-5616:
சித்தந் தேறுஞ் செறிவளை சிக்கெனும்
பச்சை தீருமென் பைங்கொடி பான்மதி
வைத்த மாமயி லாடு துறையரன்
கொத்தி னிற்பொலி கொன்றை கொடுக்கிலே. 

5-39-5617:
அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையுங்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம்
வண்டு சேர்மயி லாடு துறையரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே. 

5-39-5618:
வெஞ்சி னக்கடுங் காலன் விரைகிலான்
அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொ லாளுமை பங்கன் அருளிலே. 

5-39-5619:
குறைவி லோங்கொடு மானிட வாழ்க்கையாற்
கறைநி லாவிய கண்டனெண் டோ ளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழ லேத்தி யிருக்கிலே. 

5-39-5620:
நிலைமை சொல்லுநெஞ் சேதவ மென்செய்தாய்
கலைக ளாயவல் லான்கயி லாயநன்
மலையன் மாமயி லாடு துறையன்நம்
தலையின் மேலும் மனத்துளுந் தங்கவே. 

5-39-5621:
நீற்றி னான்நிமிர் புன்சடை யான்விடை
ஏற்றி னான்நமை யாளுடை யான்புலன்
மாற்றி னான்மயி லாடு துறையென்று
போற்று வார்க்குமுண் டோ புவி வாழ்க்கையே. 

5-39-5622:
கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமுந்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நுலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே. 

5-39-5623:
பணங்கொ ளாடர வல்குற் பகீரதி
மணங்கொ ளச்சடை வைத்த மறையவன்
வணங்கு மாமயி லாடு துறையரன்
அணங்கோர் பால்கொண்ட கோலம் அழகிதே. 

5-39-5624:
நீணி லாவர வச்சடை நேசனைப்
பேணி லாதவர் பேதுற வோட்டினோம்
வாணி லாமயி லாடு துறைதனைக்
காணி லார்க்குங் கடுந்துய ரில்லையே. 

5-39-5625:
பருத்த தோளும் முடியும் பொடிபட
இருத்தி னானவன் இன்னிசை கேட்டலும்
வரத்தி னான்மயி லாடு துறைதொழுங்
கரத்தி னார்வினைக் கட்டறுங் காண்மினே.